Latest Updates
-
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
தினமும் 3 பேரிச்சம் பழத்தை பாலில் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?
நீங்கள் இதுவரை வெறும் பாலை மட்டும் குடித்து வந்தால், இனிமேல் அந்த பாலுடன் 3 பேரிச்சம் பழத்தை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் உடலில் ஏராளமான மாற்றங்களை நீங்களே காண்பீர்கள்.
நாம் அனைவருமே உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அதன் காரணமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல விஷயங்களை தினமும் மேற்கொண்டு வருகிறோம். ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உணவுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அவற்றில் உடலுக்கு வேண்டிய பல முக்கியமான சத்துக்களைக் கொண்டது தான் பேரிச்சம் பழம். இந்த பேரிச்சம் பழம் ஏராளமான நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் அந்த பேரிச்சம் பழத்தை கால்சியம் அதிகம் நிறைந்த பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் நன்மை இன்னும் இரட்டிப்பாகி, உடலில் பல அற்புதங்கள் நிகழும்.

நீங்கள் இதுவரை வெறும் பாலை மட்டும் குடித்து வந்தால், இனிமேல் அந்த பாலுடன் 3 பேரிச்சம் பழத்தை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் உடலில் ஏராளமான மாற்றங்களை நீங்களே காண்பீர்கள். இந்த பாலை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் குடிக்கலாம் என்பதால் உங்கள் குழந்தைகளுக்கும் இந்த பேரிச்சம் பழ பாலை குடிக்க கொடுங்கள். இப்போது பேரிச்சம் பழ பாலை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

தசை வலிமை அதிகரிக்கும்
தசைகளின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் புரோட்டீன் மிகவும் அவசியம். பேரிச்சம் பழம் மற்றும் பால் ஆகிய இரண்டிலும் புரோட்டீன் அதிகம் உள்ளன. எனவே பேரிச்சம் பழ பாலை தினமும் குடிக்கும் போது தசைகள் வலிமையாவதோடு, எலும்புகளின் அடர்த்தியும் அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

பாலியல் ஆரோக்கியம் மேம்படும்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் போன்றே பாலியல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமாகும். பாலியல் ஆரோக்கியம் சிறப்பாக இல்லாவிட்டால், அது மன ஆரோக்கியத்தை பாதிக்க ஆரம்பித்துவிடும். எனவே பாலியல் ஆரோக்கியம் சிறப்பபாக இருக்க வேண்டுமானால், பேரிச்சம் பழத்தை இரவு சிறிது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில், அதை மசித்து, வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

உடலின் ஆற்றல் மேம்படும்
பேரிச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து காலை வேளையில் உட்கொண்டு வந்தால், பேரிச்சையில் உள்ள க்ளுக்கோஸ் மற்றும் ஃபுருக்டோஸ் உடலுக்கு வேண்டிய ஆற்றலைத் தருவதோடு, வயிறும் நிரம்பியிருக்கும். முக்கியமாக இந்த பாலை காலை உணவைத் தவிர்ப்பவர்கள் குடிப்பது நல்லது.

இரத்த சோகையை தடுக்கும்
பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் நிறைந்தள்ளன. எனவே பேரிச்சம் பழத்தை உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தம் ஊறும். அதுவும் ஒரு மாதம் தினமும் 3 பேரிச்சம் பழத்தை நீரில் இரவு தூங்கும் முன் உட்கொண்டு ஊற வைத்து, மறுநாளை காலையில் பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனை குணமாகும்.

சரும பிரச்சனைகள்
வயது அதிகரிக்கும் போது சருமத்தில் பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். இது நிச்சயம் ஒருவித கவலையை பலருக்கும் உண்டாக்கும். ஆனால் தினமும் ஒரு டம்ளர் பேரிச்சம் பழ பாலை குடித்து வந்தால், அது முகப்பரு, சரும சுருக்கம், பொலிவிழந்த சருமம் போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை ஜொலிக்க வைக்கும்.

செரிமான பிரச்சனைகள் நீங்கும்
நாம் அனைவருமே செரிமான பிரச்சனைகளை அவ்வப்போது சந்திப்போம். ஆனால் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து, செரிமான செயல்முறையை மேம்படுத்தி ஆரோக்கியமான குடலியக்கத்திற்கு வழிவகுத்து, மலச்சிக்கல் போன்வற்றைத் தடுக்கும்.

மூட்டு வலி நீங்கும்
பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் இன்றியமையாதது. இனிமேல் பால் குடிக்கும் போது, அத்துடன் 3 பேரிச்சம் பழத்தை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதோடு, மூட்டு வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

பேரிச்சம் பழ பாலை தயாரிப்பது எப்படி?
* வெதுவெதுப்பான பாலில் 3 பேரிச்சம் பழத்தை சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து, ஸ்பூன் கொண்டு மசித்து, பின் குடிக்க வேண்டும்.
* இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், இரவு தூங்கும் முன் 3 பேரிச்சம் பழத்தை சிறிது நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்த, மறுநாள் காலையில் அந்த பேரிச்சம் பழத்தை மசித்து வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்க வேண்டும்.
* பேரிச்சம் பழ பாலை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் இரவு தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு குடித்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications