Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
நீங்க அடிக்கடி சாப்பிடும் இந்த உணவுகள் உங்கள் சிறுநீர்ப்பைக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்தும் தெரியுமா?
நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நம்முடைய சிறுநீர்ப்பையை எச்சரிக்கையாக கையாள வேண்டியது அவசியமாகும்.
நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நம்முடைய சிறுநீர்ப்பையை எச்சரிக்கையாக கையாள வேண்டியது அவசியமாகும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அசௌகரியத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும். சிறுநீர்ப்பையின் தசைகள் திடீரென சுருங்கும்போது எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென சிறுநீர் கழிக்க வேண்டிய அவசரம் ஏற்படும்.

இதுபோன்ற சூழ்நிலையில் சிறுநீர்ப்பையில் சிறுநீர் குறைவாக இருந்தாலும் சிறுநீர் கழிக்க அவசரம் ஏற்படும். இதனால் நீங்கள் பலவித பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சினை ஏற்பட காரணம் நீங்கள் சாப்பிடும் சில உணவுகள்தான். இந்த பதிவில் உங்கள் நீங்கள் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் உங்கள் சிறுநீர்ப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும், எந்தெந்த உணவுகள் சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை மோசமாக்கும் என்று பார்க்கலாம்.

வாழைப்பழம்
பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும் வாழைப்பழம் உங்கள் சிறுநீர் பாதைக்கு சிறந்தது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது குடல் இயக்கங்களை எளிதாக்க உதவும். வாழைப்பழத்தை நீங்கள் எந்த வடிவில் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம்.

நட்ஸ்
முந்திரி, பாதாம் மற்றும் வேர்க்கடலை ஆகியவை உங்கள் சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை கையாளுவதில் சிறப்பான பங்கு வகிக்கிறது. இந்த ஆரோக்கியமான சிற்றுண்டிகள் புரதச்சத்தால் நிறைந்தவை . நார்ச்சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அவை பல நன்மைகளை வழங்குகிறது.

வெள்ளரிக்காய்
கோடை காலம் வேறு தொடங்கிவிட்டது, வெள்ளரிக்காய் சாப்பிட இதுதான் சரியான நேரம். ஆக்ஸிஜனேற்றிகள், ஃபைபர் மற்றும் வைட்டமின் கே ஆகியவை அதிகமாக இருக்கும் வெள்ளரிக்காய் சிறுநீர்ப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க பழங்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்றாகும். ஆரோக்கியமான சிறுநீர்ப்பைக்கு தினமும் ஒரு கிண்ணம் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்.

பருப்புகள்
நார்ச்சத்து அதிகமுள்ள பருப்புகள் உங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அவை பாலிபினால்கள் போன்ற சேர்மங்களால் நிரம்பியுள்ளன, அவை சிறுநீர்ப்பைக்கு மட்டுமின்றி உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை மோசமாக்கும் உணவுகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

காரமான உணவுகள்
காரமான உணவுகள் உங்கள் சிறுநீர்ப்பை பிரச்சினையை மோசமாக்கும். எனவே, அதைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. மிளகு அல்லது காரமான உணவை சாப்பிடுவது உங்கள் சிறுநீர்ப்பையின் புறணிக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

காபி
காபி ஒரு டையூரிடிக் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை ஏற்படுத்தும் பொருளாகும். எனவே சிறுநீர்ப்பை பிரச்சினைகள் இருந்தால் உங்கள் காஃபின் உட்கொள்ளலைக் குறைக்கவும். காஃபின் உட்கொள்வதால் உங்கள் சிறுநீரகம் அதிக சிறுநீரை உண்டாக்குகிறது, இதன் விளைவாக உங்கள் சிறுநீர்ப்பை அதிக உணர்திறன் பெறுகிறது.

சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, தக்காளி, நெல்லிக்காய் போன்ற சிட்ரஸ் பழங்கள் உங்கள் உணவில் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது. சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை மற்றும் சிறுநீர் பாதையில் எரிச்சலூட்டுகின்றன. அவுரிநெல்லிகள் மற்றும் பேரீச்சம்பழம் போன்ற குறைந்த அமில பழங்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

செயற்கை சர்க்கரை
ஆமாம், செயற்கை சர்க்கரை அதிகப்படியான சிறுநீர்ப்பையின் அறிகுறிகளையும் மோசமாக்கும். அஸ்பார்டேம், சக்கரின் மற்றும் பிற செயற்கை இனிப்புகளை உட்கொள்ள வேண்டாம். எந்தவொரு தயாரிப்புகளையும் வாங்குவதற்கு முன் லேபிள்களைப் படியுங்கள். சிலருக்கு தேன் கூட சிறுநீர்ப்பை பிரச்சினையை ஏற்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications