Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
சாதாரண தொண்டைப் புண் Vs கொரோனா தொண்டைப் புண்: இவற்றின் வித்தியாசத்தை அறிவது எப்படி?
தொண்டைப் புண் கொரோனாவின் அறிகுறிகளுள் ஒன்று என்பதால், ஒருவருக்கு தொண்டைப் புண் ஏற்பட்டால் உடனே கொரோனா என்று அர்த்தமல்ல.
சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கோவிட்-19 என்பது ஒரு வகையான கொடிய நோயாகும். இந்த நோயைத் தூண்டும் வைரஸ் வெளிப்படுத்தும் அறிகுறிகள் பொதுவானவை மற்றும் அவற்றுள் சில சுவாச நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்தவை. ஆகவே, தற்போதைய நிலைமையில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, நாம் எந்த ஒரு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டாலும், அதனால் அதிகம் கவலைப்பட வேண்டிய நிலைமையில் தள்ளப்பட்டுள்ளோம். இது இயற்கையானது தான்.

அதிலும் குளிர்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பிற வைரஸ் தொற்றுகள் நம் ஆரோக்கியத்தைப் பாதிப்பதற்கு காத்துக் கொண்டிருப்பதால், நமக்கு கவலையானது பல மடங்கு அதிகரிக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்சனை தொண்டை புண். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்ளின் கூற்றுப்படி, குளிர்காலத்தில் காய்ச்சல், இருமல் மற்றும் சோர்வு தவிர, தொண்டைப் புண் கூட ஏராளமான மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையாகும். மேலும் தொண்டைப் புண் கொரோனாவின் அறிகுறிகளுள் ஒன்று என்பதால், ஒருவருக்கு தொண்டைப் புண் ஏற்பட்டால் உடனே கொரோனா என்று அர்த்தமல்ல.

தொண்டைப் புண் எதனால் ஏற்படுகிறது?
ஒருவருக்கு தொண்டைப் புண் பல்வேறு மருத்துவ நிலைமைகளின் விளைவாக ஏற்படலாம். தொண்டை புண் ஏற்பட்டால் அது வலியுடன், வறண்டு அல்லது கரகரவென்று ஒருவித அரிப்பு உணர்வையும் ஏற்படுத்தும். இத்தகைய தொண்டைப் புண் தொற்றுகளால் தூண்டப்படலாம் அல்லது வறண்ட காற்று போன்ற சுற்றுச்சூழல் காரணிகளாலும் தூண்டப்படலாம்.

தொண்டைப் புண் வகைகள்
தொண்டைப் புண்ணை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் மற்றும் அது பாதிக்கும் பகுதியைப் பொறுத்து வேறுபடுத்தலாம். அதில் வாயின் பின்னால் உள்ள பகுதி பாதிக்கப்படும் போது, அது ஃபரிங்கிடிஸ் (Pharyngitis) ஆகும். அதுவே, டான்சில்கள் சிவந்து, வீக்கமடைந்தால், அது டான்சில்லிடிஸ் ஆகும். மூன்றாவது வகை லாரிங்கிடிஸ் ஆகும். இது குரல்வளை எனப்படும் குரல் பெட்டியில் வீக்கம் ஏற்படும் நிலையாகும்.

தொண்டைப் புண் கோவிட்-19 இன் பொதுவான அறிகுறியா?
சி.டி.சி அறிக்கையின் படி, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்றவை கோவிட்-19 இன் பொதுவான அறிகுறியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனாவின் பொதுவான சில அறிகுறிகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடலாம். கொரோனா வைரஸ் ஒரு சுவாச நோய் என்றாலும, இந்த வைரஸ்கள் எளிதில் மூக்கு மற்றும் தொண்டையில் நுழைந்து புண் மற்றும் வலியை ஏற்படுத்துகின்றன.

சாதாரண தொண்டைப் புண்ணுக்கும், கோவிட் தொண்டைப் புண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
கொரோனா வைரஸ் மூக்கு மற்றும் தொண்டையுடன் இணைந்திருக்கும் சவ்வுகளில் நுழையும் போது கொரோனா நோயாளிகளுக்கு தொண்டைப் பகுதியில் வீக்கத்தை உண்டாக்கி, தொண்டைப் புண்ணை ஏற்படுத்துகிறது. இப்படி பாதிக்கப்பட்ட நபர் வலி மற்றும் வேதனையை அனுபவிப்பதை 'ஃபரிங்கிடிஸ்' என்று அழைக்கக்கிறார்கள். அதேப்போல், பொதுவான ஜலதோஷம் மற்றும் பிற காய்ச்சல் போன்ற சூழ்நிலைகளிலும், இவ்வாறு தான் தொண்டைப் புண் தூண்டப்படுகிறது. இருப்பினும், கோவிட்-19 ஐத் தவிர வேறு நோய்களிலும் தொண்டைப் புண் ஏற்படுகிறது என்பதால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொண்டைப் புண்ணுடன், கொரோனாவின் பிற அறிகுறிகளான காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளையும் அனுபவிப்பார்கள்.
ஒருவேளை உங்களுக்கு தொண்டைப் பகுதியில் மட்டும் வலி இருந்து, பிற அறிகுறிகள் இல்லாவிட்டால், அது கொரோனாவாக இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், இதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினால், தங்களை ஒருமுறை சோதித்துக் கொள்ளலாம்.

பிற நோய்களும் தொண்டைப் புண்ணை உண்டாக்கும்
தொண்டைப் புண்ணானது கோவிட்-19 தவிர, பொதுவான சளி, பருவகால அழற்சி, காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்படலாம். அதிலும் வறண்ட காற்று போன்ற சுற்றுச்சூழல் காரணிகளால் இது அதிகம் தூண்டப்படலாம். ஒருவேளை நீங்கள் கடுமையான தொண்டை வலியை அனுபவித்தால், அதற்கு மகரந்தத்தினால் ஏற்படும் ஒவ்வாமைக் கூட முக்கிய காரணமாக இருக்கலாம்.

சிகிச்சைகள்
கொரோனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தொண்டைப்புண்ணால் பாதிக்கப்படுபவர்கள், அதற்கு மருந்துகள் அல்லது கை வைத்தியங்களின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளலாம். முக்கியமாக போதுமான அளவு நீரைக் குடிப்பது விரைவில் குணமாக உதவும். தொண்டை வலியை அனுபவித்தால், வெதுவெதுப்பான உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கலாம். அதோடு அடிக்கடி ஆவி பிடிப்பதன் மூலம், விரைவில் தொண்டைப் புண்ணில் இருந்து விடுபடலாம்.



Click it and Unblock the Notifications