For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் நைட் தூங்கும் முன் தேனை தொப்புளில் வைப்பதால் உடலில் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?

தேனை ஒருவர் தொப்புளில் தடவினால் ஆச்சரியமூட்டும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், தேனை தொப்புளில் தினமும் தடவி வந்தால் நிறைய பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

|

தேன் மருத்துவ குணம் நிறைந்த ஓர் உணவுப் பொருள். தேனின் மருத்துவ குணத்தால் இது இயற்கை வைத்தியங்களில் முக்கிய பங்காற்றுகிறது. தேன் என்ன தான் இனிப்புச் சுவையைக் கொண்டிருந்தாலும், தேன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. சொல்லப்போனால் நாம் இன்று பயன்படுத்தும் சர்க்கரைக்கு மாற்றாக தேனை குடிக்கும் பானங்களில் கலந்து குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

Benefits Of Applying Honey On Navel Before Going To Sleep At Night

இது தவிர, தேன் சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கக்கூடியவை. ஒருவரது சருமம் மற்றும் முடியின் அழகை மேம்படுத்த தேனை பயன்படுத்தலாம். ஆனால் இந்த தேனை ஒருவர் தொப்புளில் தடவினால் ஆச்சரியமூட்டும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், தேனை தொப்புளில் தினமும் தடவி வந்தால் நிறைய பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது ஒருவர் தினமும் தொப்புளில் தேனைத் தடவினால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொப்புள் தொற்றுகள் தடுக்கப்படும்

தொப்புள் தொற்றுகள் தடுக்கப்படும்

உங்களால் தொப்புளை சரியான சுத்தம் செய்ய முடியாவிட்டால், தொப்புளில் ஒருவித தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே இதைத் தடுக்கவும், தொப்புளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் சிறிது இஞ்சி சாற்றில் தேன் கலந்து, தொப்புளில் தடவ வேண்டும். இதனால் தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், தொப்புளில் ஏற்படும் தொற்றுக்களை நீக்க உதவும்.

செரிமானம் சீராக நடக்கும்

செரிமானம் சீராக நடக்கும்

இன்று பலர் பலவிதமான செரிமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். செரிமான பிரச்சனைகளை கவனித்து சரிசெய்ய முயற்சிக்காமல் இருந்தால், பின் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். இஞ்சி சாற்றுடன், தேனை கலந்து தொப்புளில் தடவினால் செரிமானம் சீராக நடக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது வயிற்று வலியைப் போக்கவும் சிறந்தது.

மலச்சிக்கலைப் போக்கும்

மலச்சிக்கலைப் போக்கும்

நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? அதை சரிசெய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறீர்களா? இருப்பினும், இன்னும் எளிமையான வழியை தேடுகிறீர்களா? அப்படியானால் தினமும் தொப்புளில் தேனை வையுங்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.

சரும வறட்சி நீங்கும்

சரும வறட்சி நீங்கும்

நீங்கள் மிகுந்த சரும வறட்சியால் அவதிப்படுபவரா? அப்படியானால் உங்கள் சரும வறட்சியைக் கட்டுப்படுத்த தொப்புளில் தேனைப் பயன்படுத்துங்கள். இதனால் சருமத்தில் ஏற்படும் மிகுதியான வறட்சி நீங்கி, சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும்.

முகப்பரு நீங்கும்

முகப்பரு நீங்கும்

பொதுவாக தேன் முகப்பரு பிரச்சனைகளைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுப்படுகிறது. உங்களுக்கு அதிக பருக்கள் உங்கள் முகத்தில் வருமானால், தொப்புளில் தேனை தினமும் தடவுங்கள். இதனால் விரைவில் முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.

எப்போது தொப்புளில் தேனை பயன்படுத்த வேண்டும்?

எப்போது தொப்புளில் தேனை பயன்படுத்த வேண்டும்?

தொப்புளில் தேனை வைப்பதற்கு சிறந்த நேரம் என்றால் அது இரவு தூங்கும் முன்னர் தான். இருப்பினும், உங்களால் இரவு நேரத்தில் தொப்புளில் தேனைத் தடவ முடியாவிட்டால், நீங்கள் பகல் நேரத்தில் 2 மணிநேரம் ஒய்வெடுக்கும் நேரத்தில் தொப்புளில் தேனை வைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Applying Honey On Navel Before Going To Sleep At Night

Here are some benefits of applying honey on navel before going to sleep at night. Read on to know more...
Desktop Bottom Promotion