Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாத புதிய கொரோனாவின் அறிகுறிகள்!
முந்தைய கொரோனாவை விட இந்த புதிய கொரோனா அலையில் தொற்றுகள் வேகமாக பரவுகிறது. மேலும் இந்த நேரத்தில் ஆரோக்கியமான மக்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பல மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் 1,26,789 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனா தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 1,29,28,574 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் 9 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் நிலைமை மீண்டும் மோசமாகி வரும் நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலையில் முந்தைய அறிகுறிகளுடன் ஒப்பிடும் போது வேறுபட்ட அறிகுறிகளைக் கொண்டிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சொல்லப்போனால் முந்தைய கொரோனாவை விட இந்த புதிய கொரோனா அலையில் தொற்றுகள் வேகமாக பரவுகிறது. மேலும் இந்த நேரத்தில் ஆரோக்கியமான மக்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கொரோனா வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய பல்வேறு அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.

ஆரம்ப கால கொரோனா
ஒரு வருடத்திற்கும் மேலாக உலகமே கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. பல ஆராய்ச்சியாளர்கள் வைரஸ் தாக்குதல்களுடன் தொடர்புடைய பல்வேறு அறிகுறிகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் சுவாச நோயாக அறியப்பட்ட இந்த கொரோனா, நாளடைவில் ஒட்டுமொத்த உடலையும் சேதப்படுத்தக்கூடிய திறன் கொண்டது என்பது தெரிய வந்தது.

முந்தைய கொரோனாவின் அறிகுறிகள்
ஆரம்பத்தில் பரவிய கொரோனாவானது காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு ஆகிய அறிகுறிகளை நோயாளிகளிடையே வெளிக்காட்டியது. மேலும் நோயாளிகளில் சிலர் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தசை வலி போன்றவற்றையும் புகாரளித்தனர். ஆனால் புதிய ஆய்வு ஒன்று, புதிய கோவிட்-19 அலை நோயாளிகளிடையே சில அசாதாரண அறிகுறிகளைக் கொண்டு வந்துள்ளது என்று கூறியது. இந்த அறிகுறிகள் புதிய கோவிட்-19 அறிகுறிகள் என்று அழைக்கப்படுகின்றன.

புதிய கோவிட்-19 அறிகுறிகள்
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, புதிய கோவிட்- 19 அறிகுறிகளை யாரும் சாதாரணமாக எடுத்து புறக்கணிக்கக்கூடாது. அந்த அறிகுறிகளாவன இளஞ்சிவப்பு கண்கள், காஸ்ட்ரோனமிகல் நிலைமைகள் மற்றும் செவித்திறன் குறைபாடு போன்றவை. மேலும் வயிற்றுப்போக்கு, உடல் வலி, வயிற்று வலி மற்றும் வாந்தி போன்றவற்றால் அவதிப்பட்டவர்களுக்கு கொரோனா சோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாக குஜராத்தில் உள்ள மருத்துவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

கண் பிரச்சனைகள்
புதிய கோவிட்-19 அலையின் அறிகுறிகளில் நோயாளிகள் இளஞ்சிவப்பு கண்கள் அல்லது வெண்படல நோயால் பாதிக்கப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அந்த ஆய்வு அறிக்கையின் படி, கோவிட் நோயாளிகள் கண் சிவத்தல், கண் வீக்கம் மற்றும் கண்களில் இருந்து நீர் வடிதல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனராம். எனவே இரண்டாம் அலையின் போது நாவல் கொரோனா வைரஸின் இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் மக்களை வலியுறுத்தி வருகின்றனர். ஏனெனில் தற்போது இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒரே சிறந்த வழி விழிப்புடன் இருப்பது மட்டுமே.

அதிகபட்ச ஒரு நாள் கோவிட் இறப்பு வழக்கு
இந்த வார தொடக்கத்தில், இந்தியாவில் ஒரு நாளில் அதிகபட்சமாக செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அன்று, கொரோனாவால் ஒரு நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 685 ஆக பதிவாகி, தற்போது இறப்பு எண்ணிக்கை 1,66,862 ஆக அதிகரித்துள்ளது.



Click it and Unblock the Notifications