Latest Updates
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
கொரோனா தடுப்பூசியை போடும் முன் மறந்தும் இந்த மருந்துகளை எடுத்துடாதீங்க... இல்ல பிரச்சனையாயிடும்..
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் மட்டும் கொரோனாவில் இருந்து விடுபட முடியாது என்பது தெரியுமா? ஆம், தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்னும், பின்னும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நீங்கள் 45 வயதிற்கு மேற்பட்டவரா? கொரோனா தடுப்பூசி எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? இந்தியாவில் தற்போது கொரோனாவிற்கு எதிரான இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் மட்டும் கொரோனாவில் இருந்து விடுபட முடியாது என்பது தெரியுமா? ஆம், தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்னும், பின்னும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இக்கட்டுரையில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வதற்கு முன்னும் பின்னும் ஒருவர் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு முன்பான முன்னெச்சரிக்கைகள்
நீங்கள் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு திட்டமிடும் போது ஆல்கஹால் மற்றும் சிகரெட் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அதோடு தடுப்பூசி பெறுவதற்கு முன்பு சரியான நேரத்தில் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதுமட்டும் தானா? இல்லை. கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு முன் ஒருவர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பட்டியலில் மேலும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.

தவிர்க்க வேண்டிய மருந்துகள்
இப்யூபுரூஃபன் (கீல்வாத மருந்துகளில் ஒன்று) அல்லது அசிடமினோபன் (காய்ச்சல் மற்றும் வலிக்கு எடுக்கப்படுவது) போன்ற எந்தவிதமான ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளையும் (Non-Steroidal Anti-Inflammatory Drugs) எடுத்துக்கொள்கிறீர்களா? அப்படியெனில், கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு முன்பு இவற்றை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஏன் தவிர்க்க வேண்டும்?
அழற்சி எதிர்ப்பு மருந்துகள் கொரோனா தடுப்பூசிகளின் செயல்களை மாற்றக்கூடும். மேலும் இது தடுப்பூசியின் சரியான விளைவுகளுக்கு வழிவகுக்காது. ஏனென்றால், இவை பொதுவாக வீக்கம், சாதாரண தலைவலி, வலிமிக்க மாதவிடாய் காலங்கள் மற்றும் சளி, காய்ச்சலுகு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகின்றன.

தடுப்பூசி பெறுவதற்கு முன்பு ஏன் இந்த மருந்துகளை எடுக்கக்கூடாது?
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த மருந்துகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியைத் தடுக்கக்கூடும். இதனால் கொரோனா தடுப்பூசியின் போது இந்த மருந்துகளை எடுத்தால் அது தடுப்பூசியின் செயல்திறனை மாற்றும். பொதுவாக தடுப்பூசி போட்டதும் உடலானது உடனடியாக ஆன்டிபாடிகளை உருவாக்கி கொரோனா வைரஸுடன் போராடத் தொடங்குகிறது. ஆனால் தடுப்பூசி பெறுவதற்கு முன்பு இப்யூபுரூஃபன் அல்லது அசிடமினோபன் போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது, தேவையான எண்ணிக்கையிலான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் திறன் குறைந்துவிடும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த வகையான மருந்துகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அடக்குகின்றன. இதனால் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஷாட் உங்களுக்கு வழங்கப்படும்போது கூட, குறைந்த செயல்திறன் கொண்ட ஆன்டிபாடிகளை உருவாக்க முடிகிறது. ஆகவே கொரோனா வைரஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்வதற்கு முன்னும் பின்னும் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை ஒருவர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசிக்கு பின் எடுக்க வேண்டிய மருந்து
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் வலியைக் குறைக்க பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு வலி நிவாரணி மற்றும் ஆன்டிபிரைடிக் மருந்து. இந்த மருந்தை கொரோனா தடுப்பூசி எடுத்த பிறகு எடுத்துக் கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது?
இது மிகவும் பொதுவாக பெரும்பாலானோர் கேட்கும் கேள்விகளில் ஒன்றாகும் மற்றும் அனைவருக்குமே கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் போட்ட பின்னர் உடலில் உண்மையில் என்ன நடக்கும் என்பது தெரியாது. இப்போது அதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
கோவிட்-19 ஐ உண்டாக்கும் கொரோனா வைரஸிலிருந்து mRNA பொருட்களைக் கொண்ட கொரோனா தடுப்பூசி ஒருவருக்கு வழங்கப்படும் போது, அது உடலில் உள்ள செல்களுக்கு கொரோனா வைரஸுக்காகவே தனித்துவமான ஒரு பாதிப்பில்லாத புரதத்தை உருவாக்க அறிவுறுத்துகின்றன. அதன் பின் தடுப்பூசியிலிருந்து மரபணுப் பொருளை அழிக்கும் புரதத்தின் நகல்களை செல்கள் உருவாக்குகின்றன.



Click it and Unblock the Notifications