For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 வயதிற்கு மேலான ஆண்கள் கட்டாயம் இத செய்யணும்.. இல்லன்னா சீக்கிரம் மரணத்தை சந்திக்க வாய்ப்பிருக்கு!

ஆய்வுகள் பலவற்றில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகின்றன.

|

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 13 முதல் ஜூன் 19 வரை ஆண்களின் ஆரோக்கிய வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் ஆண்களை பாதிக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை கொண்டு வரவும், ஆண்களுக்கு ஏற்படக்கூடிய அல்லது வரக்கூடிய பிரச்சனைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும். ஆய்வுகள் பலவற்றில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகின்றன.

Diseases That All Men Face After The Age Of 30

இதய பிரச்சனைகள், புற்றுநோய், பக்கவாதம், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற ஆபத்தான நோய்களால் பெண்களை விட ஆண்கள் அதிகம் இறப்பதாக ஆண்கள் சுகாதார வலையமைப்பு தெரிவிக்கிறது. அதோடு ஆண்கள் பெரும்பாலும் தங்கள் உடலில் உள்ள நோய்கள் வெளிப்படுத்தும் அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இப்படி உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை புறக்கணிப்பதால், அது முற்றிய நிலையில் மருத்துவரை அணுகி, சரியான சிகிச்சை அளிக்கமுடியாமல் போகிறது.

மேலும் ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை கண்காணிப்பதிலும், கவனித்துக் கொள்வதிலும் கவனக்குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தான் பெண்களை விட ஆண்கள் இளம் வயதில் உயிரிழக்கின்றனர். இப்போது இளம் வயதிலேயே மரணம் ஏற்படாமல் இருக்க 30 வயதைத் தாண்டிய ஆண்களை அதிகம் தாக்கும் நோய்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய்

இதய நோய்

உலகளவில் ஆண்கள் மற்றும் பெண்களின் உயிரைப் பறிக்கும் முதன்மையான பிரச்சனை இதய நோய் என்றாலும், பெண்களை விட ஆண்கள் இருமடக்கு அதிகமாக இதய நோயால் இறக்கிறார்கள். சிடிசி-யின் கூற்றுப்படி, நான்கில் ஒரு ஆணுக்கு இதய நோய் உள்ளது. ஆகவே தான் இது ஆண்கள் அதிகம் இறப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே 30 வயதை எட்டிய ஆண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்துவதோடு, அவ்வப்போது இதய பரிசோதனைகளையும் செய்து பார்க்க வேண்டும்.

இதய நோய்

இதய நோய்

உலகளவில் ஆண்கள் மற்றும் பெண்களின் உயிரைப் பறிக்கும் முதன்மையான பிரச்சனை இதய நோய் என்றாலும், பெண்களை விட ஆண்கள் இருமடக்கு அதிகமாக இதய நோயால் இறக்கிறார்கள். சிடிசி-யின் கூற்றுப்படி, நான்கில் ஒரு ஆணுக்கு இதய நோய் உள்ளது. ஆகவே தான் இது ஆண்கள் அதிகம் இறப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே 30 வயதை எட்டிய ஆண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்துவதோடு, அவ்வப்போது இதய பரிசோதனைகளையும் செய்து பார்க்க வேண்டும்.

பக்கவாதம்

பக்கவாதம்

இதய நோய் மற்றும் அனைத்து வகையான புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, மரணத்தை ஏற்படுத்தும் மூன்றாவது முக்கிய காரணியாக இருப்பது பக்கவாதம். இந்த பக்கவாதம் பெண்களை விட ஆண்களுக்கு ஏற்படும் விகிதம் 1.25 மடங்கு அதிகமாகும்.

மன இறுக்கம்

மன இறுக்கம்

ஆய்வுகளின் படி, பெண்களுடன் ஒப்பிடுகயில் ஆண்கள் 4 மடங்கு அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மன இறுக்கமாகும். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அதிகமாக கூட இருக்கலாம். ஏனெனில் பெண்களை விட ஆண்கள் மன இறுக்கத்தின் அறிகுறிகளை வேறுபட்ட முறையில் உணரலாம்.

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்களைத் தாக்கும் ஒரு பொதுவான புற்றுநோய் தான் புரோஸ்டேட் புற்றுநோயாகும். ஆண்கள் புற்றுநோயால் இறப்பதற்கு இது இரண்டாவது முக்கிய காரணமாகும். இதற்கு காரணம் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பற்றி தெரியாமல் இருப்பதும், அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி தெரியாமல் இருப்பதும் தான். ஆனால் இந்த வகை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால் புரோஸ்டேட் புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும் வரை எந்த அறிகுறிகளையும் காட்டாது. ஆகவே இதன் அறிகுறிகளை அறிவது சற்று சவாலாகவே இருக்கும். இருப்பினும், 30 வயதை எட்டிய ஆண்கள் சிறு பரிசோதனையின் மூலம் இப்புற்றுநோயின் தாக்கத்தை அறியலாம்.

சிஓபிடி அல்லது நுரையீரல் நோய்கள்

சிஓபிடி அல்லது நுரையீரல் நோய்கள்

சிஓபிடி என்பது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் எம்பிஸிமா போன்ற இரண்டு நுரையீரல் நோய்களைக் குறிக்க மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒரு சொல். இந்நோய்கள் அடிக்கடி ஒன்றாக இருக்கும். இவை இரண்டுமே சுவாசிக்கும் போது காற்றோட்டத்தில் தடையை ஏற்படுத்தும் நிலைமைகள் ஆகும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் என்பது உடலில் இன்சுலின் குறைபாடு அல்லது இன்சுலின் பயன்படுத்தும் உடலின் திறன் குறைவதைக் குறிக்கலாம். சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை இன்சுலின் அல்லாத (டைப்-2) மற்றும் இன்சுலின் சார்ந்த (டைப்-1) சர்க்கரை நோய். இவற்றில் டைப்-2 சர்க்கரை நோய் பொதுவாக 40 வயதிற்கு பின் தோன்றும். இதனால் 90 முதல் 95 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் ஆண்களாவர்.

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் ஒவ்வொரு ஆண்களும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகளாகும். இவற்றை அறிந்து வைத்திருப்பதன் மூலம், சரியான நேரத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு மரணத்தின் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diseases That All Men Face After The Age Of 30 In Tamil

Men's Health Week 2022: Here are some diseases that all men face after the age of 30. Read on to know more...
Desktop Bottom Promotion