Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
உங்க காதுக்குள்ள சத்தம் கேட்குதா? அப்ப இது ஆபத்தனா பிரச்சனையோட அறிகுறியா இருக்கலாமாம்...உஷார்!
சில நேரங்களில் உங்கள் காதின் நடுப்பகுதியில் உள்ள எலும்பின் அசாதாரண வளர்ச்சி காது கேளாமைக்கு வழிவகுக்கும். இந்த டின்னிடஸ் கவனிக்கப்பட வேண்டிய ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்
நம் உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களும் மிகவும் முக்கியமானது. அந்த வகையில், காதுகளின் செயல்பாடுகள் மிக அவசியமானது. இது நமக்கு கேட்கும் திறனை வழங்குகிறது. காதுகளில் ஏற்படும் பிரச்சனைகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது என்றார் உங்களுக்கு தெரியுமா? உங்கள் காதில் ஏதேனும் பிரச்சனையை நீங்கள் அனுபவித்தால், அது உங்கள் உடலில் உள்ள அபாயமான பிரச்சனைகளை குறிக்கிறது. ஆதலால், உங்கள் காதுகளில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், உடனே மருத்துவ உதவியை நாடுங்கள். பொதுவாக காதுகளில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். டின்னிடஸ் அல்லது காதிரைச்சல் ஒரு அறிகுறியாகும். இது மிகவும் சிக்கலான மற்றும் தீவிரமான அடிப்படை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, இந்த நிலையை விரைவில் கண்டறிவது நல்லது. காதில் உங்களுக்கு சத்தம் கேட்கிறதா? அவை என்ன உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

கட்டிகள்
உங்கள் காதுக்குள் கேட்கும் இரைச்சல் ஒலிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று மண்டையோட்டு கட்டியின் வளர்ச்சியாக இருக்கலாம். அகஸ்டிக் நியூரோமா என்பது காதுகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகளில் உருவாகும் தீங்கற்ற கட்டிகள் ஆகும். இந்த கட்டிகள் வளரும்போது அவை காதுக்குள் ஒலியை ஏற்படுத்துகிறது. சீர்குலைந்த சிக்னல்கள் மற்றும் இரத்த ஓட்டம் காரணமாக, ஒருவர் ஒலிக்கும் ஒலிகளைக் கேட்கலாம். இதை சமநிலைப்படுத்துவதில் சிரமம் இருக்கலாம். மேலும், இதனால் காது கேளாமை பிரச்சனையையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எலும்பு வளர்ச்சி
சில நேரங்களில் உங்கள் காதின் நடுப்பகுதியில் உள்ள எலும்பின் அசாதாரண வளர்ச்சி காது கேளாமைக்கு வழிவகுக்கும். இந்த டின்னிடஸ் கவனிக்கப்பட வேண்டிய ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். டின்னிடஸ் என்பது காதிரைச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலை உங்களுக்கு இருந்தால், உடனே நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

தமனிகள் அல்லது நரம்புகளின் கோளாறுகள்
ஒருவர் அடிக்கடி காதுக்குள் ஒலிக்கும் ஒலி பிரச்சனையை சந்தித்தால், இரத்த நாளங்களின் சுவர்களில் அதிகப்படியான அழுத்தத்தை செலுத்துவதால், அந்த நபருக்கு உயர் இரத்த அழுத்தம், இரத்த நாளங்கள் கடினப்படுத்துதல் மற்றும் பிளேக் போன்ற நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இரத்த நாளங்களின் வீக்கம், தமனி-சிரை குறைபாடுகள் அல்லது அனீரிசிம்களும் ஏற்படலாம்.

தைராய்டு கோளாறுகள் (ஹைப்போ தைராய்டிசம்)
ஹைப்பர் தைராய்டிசம் பிரச்சனை மிகவும் அரிதானது. இது செவிப்புல அமைப்பை பாதிக்கும் வாய்ப்புகள் குறைவு. இருப்பினும், தைராக்ஸின் செவிப்புல அமைப்பின் இயல்பான வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் உடல் தைராக்ஸின் தேவையான அளவை விட குறைவாக உற்பத்தி செய்யும் போது, அது கேட்கும் திறனையும் பாதிக்கிறது. ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 50% பேர் டின்னிடஸ் பிரச்சனையை அனுபவிப்பதாகவும், சரியான நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் கேட்கும் திறனை இழக்க நேரிடும் என்றும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறைந்த ஹீமோகுளோபின் அளவு
உடல் முழுவதும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை கொண்டு செல்ல இரும்புச்சத்து உதவுவதால், இரும்புச்சத்து குறைபாடு தமனிகளை கடினமாக பம்ப் செய்ய காரணமாகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இதயம் கடினமாக செயல்படுகிறது மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இதயத் துடிப்பைக் கேட்க முடியும். இவை பல்சடைல் டின்னிடஸ் என்று அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் இதயம் தொடர்பான நோய்களுக்கும் ஆளாகிறார்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications