Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்: அதன் அறிகுறிகள் என்ன மற்றும் அதை தடுப்பது எப்படி?
H3N2 வைரஸ் தான் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றிக் காரணமாக நிறைய பேர் தற்போது காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, உடல் வலி, தொண்டை வலி போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
H3N2 Influenza Cases Rises In India: கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நிறைய பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் வழக்கத்தை விட அதிகளவில் காய்ச்சல் வழக்குகள் பதிவாகி வருகின்றன. தற்போது பரவும் காய்ச்சலானது இன்ப்ளூயன்சா ஏ வகை வைரஸின் துணை வகையான H3N2 வைரஸ் என்று ஐசிஎம்ஆர் ஆகும். இந்த H3N2 இன்ப்ளூயன்ஸா 'ஹாங் காங் ப்ளூ' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சுருக்கமாக புரியும் படி கூற வேண்டுமானால், பன்றி காய்ச்சலுக்கு காரணமான H1N1 வைரஸின் மாறுபாடான H3N2 வைரஸ் தான் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றிக் காரணமாக நிறைய பேர் தற்போது காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, உடல் வலி, தொண்டை வலி போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்போது H3N2 வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன, இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது மற்றும் யாருக்கெல்லாம் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என்பன பற்றி காண்போம்.

அறிகுறிகள்
* அதிகப்படியான காய்ச்சல் (101 டிகிரிக்கு மேல் இருப்பது)
* தொண்டை வலி
* வறட்டு இருமல்
* வாந்தி/குமட்டல்
* உடல் சோர்வு
* உடல் வலி
* தலைவலி போன்றவை H3N2 வைரஸ் தொற்றின் அறிகுறிகளாகும்.

அபாய அறிகுறிகள்
H3N2 வைரஸ் தொற்று தீவிரமாக இருந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன், பின்வரும் அறிகுறிகளும் இருக்கும். அவை
* மூச்சுத் திணறல்
* மூச்சு விடுவதில் சிரமம்
* எதையும் சாப்பிட முடியாமல் இருப்பது
* நெஞ்சு வலி
* வலிப்பு
இந்த அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் தொற்றின் தீவிரத்தன்மையைக் குறிக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
செய்ய வேண்டியவைகள்:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால், பின்வரும் விஷயங்களை நினைவில் கொண்டு பின்பற்ற வேண்டும்.
* கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* வெளியே செல்லும் போது ஃபேஸ் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். முடிந்தவரை கூட்டமான பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
* தேவையில்லாமல் வாய் மற்றும் மூக்கு பகுதியைத் தொடக்கூடாது.
* இருமல் மற்றும் தும்மலின் போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை மூடிக் கொள்ளவும்.
* நிறைய நீரைக் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும்.
* காய்ச்சல், இருமல் மற்றும் உடல் வலி இருந்தால், பாராசிட்டமாலை எடுக்கலாம்.

செய்யக்கூடாதவை:
* கைக்குலுக்கலைத் தவிர்க்க வேண்டும்.
* பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள்.
* சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும்.
* முக்கியமாக ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுக்கக்கூடாது.

யாருக்கெல்லாம் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது?
ஐசிஎம்ஆர்-ன் கூற்றுப்படி, இந்த H3N2 வைரஸ் தொற்றானது வயதானவர்கள், குழந்தைகள், நோயெதிர்ப்பு சக்தியைக் குறைவாக கொண்டவர்கள் மற்றும் இணை நோய்களைக் கொண்டவர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இவர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தொற்றில் இருந்து மீள்வது எப்படி?
* காய்ச்சலைக் குறைக்கும் பாராசிட்டமால் மருந்துகளை எடுக்க வேண்டும்.
* காய்ச்சல் அதிகமாக இருந்தால், வலிப்பு வராமல் இருக்க, குளிர்ந்த நீரில் நனைத்த துணியைக் கொண்டு ஒத்தி எடுக்க வேண்டும்.
* நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்.
* முக்கியமாக நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
இந்த H3N2 வைரஸ் தொற்று கடுமையாக இருந்தால் வைரஸ் கொல்லி மருந்துகளை மருத்துவர்கள் கொடுப்பார்கள். அதுவே இந்த தொற்றில் இருந்து விடுவிக்கும். இது வைரஸ் தொற்று என்பதால் பாக்டீரியாக்களை கொல்லும் ஆன்டி-பயாடிக் எடுப்பதால் எவ்வித பலனும் கிடைக்காது. முக்கியமாக இந்த வைரஸ் தொற்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்பதால் பயப்பட தேவையில்லை. இருப்பினும் கவனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications