Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
மழைக்காலத்தில் கட்டாயம் குடிக்க வேண்டிய பானங்கள்!
அனைத்து பருவ காலத்திலும் நாம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்தால், அது பருவகால நோய்த்தொற்றுக்களை தடுக்கும்.
உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இது தாகத்தை தணிக்க மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட வைக்கும். ஆனால் மழைக்காலம் என்று வரும் போது, நம் அனைவரது மனதிலும் நீரேற்றம் குறித்து நினைக்கவே மாட்டோம். ஏனெனில் மழைக்காலத்தில் காலநிலை ஈரப்பதமாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதால், தாகம் அதிகம் எடுக்காது.

ஆனால் அனைத்து பருவ காலத்திலும் நாம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்தால், அது பருவகால நோய்த்தொற்றுக்களை தடுக்கும். அதோடு உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொண்டால், உடலின் ஆற்றல் சிறப்பாக இருக்கும் மற்றும் மெட்டபாலிசமும் மேம்படும்.
அதற்கு வெறும் நீரை மட்டும் குடிக்க வேண்டும் என்பதில்லை. ஒருசில பானங்களையும் குடிக்கலாம். தண்ணீர் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும் அற்புதமான பானம் என்றாலும், மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பருவகால நோய்த்தொற்றுக்களை அகற்றவும் ஆரோக்கியமான ஒருசில பானங்களைத் தேர்ந்தெடுத்து அருந்த வேண்டும். கீழே அந்த ஆரோக்கிய பானங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ்
காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, தேன் கலந்து குடிப்பது சுவையாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிகவும் எளிய வழிகளுள் ஒன்றாகும். மேலும் இந்த மாதிரி தினமும் குடித்து வந்தால், அது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பெர்ரி ஸ்மூத்தி
பெர்ரி பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதால், பெர்ரி பழங்களைக் கொண்டு ஒரு ஸ்மூத்தி தயாரித்து காலையில் குடிப்பது மிகவும் நல்லது. இந்த ஸ்மூத்தி உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக செயல்படவும் உதவுகிறது.

இளநீர்
இளநீர் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பானங்களுள் ஒன்றாகும். இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ம்ற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைக்கிறது. அதோடு இது செரிமானம் சிறப்பாக நடைபெற தூண்டுகிறது.

எலுமிச்சை மற்றும் புதினா நீர்
ஈரப்பதமான காலநிலை மிகவும் தொந்தரவாக இருக்கலாம். மழைக்காலத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் எலுமிச்சை புதினா நீர் பெரிதும் உதவியாக இருக்கும். அதோடு இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், உடலில் உள்ள கொழுப்புக்களைப் பராமரிக்க உதவி புரியும்.

தேன் மற்றும் பட்டை நீர்
வெதுவெதுப்பான நீரில் பட்டையை சேர்த்து ஊற வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து குடித்தால், அது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைக்கும். அதோடு, இது நாள் முழுவதும் சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான ஆற்றலை வழங்கும் மற்றும் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

மோர்
மோரில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை மேம்படுத்த உதவும். மேலும் இதில் கலோரிகள் குறைவு. எனவே செரிமான பிரச்சனைகளை அடிக்கடி சந்திப்பவர்கள், மழைக்காலத்தில் மோர் குடித்து வந்தால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.



Click it and Unblock the Notifications
