For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! இந்த நோய்கள் தாக்கினால் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களுக்கு மரணம் ஏற்படுவது உறுதி...!

நமக்கு தெரியாத பல நோய்கள் நமக்கு உடனடியாக மரணத்தை ஏற்படுத்தக்கூடும். நமக்கு தெரிந்த சில சாதாரண நோய்கள் கூட குறிப்பிட்ட கட்டத்தை அடையும் போது அது உடனடி மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

|

இந்த உலகத்தில் நாளுக்கு நாள் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் பல நோய்கள் மரணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள் என்று நமக்கு அறிந்தவரை மாரடைப்பு, புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவை மட்டும்தான், ஆனால் நமக்கு தெரியாத பல ஆபத்தான நோய்கள் உள்ளது.

Diseases that can kill you in just one day

நமக்கு தெரியாத பல நோய்கள் நமக்கு உடனடியாக மரணத்தை ஏற்படுத்தக்கூடும். நமக்கு தெரிந்த சில சாதாரண நோய்கள் கூட குறிப்பிட்ட கட்டத்தை அடையும் போது அது உடனடி மரணத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் எந்தந்த நோய்கள் உங்களுக்கு ஒரே நாளில் மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 டெங்கு

டெங்கு

ஆம் டெங்குகாய்ச்சல் நீங்கள் நினைக்கும் அளவிற்கு சாதாரண நோய் அல்ல. வருடா வருடம் டெங்கு காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இதனை சரியான நேரத்தில் குணப்படுத்தா விட்டால் ஒரே நாளில் உங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல் வரக்கூடும், அதுமட்டுமின்றி உட்புற இரத்தக்கசிவு, ஒருவரின் சுவாச அமைப்பு என அனைத்தும் சிதைத்து உடனடி மரணத்தை ஏற்படுத்தும்.

 எபோலா

எபோலா

எபோலா ஒரு கொடிய நோயாகும், எபோலா நோய் இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை சிதைக்கும், இரத்தம் உறைவதைத் தடுக்கும், வைரஸ் தாக்கிய சில மணி நேரத்தில் இந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உட்புறத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, உடலுறுப்புகள் செயல் இழந்து, விரைவில் மரணம் ஏற்படும்.

 பபோனிக் பிளேக்

பபோனிக் பிளேக்

இது ஒழிக்கப்பட்ட நோய் என்று நம்பப்பட்டாலும், உலகின் சில பகுதிகளில் சமீபத்தில் புபோனிக் பிளேக் நோய் கண்டறியப்பட்டுள்ளது. பிளேக் நோயால் இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. இது நமது உடலின் உட்புற உறுப்புகளில் கொப்புளங்ளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால் ஒவ்வொரு உடலுறுப்பாக செயலிழந்து இறுதியில் இது சில மணி நேரத்தில் மரணத்தை ஏற்படுத்தும்.

MOST READ:சாஸ்திரங்களின் படி உங்களின் ஒவ்வொரு நாளையும் அதிர்ஷ்டமான நாளாக மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

என்டோவைரஸ் டி 68

என்டோவைரஸ் டி 68

என்டோவைரஸ் டி 68 என்பது உடல் திரவங்கள் வழியாக பரவும் வைரஸ் தொற்று ஆகும், இது பாதிக்கப்பட்டவரின் சுவாச மண்டலத்தை கடுமையாக பாதிக்கிறது, மேலும் பாதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் மரணத்தை ஏற்படுத்துகிறது.

சாகஸ் நோய்

சாகஸ் நோய்

சாகஸ் நோய் என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு அரிய நோயாகும், இது பாதிக்கப்பட்டவரின் இதயம் மற்றும் செரிமான அமைப்பு போன்ற உள் உறுப்புகளில் விரைவாக பெருகும். உடனடி மருதத்துவம் வழங்காவிட்டால் பாதிக்கப்பட்டவர் மாரடைப்பால் பாதிக்கப்படுவார்கள். இதனால் உடனடி மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.

காலரா

காலரா

காலரா என்பது மரணத்தை ஏற்படுத்தக் கூடிய மற்றொரு கொடிய நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் உடலில் இருக்கும் அனைத்து திரவங்களையும் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி மூலமாக வெளியேறிவிடுகிறது. இதனால் அவர்கள் உடலில் இருக்கும் நீர்சத்துக்கள் முழுமையாக வெளியேறிவிடும். இது அனைத்து உறுப்புகளையும் செயலிழக்க. வைக்கும். இதனால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.

MRSA தொற்று

MRSA தொற்று

MRSA தொற்றுநோய் பாதிக்கப்பட்ட நபரின் இரத்த அணுக்கள் மற்றும் நுரையீரல் திசுக்களை விரைவாக அழிக்கக்கூடும். எந்த மருத்துவ உதவியும் கிடைக்காத பட்சத்தில் பாதைக்கப்பட்டவர்கள் ஒரே நாளில் இறந்து விடுவார்கள்.

MOST READ:மூச்சை அடக்கும்போது உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

 பக்கவாதம்

பக்கவாதம்

பக்கவாதம் என்பது ஒரு பெருமூளை நோயாகும், இது உடலின் சில பாகங்களுக்கு இரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்வதை தடுக்கிறது. சில மூளையின் சில பாகங்களில் இரத்த உறைவு ஏற்படும். இதன் மோசமான நிலை என்னவெனில் இது உடனடி மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diseases that can drown you in just one day

Here we listing the life-threatening diseases that can kill you within a day.
Story first published: Thursday, August 1, 2019, 15:00 [IST]
Desktop Bottom Promotion