Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
இறால் ரொம்ப பிடிக்குமா? அப்ப அத இப்படி சாப்பிடுங்க.. உடம்பும் சீக்கிரம் குறையும்...
இறால்களில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது ஒருவரது எடை இழப்பு திட்டத்தில் சேர்ப்பதற்கு ஏற்ற ஒரு அற்புதமான உணவுப் பொருளாகும்.
கடல் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இது மிகவும் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதில் மற்ற கடல் உணவுகளைப் போல் நன்னீரில் இருந்து வரும் இறால்களிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் நன்னீரில் வளரும் இறால்கள் பொதுவாக கிடைக்கக்கூடிய இறால்களை விட பெரியதாகவும், மெல்லியதாகவும் இருக்கும். இதில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன.

இறால்கள் ஒரு சுவையான சிற்றுண்டியாக இருப்பதோடு, இதைக் கொண்டு பல அற்புதமான ருசியான சைடு டிஷ்களையும் தயாரிக்கலாம். இறால்களில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது ஒருவரது எடை இழப்பு திட்டத்தில் சேர்ப்பதற்கு ஏற்ற ஒரு அற்புதமான உணவுப் பொருளாகும். இப்போது இறால்கள் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவி புரிகின்றன என்பதை விரிவாக காண்போம்.

இறால் எப்படி எடையைக் குறைக்க உதவுகிறது?
இறால்கள் புரோட்டீன், வைட்டமின் டி, வைட்டமின் பி3 மற்றும் ஜிங்க் போன்றவை அதிகம் கொண்டதோடு, கார்போஹைட்ரேட் இல்லாததால், எடையைக் குறைக்க முயற்சிப்போருக்கு சிறந்த உணவு. மேலும் இதில் ஜிங்க் அதிகம் உள்ளதால், இது உடலில் லிப்டின் அளவை அதிகரிக்கும். லிப்டின் என்பது ஒரு ஹார்மோன். இது உடலில் கொழுப்புத் தேக்கம், பசியுணர்வு மற்றும் உடலின் ஆற்றல் போன்றவற்றை சீராக பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. உடலில் போதுமான அளவு லிப்டின் இல்லாவிட்டால் தான், உணவுகளின் மீது ஆசை அதிகரிக்கும் மற்றும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். அதோடு இதில் அதிகளவிலான அயோடின், உடலின் மெட்டபாலிச விகிதத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலில் அயோடின் குறைபாடு இருந்தால் தான், தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

இறாலில் உள்ள சத்துக்கள்
இறாலில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், பாபர, பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ போன்றவை உள்ளன. அதோடு இதில் வைட்டமின் பி12, வைட்டமின் பி6 மற்றும் நியாசின் போன்றவையும் குறிப்பிட்ட அளவில் நிறைந்துள்ளன. கூடுதலாக இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால், இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது.

புரோட்டீன் நிறைந்த இறால்
இறாலில் சிக்கன் அல்லது மாட்டிறைச்சிக்கு இணையான அளவு புரோட்டீன் நிறைந்துள்ளது. ஆனால் இறாலில் கலோரிகள் குறைவு. 2 அவுன்ஸ் இறாலில் சுமார் 12 கிராம் புரோட்டீன் உள்ளது. புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள் எடை இழப்பு மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. மேலும் புரோட்டீன் உங்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது மற்றும் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். இதனால் அதிக கலோரிகளை எரிக்கிறது மற்றும் நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும்.

இறாலில் கொழுப்பு குறைவு
இறால்கள் புரோட்டீனின் சிறந்த மூலமாக இருப்பதால், இறால்களில் கொழுப்பு குறைவாக உள்ளது. அதில் 2-அவுன்ஸ் இறாலில் 0.5 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. இறால்களில் அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளதால், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதிலும் நீங்கள் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயின், இறால்கள் கொழுப்பு குறைவான சிறந்த உணவாகும்.

கலோரி குறைவு
இறால்களில் கலோரிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. 100 கிராம் இறால்களில் 115 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே இறால் கலோரி குறைவான காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம்
இறால்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் வளமான அளவில் நிறைந்துள்ளன. இந்த கொழுப்பு அமிலங்களை தொடர்ச்சியாக ஒருவர் உணவில் சேர்த்து வந்தால், உடலினுள் உள்ள வீக்கம் குறையும் மற்றும் உடல் கொழுப்பும் குறையும்.

இறாலை எப்படி சமைத்து சாப்பிடுவது நல்லது?
இறால்கள் கொழுப்பு குறைவான உணவாக இருப்பதால், இதில் உள்ள சத்துக்களை பாதுகாக்கவும், அவற்றை முழுமையாக பெறுவதற்கும், ஆவியில் வேக வைத்தோ அல்லது க்ரில் செய்தோ சாப்பிடுவது நல்லது. மேலும் இறால்கள் விரைவில் வேகக்கூடியது என்பதால், க்ரில் செய்வதன் மூலம், இறாலில் உள்ள முழு சத்துக்களையும் பெறலாம்.



Click it and Unblock the Notifications
