For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 4 பழங்கள் உங்க தைராய்டு சுரப்பியை சரியா செயல்பட வைத்து உங்களை பல நோய்களில் இருந்து காப்பாற்றும்...!

|

நவீன கால உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம் பல உடல்சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது. இது கடந்த முப்பது ஆண்டுகளில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தீவிரமாக உயர்ந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று தைராய்டு பிரச்சினையாகும்.

தைராய்டால் பாதிக்கப்டுவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதற்கு பல வெளிப்புற பிரச்சினைகள் காரணமாக இருந்தாலும் நம்முடைய வாழ்க்கைமுறை மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்நிலையில் சில உணவுகள் இதன் பாதிப்புகளை குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைராய்டு சுரப்பி என்றால் என்ன?

தைராய்டு சுரப்பி என்றால் என்ன?

தைராய்டு ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும், இது கீழ் கழுத்தின் நடுவில் உள்ளது. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், அது நம் உடலில் பல முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோன்களை உருவாக்குகிறது, இது வளர்ச்சி, செல் பழுது மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்களின் அளவின் எந்த ஏற்றத்தாழ்வும் சோர்வு, முடி உதிர்தல், எடை அதிகரிப்பு, குளிர் உணர்வு மற்றும் மனச்சோர்வு போன்ற பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

தைராய்டு சுரப்பிக்கும் உங்கள் உணவிற்கும் உள்ள தொடர்பு

தைராய்டு சுரப்பிக்கும் உங்கள் உணவிற்கும் உள்ள தொடர்பு

தைராய்டு நோய்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன - ஹைப்போ தைராய்டிசம் (குறைவான ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன) மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் (அதிக ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன). இரண்டு நிலைகளும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கும் பல்வேறு நோய்களால் ஏற்படுகின்றன. தைராய்டு நோயின் அறிகுறிகளை நிர்வகிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சத்தான மற்றும் நன்கு சீரான உணவு தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவாது, ஆனால் சரியான மருந்துகளுடன் இணைந்தால் அது அறிகுறிகளைக் குறைக்கும். அயோடின், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அறிகுறிகளைக் குறைக்க உதவும். உங்கள் உணவில் இருக்க வேண்டிய நான்கு பழங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும் மற்றும் உலகளவில் மிகவும் பிரபலமானது. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம், உங்கள் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கலாம் மற்றும் உங்கள் தைராய்டு சுரப்பியை வேலை செய்யும் நிலையில் வைத்திருக்கலாம். தைராய்டு சுரப்பி நன்றாக செயல்பட உதவும் ஆப்பிள் உங்கள் உடலில் நச்சுத்தன்மையை நீக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிள்களும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பெர்ரீஸ்

பெர்ரீஸ்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், தைராய்டு உறுப்புகளுக்கு பெர்ரி சிறந்தது. அவை தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டவும், சீராக செயல்படவும் உதவுகின்றன. பெர்ரிகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. நீங்கள் நீரிழிவு மற்றும் எடை அதிகரிப்பு போன்ற தைராய்டு நோயின் போது ஏற்படும் பொதுவான இரண்டு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், பெர்ரி பழங்கள் சிறப்பான தேர்வாகும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆரஞ்சு, ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, உங்கள் செல்களை மேலும் சேதத்திலிருந்து பாதுகாக்கும். ஃப்ரீ ரேடிக்கல்கள் தைராய்டு சுரப்பியில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் அதன் செயல்பாட்டை பாதிக்கும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது, கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்கிறது, தோல் சேதத்தை தடுக்கிறது மற்றும் காயங்களை ஆற்ற உதவுகிறது.

அன்னாசி

அன்னாசி

அன்னாசிப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு உள்ளது, இந்த இரண்டு சத்துக்களும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து நம் உடலைப் பாதுகாக்கும். இந்த முட்கள் நிறைந்த பழத்தில் வைட்டமின் பி உள்ளது, இது தைராய்டின் அறிகுறிகளில் ஒன்றான சோர்வை வெல்ல உதவும். அன்னாசிப்பழம் சாப்பிடுவது புற்றுநோய் மற்றும் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தைராய்டு சுரப்பியின் செயல்திறனைப் பொறுத்தவரை, கோயிட்ரோஜன்கள் உள்ள சில உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். இந்த வகையான உணவுகளை அளவாக சாப்பிட வேண்டும். இதுதவிர, பதப்படுத்தப்பட்ட உணவும் குறைவான அளவில் எடுக்கப்பட வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்: கேக், குக்கீகள், சிப்ஸ்

சோயா அடிப்படையிலான உணவுகள்: டோஃபு, டெம்பே, எடமாம் பீன்ஸ், சோயா பால் போன்றவை.

சில பழங்கள்: பீச், பேரீச்சம்பழம்

பானங்கள்: காபி, கிரீன் டீ மற்றும் ஆல்கஹால்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Healthy Fruits for Thyroid Patients in Tamil

Check out the healthy fruits for thyroid patients.