Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
சீனாவில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும் புதிய பாக்டீரியா பரவுதாம் - எச்சரிக்கும் அரசு
வடமேற்கு சீனாவில் சுமார் 3,000-த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புரூசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.
சீனாவில் புதிதாக ஒரு பாக்டீரியா நோய் பரவுவதை சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நோயானது 2019 ஆம் ஆண்டு ஒரு மருத்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது வடமேற்கு சீனாவில் சுமார் 3,000-த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புரூசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.

லான்சோவின் சுகாதார ஆணையத்தின் அறிக்கையின் படி, புருசெல்லா என்ற பாக்டீரியா கால்நடைகளுடன் தொடர்பு கொள்வதான் இந்த நோய் ஏற்படுகிறது. சி.என்.என் படி, கடந்த ஆண்டு ஜூஸை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே ஜாங்மு லான்ஜோ உயிரியல் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவால் இந்த நோய்த்தொற்று வெடிப்பு ஏற்பட்டது. விலங்குகளின் பயன்பாட்டிற்காக புருசெல்லா தடுப்பூசிகளை தயாரிக்கும் இந்த தொழிற்சாலை காலாவதியான கிருமிநாசிகள் மற்றும் சானிடைவர்களை பயன்படுத்தியது. இதனால் பாக்டீரியா கழிவு வாயுவில் கலந்து, இந்த கொடிய பாக்டீரியா தொற்று வெடிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் இதுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை.
அதோடு சில அறிக்கைகளின் படி, இந்த பாக்டீரியா தொற்று ஆண்களின் விரை விதைகளில் வீக்கங்களை ஏற்படுத்துவதோடு, சில ஆண்களுக்கு மலட்டுத்தன்மையையும் உண்டாக்கலாம் என்றும் கூறுகின்றன. மால்டா காய்ச்சல் அல்லது மத்திய தரைக்கடல் காய்ச்சல் என்றும் அழைக்கப்படும் புருசெல்லோசிஸ், தலைவலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவற்றை உண்டாக்கும். இப்போது 3500-க்கும் மேற்பட்டபவர்களை பாதித்த இந்த பாக்டீரியா தொற்றுநோய் குறித்து விரிவாக காண்போம்.

புருசெல்லோசிஸ் என்றால் என்ன?
பாக்டீரியா தொற்றான புருசெல்லோசிஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இது புருசெல்லா இனத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்களின் குழுவால் ஏற்படுகிறது. பெரும்பாலும் அசுத்தமான உணவுகள், சரியாக வேக வைக்காத இறைச்சிகள் அல்லது கலப்படமற்ற பால் ஆகியவற்றை சாப்பிடும் போது இந்த தொற்று பரவுகிறது. உணவைத் தவிர, இது காற்று மூலமாகவும் அல்லது வெளிக்காயங்களின் மூலமாகவும் ஒருவரை தொடர்பு கொள்ள முடியும்.
புருசெல்லோசிஸ் நூறாயிரக்கணக்கான மக்களையும், விலங்குகளையும் பாதித்துள்ளது. பச்சை பால் பொருட்களைத் தவிர்ப்பது மற்றும் விலங்குகளுடன் அல்லது ஆய்வகங்களில் வேலை செய்யும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொற்று ஏற்படுவதைத் தடுக்க உதவும் என்று சி.டி.சி சுட்டிக் காட்டுகிறது.

புருசெல்லோசிஸ் அறிகுறிகள்
நீங்கள் புருசெல்லோசிஸ் பாக்டீரியா நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்தால், தொற்றால் பாதிக்கப்பட்ட சில நாட்களில் இருந்து சில மாதங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் அறிகுறிகள் வெளிப்படலாம். புருசெல்லோசிஸின் அறிகுறிகளாவன:
* பசியின்மை
* காய்ச்சல்
* குளிர்
* மூட்டு, தசை மற்றும் முதுகு வலி
* வியர்த்தல்
* களைப்பு
* எடை இழப்பு
* பலவீனம்
* சோர்வு
* தலை வலி

புருசெல்லோசிஸிற்கான காரணங்கள்
புருசெல்லோசிஸ் பாக்டீரியா தொற்று முக்கியமாக கால்நடைகளான ஆடுகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் மற்றும் ஃபெரல் பன்றிகள், வேட்டை நாய்கள், மான், பைசன், எல்க், கரிபூ, மூஸ் மற்றும் ஒட்டகங்கள் உள்ளிட்ட விலங்குகளையும் பாதிக்கக்கூடியது. பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் மனிதர்கள் நெருங்கிய தொடர்பு கொள்ளும் போது, இந்த பாக்டீரியா தொற்றைப் பெறக்கூடும்.
புருசெல்லோசிஸின் சில பொதுவான காரணங்களாவன:
* பால் பொருட்களை பச்சையாக உட்கொள்வது
* அசுத்தமான காற்றை சுவாசிப்பது
* பாதிக்கப்பட்ட விலங்குகளின் இரத்தம் அல்லது உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்வது
குறிப்பு: பொதுவாக புருசெல்லோசிஸ் மனிதரிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதில்லை. ஆனால் அவ்வப்போது, தாய்ப்பால் அல்லது பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது.

புருசெல்லோசிஸிற்கான ஆபத்து காரணிகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொழில்கள் மற்றும் இடங்கள் ஆபத்துக் காரணிகளாக கருதப்படுகின்றன. அவையாவன:
* பொதுவாக இந்த நோய்த்தொற்று கிழக்கு ஐரோப்பா, மெக்ஸிகோ, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா, கரீபியன் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பதிவாகிறது.
* விலங்குகளுடன் பணி புரிபவர்கள் அல்லது கால்நடை மருத்துவர்கள், பால் விவசாயிகள், இறைச்சிக் கூடங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் நுண்ணுயிரியலாளர்கள் போன்ற இரத்தத்துடன் தொடர்பு கொள்ளும் நபர்கள் இந்த தொற்றின் அபாயத்தில் உள்ளனர்.

புருசெல்லோசிஸ் நோய் கண்டறிதல்
பொதுவாக பாக்டீரியா நோய்த்தொற்று இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜை பரிசோதனையின் மூலம் அல்லது இரத்தத்தில் உள்ள ஆன்டி-பாடிகளை பரிசோதிப்பதன் மூலம் கண்டறியப்படுகிறது. புருசெல்லோசிஸ் சிக்கல்களை கண்டறிய தேவைப்படும் சோதனைகளாவன:
* சி.டி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ
* எக்ஸ்-ரே
* எக்கோகார்டியோகிராபி

புருசெல்லோசிஸிற்கான சிகிச்சை
பாக்டீரியா தொற்றுக்கான சிகிச்சை முறை அறிகுறிகளை அகற்றுவரை நோக்கமாக கொண்டுள்ளது. பொதுவாக ஆன்டிபயாடிக்குகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கு குறைந்தது 6 வாரங்களுக்கு ஆன்டி-பயாடிக்குகளை எடுக்க வேண்டியிருக்கும். முக்கியமாக இந்த நோய் மீண்டும் வந்து நாள்பட்டதாகக் கூட மாறக்கூடும்.

புருசெல்லோசிஸை தடுக்க முடியுமா?
புருசெல்லோசிஸ் ஒரு தடுக்கக்கூடிய பாக்டீரியா தொற்று ஆகும். இந்த நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
* பண்ணைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பணியிடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
* விலங்குகள் அல்லது விலங்குகளின் திசுக்களை கையாளும் போது, கையுறைகளை அணியுங்கள்.
* விலங்குகளின் இரத்தத்துடன் தொடர்பு கொள்ளும் போது, உங்களுக்கு வெளிக்காயங்கள் இருந்தால் அதை சரியாக மூடிக் கொள்ளுங்கள்.
* கலப்படமற்ற (Unpasteurised) பால், சீஸ் மற்றும் ஐஸ் க்ரீம் அல்லது சரியாக வேக வைக்காத இறைச்சிகள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
* இறைச்சிகளை நன்கு சமைத்து சாப்பிடுங்கள்.
* வீட்டு விலங்குகளுக்கு தடுப்பூசி போட மறக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications