Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
குறட்டைக்கு நிரந்தரமாக குட்பை சொல்வதற்கு தூங்கும் முன் இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நிம்மதியான உறக்கம் என்பது மிகவும் முக்கியமானது. தூங்கும்போது குறட்டை விடுவது உங்கள் அருகில் தூங்குபவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நிம்மதியான உறக்கம் என்பது மிகவும் முக்கியமானது. தூங்கும்போது குறட்டை விடுவது உங்கள் அருகில் தூங்குபவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கிறது. இதன்மூலம் மறைமுகமாக அவர்களின் ஆரோக்கிய கேட்டிற்கு நீங்கள் காரணமாகிறீர்கள். அதிர்ஷ்டவசமாக உங்களது குறட்டை எவ்வளவு கொடுமையானதாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்வதில்லை, உங்கள் அருகில் இருப்பவர்களே அதற்கு பலியாகிறார்கள்.

முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் குறட்டை விடுவது ஒரு நோயல்ல. குறட்டை ஏற்படுவதற்கு உடல் பருமன், தூக்கக் கோளாறுகள் மற்றும் சுவாசப்பாதை சிக்கல்கள் என பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். சரியான வீட்டு வைத்தியங்கள் மூலம் இந்த பிரச்சினையை நீங்கள் எளிதில் குணப்படுத்தலாம். இந்த பிரச்சினையை போக்க உங்களுக்குத் தேவையெல்லாம் கொஞ்சம் பொறுமையும், முயற்சியும்தான். இந்த பதிவில் குறட்டை பிரச்சினைக்கு குட்பை சொல்ல உதவும் பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தேன்
தேன் ஒரு வலுவான ஆண்டிமைக்ரோபிக் ஆகும், இது அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. தேன் நாசிப் பாதையைத் திறந்து, காற்றை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கிறது.

புதினா
இந்த மூலிகை இலை கிட்டதட்ட அனைவரின் இல்லத்திலும் இருப்பதாகும். இந்த இலையில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் நிரம்பியுள்ளது, இது மூக்கு மற்றும் தொண்டைக்குள் வீக்கத்தைக் குறைக்கிறது. புதினா டீயை படுக்கைக்கு முன் குடிப்பது அல்லது கொதிக்கும் நீரில் சில இலைகளை போட்டு ஆவி பிடிப்பது உங்களுக்கும், உங்கள் அருகில் இருபவர்க்ளுக்கும் ஆறுதல் அளிக்கும்.

பூண்டு
பூண்டு பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருளாகும். இதில் சில அளவிற்கு அதிகமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதனால்தான், பொதுவான நோய்த்தொற்றுகளிலிருந்து விடுபட, மக்கள் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறார்கள். சிலர் குறட்டைவிடும் பழக்கத்தை போக்க இரவில் பச்சை பூண்டை சாப்பிடுவார்கள்.

சோயாபால்
குறட்டை விடுபவர்கள் பசும்பாலுக்கு பதிலாக சோயா பாலை உபயோகிக்கலாம். சில அலர்ஜி எதிர்வினைகள் நெரிசலை ஊக்குவிக்கின்றன, இது நாசி பாதைகளின் வீக்கத்திற்கு வழிவகுக்கும், எனவே லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்களிடம் குறட்டை விடும் பழக்கம் அதிகரிக்கிறது.

வெங்காயம்
வெங்காயம் ஒரு இன்றியமையாத சமையல் பொருள் என்பதை நாம் நன்கு அறிவோம்.வெங்காயத்தில் அத்தியாவசிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியிருப்பது மட்டுமின்றி, அவை உங்கள் நாசிப் பாதைகளை சுத்தம் செய்யக்கூடிய இயற்கையான டிகோங்கஸ்டெண்ட் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்கள் இரவு உணவில் சிறிது சமைத்த வெங்காயத்தைச் சேர்க்கவும், இது உங்கள் குறட்டையை குறைப்பதை நீங்களே உணரலாம்.

மீன்
மீனில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்களின் அதிக உள்ளடக்கம் நாசிப் பாதையைத் தடுக்கும் சளியின் உற்பத்தியை எதிர்த்துப் போராடுகிறது. சிவப்பு இறைச்சிக்கு பதிலாக இதனை உட்கொள்வது சிறந்த மாற்றாக இருக்கும்.

அன்னாசி
இந்த பழம் ஒரு இயற்கையான நெரிசல் நீக்கியாகும் மற்றும் மூக்கு மற்றும் தொண்டை அடைப்பை குணப்படுத்துகிறது. அன்னாசிப்பழம் எளிதில் ஜீரணமாகும், எனவே இரவு உணவுக்குப் பிறகு பயமின்றி சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications