Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
கருவுற முயற்சிக்கும் பெண்கள் முதலில் இதைத்தான் செய்ய வேண்டுமாம் தெரியுமா?
கருவுற முயற்சிக்கும் பெண்கள் முதலில் இதைத்தான் செய்ய வேண்டுமாம் தெரியுமா?
நீங்கள் எப்போதாவது நாம் குறைவாக சாப்பிட்டாலும் ஏன் எடை அதிகமாக இருக்கிறோம் என்று சிந்தித்து உள்ளீர்களா? நாம் அதிகளவு எடையை உணரக் காரணம் பெருங்குடலில் சுவர்களில் இருக்கும் கழிவுகள்தான், கழிவுகள் உங்கள் உடலில் இருந்து வெளியேறினால்தான் உங்கள் உடல் எடை சீராக இருக்கும். உங்கள் பெருங்குடலை சுத்தப்படுத்துவது உடனடியாக உங்களை இலகுவாக உணர வைக்கும். ஆரோக்கியமான பெருங்குடல் சிறந்த செரிமானத்தையும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் உறுதி செய்கிறது.

உங்கள் உடல் நல்ல அளவு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் போது, நீங்கள் எப்போதுமே பசி குறைவாக இருப்பீர்கள். பெருங்குடல் சுத்திகரிப்பு என்பது ஒரு எடை இழப்பு மற்றும் நச்சுத்தன்மையற்ற முறையாகும், இது பெருங்குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற மருத்துவர்கள் அல்லது பயிற்சி பெற்ற நிபுணர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. உங்கள் பெருங்குடலை சுத்தமாக வைத்துக்கொள்வது உங்களுக்கு என்னென்ன நன்மைகளை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

செரிமானத்திற்கு நல்லது
பெருங்குடல் சுத்திகரிக்கப்படுவதால் உங்கள் உடல் கழிவுகளை வெளியேற்றி ஊட்டச்சத்து உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது. பெருங்குடல் சுத்தமாக இருக்கும்போது உங்கள் உடலில் கழிவுகள் ஒருபோதும் சேராது.

மலச்சிக்கலை தடுக்கிறது
மலச்சிக்கல் நீண்ட நாட்கள் இருக்கும்போது அதன் விளைவாக செரிமானத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நமது உடலில் கழிவுகள் நீண்ட நேரம் இருக்கும்படி நேர்ந்து விடுகிறது. இது வயிற்றில் எரிச்சல், மூலநோய் போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. எனவே குடலை சுத்தப்படுத்துவது இந்த நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

ஆற்றலை அதிகரிக்கும்
உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவது உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது, ஏனெனில் இதனால் கழிவுகளை வெளியேற்ற தேவைப்படும் ஆற்றல் உங்கள் உடலுக்கு மிச்சப்படுத்தப்படுகிறது. பெருங்குடலை சுத்தம் செய்து கொண்டவர்கள் தங்களுக்கு சிறந்த இரத்த ஓட்டம், அதிக நிதானமான தூக்கம் மற்றும் ஆற்றலை அதிகரித்து இருப்பதாகக் கூறுகிறார்கள்.

ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது
சுத்திகரிக்கப்பட்ட ஒரு பெருங்குடல் நீர், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை மட்டுமே இரத்த ஓட்டத்தில் உறிஞ்ச அனுமதிக்கிறது, இது உங்கள் உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கு தடையற்ற பாதையை உருவாக்கித் தருகிறது.

ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது
மோசமான உணவு மற்றும் பயனற்ற வைட்டமின் உறிஞ்சுதல் உங்களை திசைதிருப்பி உங்கள் ஆற்றலை இழக்கச் செய்யும். உங்கள் பெருங்குடலில் சளி மற்றும் நச்சுகள் அதிகமாக இருப்பதால், நீங்கள் தொடர்ந்து ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும், உங்கள் உடல் செயல்பட வேண்டிய ஊட்டச்சத்துக்களை பெறமுடியாமல் போகலாம். டிடாக்ஸ் டயட் மூலம் உங்கள் பெருங்குடலை சுத்தம் செய்வது உங்களின் எச்சரிக்கை உணர்வை அதிகரிக்கும். இது உங்களின் வாழ்க்கைமுறை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் என இரண்டையுமே அதிகரிக்கும்.

எடை குறைப்பிற்கு வழிவகுக்கும்
நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் உங்கள் உணவுப்பாதையில் மிகவும் மெதுவாக பயணிக்கிறது. மெதுவாக நகரும் இந்த உணவு அதிகப்படியான சளியை உருவாக்குகிறது. பெருங்குடல் சுத்திகரிப்பு எடை இழப்புக்கு உதவும் திறனைக் கொண்டுள்ளது, சிலர் ஒரு மாதத்தில் 10 கிலோ வரை எடை குறைந்ததாகக் கூறுகின்றனர். பெருங்குடல் சுத்திகரிப்பு குறிப்பிடத்தக்க எடை இழப்பு மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்.

குடல் புற்றுநோய்
உங்கள் தோல் வழியாக நீங்கள் உண்ணும், குடிக்க, சுவாசிக்கும் மற்றும் உறிஞ்சும் அனைத்து நச்சுகளும் உங்கள் இரைப்பை குடல் அமைப்பு, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலால் செயல்படுத்தப்படுகிறது. இவை உங்கள் உடலை விட்டு விரைவில் வெளியேற்றப்படாமல் இருந்தால் அவை உங்களின் உடல் உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தேங்கி நிற்கும் உடல் கழிவுகளை வெளியிடுவதன் மூலம், உங்கள் பெருங்குடல் மற்றும் இரைப்பைக் குழாயில் பாலிப்ஸ், நீர்க்கட்டிகள் மற்றும் புற்றுநோய் வளர்ச்சிக்கான காரணங்களையும் ஆபத்தையும் குறைக்கிறீர்கள்.

கருவுறுதலை ஊக்குவிக்கும்
பெருங்குடல் சுத்திகரிப்பு அதனுடன் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள், ஆரோக்கியமான உணவு தேர்வுகள் உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் கொழுப்பை அடிப்படையாகக் கொண்டது, இது அதிகமாக இருக்கும்போது கருவுருவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். நச்சுப்பொருட்கள் அதிகமுள்ள பெருங்குடல் பெண்களின் கருப்பை மற்றும் சுற்றியுள்ள இனப்பெருக்க உறுப்புகளையும் அழுத்தி, சிரமத்தை ஏற்படுத்தும். பெருங்குடல் சுத்திகரிப்பு முட்டை மற்றும் விந்தணுக்களை பாதிக்கும் பல இரசாயனங்கள் மற்றும் நச்சுகளின் உடலை அகற்றும். பெரும்பாலும் மருத்துவர்கள் பெண்களை கருவுற முயற்சிக்கும் முன் பெருங்குடலை சுத்தம் செய்ய பரிந்துரைக்கிறார்கள்.

இரத்த ஓட்டத்தில் pH சமநிலையை பராமரிக்கிறது
பெருங்குடல் அடைப்புகளை ஏற்படுத்தும் உணவுகள் அமிலத்தை உருவாக்குகின்றன - குறிப்பாக போதுமான நார்ச்சத்து இல்லாத உயர் புரத உணவுகள். இது உடலில் பொதுவான நோய்க்கு வழிவகுக்கிறது. இதனால் பெருங்குடலின் திசு இறுதியில் வீக்கமடைந்து, அதன் வேலையைச் செய்வதற்கான திறனைக் குறைக்கிறது, இது நீர், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் மட்டுமே இரத்த ஓட்டத்தில் செல்ல அனுமதிக்கிறது. எனவே பெருங்குடலை சுத்தப்படுத்துவது உங்கள் இரத்தத்தில் pH அளவை சீராக பயணிக்கும்.



Click it and Unblock the Notifications
