Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
கண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள்? உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...!
நம் கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு செயல்தான் கண்களை அடிக்கடி தேய்ப்பதாகும். கண்களில் அரிப்பு ஏற்படும்போது கண்களை அழுத்தி தேய்ப்பது உங்களுக்கு தற்காலிக நிவாரணத்தை வழங்கலாம்.
மனித உடலில் கண்கள் என்பது மிகவும் முக்கியமான ஒரு உறுப்பாகும். நாம் இந்த உலகத்தை கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோம். அதில் ஏற்படும் சிறிய பிரச்சினையும் நமது அன்றாட செயல்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நாம் செய்யும் சில செயல்களே நமது கண்களுக்கு ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது.

அப்படி நம் கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு செயல்தான் கண்களை அடிக்கடி தேய்ப்பதாகும். கண்களில் அரிப்பு ஏற்படும்போது கண்களை அழுத்தி தேய்ப்பது உங்களுக்கு தற்காலிக நிவாரணத்தை வழங்கலாம். ஆனால் அது உங்கள் கண்ணின் பல பாகங்களின் மீது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் கண்களை தேய்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கடுமையான கண் நோய் ஏற்படும்
கண்ணை தொடர்ந்து தேய்த்தல் கார்னியா பலவீனமடைவதற்கும் கெரடோகோனஸ் எனப்படும் கார்னியாவை சிதைப்பதற்கும் வழிவகுக்கும். கார்னியல் திசுக்களை தொடர்ந்து தேய்த்தால் அது மெல்லியதாகி மேலும் கூம்பு வடிவமாக மாறும். இந்த பாதிப்பு மோசமானால் உங்களுக்கு ஒரு கார்னியல் மாற்று தேவைப்படலாம்.

கார்னியாவை கீற வாய்ப்புள்ளது
உங்கள் கண் இமைகளில் இருக்கும் தூசிகள் உங்கள் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம், இதனால் உங்களுக்கு கண்ணை தேய்க்கத் தூண்டும். ஆனால் அது உங்கள் நிலையை மேலும் மோசமாக்கலாம். இதனால் உங்கள் கார்னியாவை நீங்களே சேதப்படுத்தலாம், இது சில நாட்களில் குணமாகிவிடும். ஆனால் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் புண் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

கண் அழுத்த நோய்
இந்த மோசமான நிலை ஏற்கனவே உங்களுக்கு இருந்தால் கண்களை தேய்ப்பது இந்த நிலையை மேலும் மோசமாக்கும். உங்கள் கண்களின் முன்னால் திரவம் கட்டிக்கொள்வதால் கண் அழுத்த நோய் ஏற்படுகிறது. இது பார்வை நரம்பை சேதப்படுத்தும் மற்றும் இறுதியில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும். கண்களைத் தேய்த்தல் அவர்களுக்கு மீண்டும் இரத்த ஓட்டத்தை சீர்குலைத்து, நரம்பு பாதிப்பு மற்றும் பார்வை நிரந்தரமாக இழக்க நேரிடும்.

உங்களின் கிட்டப்பார்வையை மோசமாக்கும்
மயோபியா என்பது கிட்டப்பார்வை உள்ளதாகும், கண்களைத் தேய்ப்பது இந்த நிலையை மேலும் மோசமாக்கும். கிட்டதட்ட 18 மில்லியன் மக்கள் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகிறது. கண்களை தொடர்ந்து தேய்க்கும் போது இந்த நிலை மிகவும் மோசமாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தொற்றுநோய் உண்டாகலாம்
உங்கள் கைகளை எவ்வளவு அடிக்கடி கழுவினாலும் அல்லது சுத்தப்படுத்தினாலும் தினந்தோறும் உங்கள் கைகள் கோடிக்கணக்கான கிருமிகளால் தாக்கப்படலாம். உங்கள் கண்களை கைகளால் தொடுவது பாக்டீரியாக்களை கண்களுக்கு பரப்பும், இது கான்ஜுண்ட்டிவிடிஸ் அல்லது கண்களில் இளஞ்சிவப்பு நிறத்தை ஏற்படுத்தும்.

கண் இமைகளில் தளர்வு
கண்களைத் தேய்ப்பது உங்கள் புருவங்களை விட கண் விழியை அதிகமாக காயப்படுத்தும். இதனால் கண் இமை காலப்போக்கில் நெகிழ்ச்சியை இழக்கக்கூடும். கண்களின் இமைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தாத அளவிற்கு கண்களை தேய்க்கவும்.



Click it and Unblock the Notifications