90% மக்கள் பைல்ஸ் என்று நினைத்து அசால்டாக நினைக்கும் குடல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்!

பெருங்குடல் புற்றுநோய் மற்றும் பைல்ஸ் ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்டவை. பெருங்குடல் புற்றுநோயை விட பைல்ஸ் பிரச்சனையால் நிறைய பேர் பாதிக்கப்படுவது தான் இந்த மாதிரி மக்களை சிந்திக்க வைக்கிறது.

நாம் அனைவருமே தினமும் மலம் கழிப்போம். ஆனால் அப்படி மலம் கழிக்கும் போது, அந்த மலத்தில் இரத்தம் இருந்தால் மற்றும் ஆசன வாயில் சிறு கட்டிகள் அல்லது வலி இருந்தால், அதை சாதாரணமாக நினைக்கக்கூடாது. ஏனெனில் அது உடலில் உள்ள தீவிரமான நோயின் அறிகுறியாக இருக்கலாம். பெரும்பாலான மக்கள் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளை மூல நோய் அல்லது பைல்ஸ் பிரச்சனை என்று தவறாக நினைத்து குழப்பமடைகிறார்கள்.

Difference Between Hemorrhoids And Bowel Cancer In Tamil

ஏனெனில் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் பைல்ஸ் ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்டவை. பெருங்குடல் புற்றுநோயை விட பைல்ஸ் பிரச்சனையால் நிறைய பேர் பாதிக்கப்படுவது தான் இந்த மாதிரி மக்களை சிந்திக்க வைக்கிறது. புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் புற்றுநோயால் உயிரைப் பறிக்கும் மூன்றாவது கொடிய புற்றுநோய் தான் பெருங்குடல் புற்றுநோய். இப்போது பைல்ஸ் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் குறித்து விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூல நோய் அல்லது பைல்ஸ் என்றால் என்ன?

மூல நோய் அல்லது பைல்ஸ் என்றால் என்ன?

மூல நோய் அல்லது பைல்ஸ் என்பது ஆசன வாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து, வீக்கமடைந்திருக்கும் நிலையாகும். சில சமயங்களில் இந்த வீக்கமடைந்த இரத்த நாளங்கள் எரிச்சல், அரிப்பு அல்லது கடுமையான வலியை உண்டாக்கலாம். பெரும்பாலும் இந்த வீக்கமானது மலம் கழிக்கும் போது அதிகப்படியான அழுத்தம் கொடுப்பது, நாள்பட்ட மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, கர்ப்பம், நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, கடினமான பொருட்களை தூக்குவது, முதுமை மற்றும் பரம்பரை ஆகியவற்றினால் உள் மற்றும் வெளிப்புறங்களில் ஏற்படலாம். இந்த பைல்ஸ் பிரச்சனையால் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது.

மூல நோயின் அறிகுறிகள்

மூல நோயின் அறிகுறிகள்

மூல நோய் அல்லது பைல்ஸ் பிரச்சனையின் சில முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

* ஆசன வாயில் வலிமிக்க அரிப்பு அல்லது எரிச்சல்

* மலம் கழித்த பின் கடுமையான வலி

* ஆசனவாயில் இருந்து இரத்தக்கசிவு

* மலத்தில் இரத்தம்

இந்த அறிகுறிகள் அனைத்தும் பெருங்குடல் அல்லது ஆசனவாய் புற்றுநோயின் அறிகுறிகளைப் போன்றே இருப்பதால், இந்த அறிகுறிகளை கொண்டவர்கள் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன?

பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன?

புற்றுநோய் என்பது உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரும் நிலையாகும். அதில் பெருங்குடல் அல்லது மலக்குடலில் ஏற்படும் புற்றுநோய் பெரும்பாலும் பெருங்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. மலக்குடல் புற்றுநோயானது ஆசன வாயில் கட்டியை உண்டாக்கும்.

மூல நோயைப் போன்றே பெருங்குடல் புற்றுநோய் ஆண்களையும், பெண்களையும் பாதிக்கும். அதுவும் 50 வயதிற்கு மேல் இது பொதுவானது. இந்த வகை புற்றுநோயை வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் இறப்பு விகிதத்தைக் குறைக்கலாம். மேலும் தற்போது 30 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களிடையே இந்த வகை புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த வகை புற்றுநோயின் அறிகுறிகளை அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம், இறப்பு ஏற்படுவதைக் குறைக்கலாம்.

பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

பெருங்குடல் புற்றுநோய் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளையும் அதிகம் வெளிக்காட்டாது. எனவே தான் வழக்கமான பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனைகள் மிகவும் முக்கியம். இப்போது பெருங்குடல் புற்றுநோயின் சில பொதுவான அறிகுறிகளைக் காண்போம்.

* மலத்தில் இரத்தம்

* ஆசன வாயில் இரத்தக்கசிவு

* வயிற்றில் வலி அல்லது அதிக அழுத்தம்

* உடல் சோர்வு

* அடிக்கடி வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற குடலியக்க மாற்றங்கள்

* திடீர் எடை இழப்பு

* குமட்டல்

பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?

பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?

பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடலில் அல்லது செரிமான மண்டலத்தின் கீழே அமைந்துள்ள மலக்குடலில் ஏற்படும் புற்றுநோயாகும். இந்த வகை புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் சில அறிகுறிகளை வெளிக்காட்டும். அவை அடிக்கடி வயிற்றுப்போக்கு, அடிவயிற்று வலி, மலத்தில் இரத்தம், குடலியக்கத்தில் மாற்றங்கள் போன்றவை. இந்த அறிகுறிகளை ஒருவர் அடிக்கடி உணர்ந்தால், அது பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாகும். இது தவிர உணவு உண்டதும் வயிற்று உப்புசம், பசியின்மை, ஆசனவாய் பகுதியில் புண் போன்றவையும், மலக்குடலில் புற்றுநோய் செல்கள் வளர்ந்து வருகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும்.

யாருக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவற்கான அபாயம் அதிகம் உள்ளது?

யாருக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவற்கான அபாயம் அதிகம் உள்ளது?

* பெரும்பாலும் வயதானவர்களுக்கு தான் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

* நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்வோருக்கு பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளன.

* இது மட்டுமின்றி, உடல் பருமனும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

* குடும்பத்தில் யாருக்கேனும் பெருங்குடல் புற்றுநோய் இருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

* நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வோர், புகைப்பிடிப்போர், மது அருந்துவோருக்கும் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.

அலட்சியமாக நினைக்கக்கூடாத அறிகுறிகள்

அலட்சியமாக நினைக்கக்கூடாத அறிகுறிகள்

ஒருவருக்கு தொடர்ச்சியாக அடிவயிற்று வலி மற்றும் அடிக்கடி கழிவறையை பயன்படுத்துவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரை நோய் முதல் சிறுநீர்ப்பை தொற்று வரை பல நிலைமைகளுக்கு அடிக்கடி கழிவறையை பயன்படுத்துவது முக்கிய அறிகுறிகளாக இருந்தாலும், பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருப்பதால், அலட்சியமாக நினைக்கக்கூடாது. ஒருவேளை இந்த அறிகுறிகளை புறக்கணித்தால், உடலில் புற்றுநோய் செல்கள் வேகமாக வளர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பின் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, January 30, 2023, 11:28 [IST]
Desktop Bottom Promotion