Latest Updates
-
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும்
உங்களுக்கு மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க தினமும் நீங்க இந்த காய்கறிகள சாப்பிட்டா போதுமாம்...!
ப்ராக்கோலியை வேக வைத்து அடிக்கடி சாப்பிடுவது, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
நாம் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவுகள் நமக்கு பரிந்துரைக்கப்படுகிறன. ஒருவர் ஆரோக்கியமாக இருக்க அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். காய்கறிகளில் பச்சை இல்லை காய்கறிகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பச்சை இலை காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான ஃபோலேட் மற்றும் வைட்டமின்களான சி, ஈ மற்றும் கே மற்றும் நார்ச்சத்து போன்றவற்றை அதிகமாக இருக்கின்றன. இந்த காய்கறிகளில் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் மற்றும் குளுக்கோசினோலேட்டுகள் போன்றவைகளும் உள்ளன. இவை புற்றுநோய்க்கு எதிரான விளைவுகளைக் கொண்டுள்ளன.

புதிய ஆய்வு ஒன்றில், பச்சை இலை காய்கறிகளான ப்ராக்கோலி, முளைக்கட்டிய பிரஸ்ஸல்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை, இரத்த நாள நோய்களான மாரடைப்பு அல்லது பக்கவாத நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாக தெரிய வந்தது. ஒருவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் இரண்டுமே கொழுப்புக்களின் தேக்கம் மற்றும் இரத்த நாளங்களின் சுவர்களில் படியும் கால்சியம் படிவுகளால் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில காய்கறிகளை சாப்பிட வேண்டும். இக்கட்டுரையில் மாரடைப்டைத் தடுக்க உதவும் சில காய்கறிகளை பற்றி காணலாம்.

முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. குறிப்பாக சிவப்பு/ஊதா நிற முட்டைக்கோஸ் இதயத்திற்கு நல்லது. இந்த காய்கறி பீட்டா-கரோட்டீன், லுடின் மற்றும் பிற இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. இதனால், இது பெருந்தமனி தடிப்புக்களின் அபாயத்தைக் குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு முட்டைக்கோஸ் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால், இதய நோய்களை தடுக்க உதவுகிறது.

ப்ராக்கோலி
ப்ராக்கோலியை வேக வைத்து அடிக்கடி சாப்பிடுவது, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் ப்ராக்கோலி இதய நோயின் அபாயத்தைக் குறைப்பதோடு, வலிமையான எலும்புகளுக்கும், கண் பார்வையை மேம்படுத்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.

காலிஃப்ளவர்
100 கிராம் காலிஃப்ளவரில், 92 கிராம் நீர்ச்சத்து உள்ளது. ஆகவே இந்த காய்கறியை அதிகம் உணவில் சேர்க்கும் போது, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. மேலும் காலிஃப்ளவரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி வைரல் பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் போன்றவையும் நிறைந்துள்ளது.

பிரஸ்ஸல்ஸ் முளைகள்
உங்கள் உணவில் இந்த காய்கறிகளை அதிகம் சேர்ப்பதன் மூலம், எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது, சர்க்கரை நோய் நிர்வகிக்கப்படுகிறது, இதய நோய் மற்றும் புற்றுநோய்களின் அபாயம் குறைக்கப்படுகிறது. ஆகவே இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய இந்த காய்கறியை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். ஆதலால், இந்த காய்கறியை தினமும் சாப்பிட மறவாதீர்கள்.

காலே
காலே கீரை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி புரிந்து, இதய நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. உணவுப் பொருட்களிலேயே கேல் கீரையில் தான் வைட்டமின் கே அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து தான் இரத்தம் உறைதலில் ஈடுபடும் முக்கிய ஊட்டச்சத்தாகும். மேலும் இந்த கீரையில் உள்ள ஏராளமான உட்பொருட்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறதாக விலங்குகளின் மீதான ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.



Click it and Unblock the Notifications
