Latest Updates
-
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
உயிருக்கு ஆபத்தான மூளை இரத்தக்கசிவு நோய் உங்களுக்கு வராமல் எப்படி தடுக்கலாம் தெரியுமா?
உயர் இரத்த அழுத்தம் மூளையில் ரத்தக்கசிவு பக்கவாதத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதித்து, விரைவில் சிகிச்சை பெறுவது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
மூளையில் இரத்தப்போக்கு (மூளை இரத்தக்கசிவு) விபத்து, மூளைக் கட்டி, பக்கவாதம் அல்லது பிறவி அல்லது பிற சுகாதார நிலைமைகளால் ஏற்படும். மேலும், உயர் இரத்த அழுத்தம் காரணமாகக் கூட ஏற்படலாம். மூளை இரத்தப்போக்கு மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்கலாம், மூளையில் கூடுதல் அழுத்தத்தை உருவாக்கலாம் மற்றும் மூளை செல்களை அழிக்கலாம். மூளை இரத்தக்கசிவு பக்கவாதத்தை எதிர்த்துப் போராடும் போது வயது மற்றும் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், நீங்கள் சரியான நேரத்தில், இவற்றை கண்டறிந்து சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் நீங்கள் கவனிக்கக்கூடிய பல ஆபத்து காரணிகள் உள்ளன. அந்த ஆபத்து காரணிகளை நீங்கள் நன்கு அறிந்தவுடன், மூளை இரத்தக்கசிவைத் தடுக்க நீங்கள் அவற்றைச் சரி செய்ய வேண்டும். மூளை ரத்தக்கசிவு பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் சில வழிகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும்
உயர் இரத்த அழுத்தம் மூளையில் ரத்தக்கசிவு பக்கவாதத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதித்து, விரைவில் சிகிச்சை பெறுவது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். 120/80 என்பது சரியான இரத்த அழுத்த அளவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், 140/90 என்பது சிலருக்கு சாதாரண இரத்த அழுத்த விகிதமாகக் காணப்படுகிறது.

எடை குறைப்பதில் கவனம் செலுத்துங்கள்
உடல் பருமன் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் பருமனாக இருப்பதும் அதனுடன் வரும் சிரமங்களை எதிர்கொள்வதும் மூளை ரத்தக்கசிவு பக்கவாதத்திற்கு ஒரு பெரிய காரணமாக மாறும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், 10 கிலோ எடையை இழப்பது கூட பெரிய வித்தியாசத்தை கொண்டு வரும். பல நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

உடல் செயல்பாடுகள்
சிறந்த பிஎம்ஐ 25 அல்லது அதற்கும் குறைவானது. இது உங்களுக்கு நம்பத்தகாததாகத் தோன்றலாம். உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப உடல் எடையைக் குறைக்க தொழில்முறை உதவியை நாடலாம். ஒரு நாளில் 1500 முதல் 2000 கலோரிகளுக்கு மேல் உட்கொள்வதை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அந்த கூடுதல் கிலோவைக் குறைக்க பயனுள்ள நடவடிக்கைகளாக உங்கள் உடற்பயிற்சியில் நடைபயிற்சி, டென்னிஸ் அல்லது கோல்ஃப் போன்ற உடல் செயல்பாடுகளைச் சேர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி அவசியம்
எடை குறைப்பு மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், உடற்பயிற்சி செய்வது பக்கவாதத்தை எதிர்த்துப் போராடவும் உதவும். சிறந்த முடிவுகளை அடைய வாரத்தில் குறைந்தது 5 நாட்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட பிறகும் இரவு உணவிற்கு பிறகும் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வீடு அல்லது அலுலகத்தில் லிஃப்டுக்கு பதிலாக படிக்கட்டை பயன்படுத்துங்கள். ஒருநாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.

சர்க்கரை நோயை குணப்படுத்தும்
நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், நீங்கள் மூளை ரத்தக்கசிவு பக்கவாதத்தை எதிர்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் உயர் இரத்த சர்க்கரை இரத்த நாளங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது இரத்த நாளங்களுக்குள் உறைதல் உருவாக வழிவகுக்கிறது. உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கவும். உங்கள் இரத்த சர்க்கரையை மருத்துவ மேற்பார்வையின் கீழ் சரிபார்த்து, ஆரோக்கியமான உணவை உண்ணவும், தவறாமல் உடற்பயிற்சி செய்யவும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரியான நேரத்தில் உட்கொள்ளவும் வேண்டும்.

புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்
புகைபிடித்தல் இரத்த உறைதலை பல வழிகளில் அதிகரிக்கிறது. இது இரத்தத்தை கடினப்படுத்துகிறது மற்றும் உங்கள் தமனிகளில் பிளேக் உருவாவதை வலியுறுத்துகிறது. ஒரு நல்ல உணவு முறை மற்றும் முறையான உடற்பயிற்சியுடன், புகைபிடிப்பதை நிறுத்துவது மூளை ரத்தக்கசிவு பக்கவாதத்திற்கு எதிரான ஒரு பயனுள்ள படியாக இருக்கும். உங்கள் இலக்கை அடைய நிகோடின் மாத்திரைகள் அல்லது பேட்ச்கள், ஆலோசனைகள் அல்லது மருத்துவ உதவிகளைப் பயன்படுத்தலாம்.

மூளை ரத்தக்கசிவு மரணத்தை ஏற்படுத்துமா?
மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட பல நோயாளிகள் உயிர் பிழைக்கிறார்கள். இருப்பினும், மூளையின் சில பகுதிகளில் இரத்தப்போக்கு ஏற்படும் போது அல்லது ஆரம்ப இரத்தப்போக்கு மிக அதிகமாக இருந்தால் உயிர் பிழைக்கும் மக்களின் விகிதம் குறைவாக உள்ளது. மண்டையோட்டுக்குள்ளான இரத்தக்கசிவின் ஆரம்ப நிகழ்விலிருந்து நோயாளி உயிர் பிழைத்தாலும், குணமடைய பல மாதங்கள் ஆகலாம்.



Click it and Unblock the Notifications