For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவு மூலம் பரவும் இந்த ஆபத்தான பாலியல் நோய்களுக்கு எந்த அறிகுறியும் இருக்காதாம்... கவனமா இருங்க!

உலகளவில் ஒவ்வொரு நாளும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளால் (STI கள்) பாதிக்கப்படுகிறார்கள், அவற்றில் பெரும்பாலானவை அறிகுறியற்றவை என்று WHO கூறுகிறது.

|

நீங்கள் எவ்வளவு இளமையாக இருந்தாலும் அல்லது வயதானவராக இருந்தாலும், நீங்கள் எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நீங்கள் பாலியல்ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தால், நீங்கள் பாலியல்ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கு (STIs) ஆளாக நேரிடும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 374 மில்லியன் பேர் புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன, பெரும்பாலும் அவை குணப்படுத்தக்கூடியவையாக உள்ளன. கிளமிடியா, கோனோரியா, சிபிலிஸ் மற்றும் டிரிகோமோனியாசிஸ் ஆகியவை இதில் அடங்கும்.

Asymptomatic STIs That May Cause Long Term Problems in Tamil

ஆண்டுதோறும், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று 3,11,000 கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இறப்புகளுடன் தொடர்புடையது என்று உலகளாவிய சுகாதார நிறுவனம் கூறுகிறது. பாலியல்ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் அல்லது நோய்கள் பொதுவாக பாலியல் தொடர்பு மூலம் பரவுகின்றன. பால்வினை நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அல்லது ஒட்டுண்ணிகளின் இரத்தம், விந்து அல்லது பிறப்புறுப்பு மற்றும் பிற உடல் திரவங்களில் ஒருவரிடமிருந்து நபருக்கு பரவக்கூடும். இருப்பினும், இந்த பாலியல் நோய்களைப் பற்றியும் அதன் அறிகுறிகளைப் பற்றியும் தெரியாமல் இருப்பதால் தாமதமான கண்டறிதலுக்கு வழிவகுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
STI-களின் அறிகுறிகள் அமைதியாக இருக்க முடியுமா?

STI-களின் அறிகுறிகள் அமைதியாக இருக்க முடியுமா?

உலகளவில் ஒவ்வொரு நாளும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளால் (STI கள்) பாதிக்கப்படுகிறார்கள், அவற்றில் பெரும்பாலானவை அறிகுறியற்றவை என்று WHO கூறுகிறது. அறிகுறியற்றது என்பது ஒரு நிலை அல்லது நோய் எந்த அறிகுறிகளையும் உருவாக்காமல் இருக்கும் நிலையாகும். அனைத்து பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளும் அறிகுறிகளுடன் வெளிப்படுவதில்லை, இருப்பினும், அவை உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்று அர்த்தமல்ல. தொற்று கண்டறியப்படாதது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத, ஆனால் உங்கள் உடல் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான பாலியல் மூலம் பரவும் நோய்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

சிப்லிஸ்

சிப்லிஸ்

பல நேரங்களில், சிப்லிஸ் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாது. சிப்லிஸ் என்பது உங்களுக்கு இருக்கும் மற்றும் கவனிக்கப்படாத ஒரு நிலை, ஏனெனில் அது எப்போதும் அறிகுறிகளைக் காட்டாது. இந்த பாலுறவு மூலம் பரவும் நோய்த்தொற்று அதன் மறைந்த வடிவத்தில் இருக்கும் போது அல்லது மறைந்த நிலையில் காணக்கூடிய அறிகுறிகளோ இருக்காது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின்படி, சிகிச்சையில்லாமல், சிபிலிஸ் உடலில் இருக்கும்போது அது ஆபத்தான நிலையை அடைந்து அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் வரை தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தும். எனவே பாலியல்ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் ஏதேனும் உள்ளதா, குறிப்பாக நீங்கள் பாலியல்ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும் போது மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும்போது, ஒருவர் தங்களைத் தாங்களே அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

கிளமிடியா

கிளமிடியா

கிளமிடியா என்பது கிளமிடியா டிராக்கோமாடிஸ் எனப்படும் பாக்டீரியாவின் குறிப்பிட்ட திரிபு காரணமாக ஏற்படும் STI ஆகும். இது யோனி வெளியேற்றம் அல்லது விந்து வழியாக பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது மற்றும் பிறப்புறுப்பு தொடர்பு அல்லது வாய்வழி, யோனி அல்லது குத உடலுறவு மூலம் பரவுகிறது. சில சந்தர்ப்பங்களில், நோய்த்தொற்றுக்குப் பிறகு 2-14 நாட்களுக்குள் கிளமிடியாவின் அறிகுறிகள் தோன்றும், சிலருக்கு, குறிப்பாக ஆண்களுக்கு, இது தெரியாமல் பல ஆண்டுகளாக கிளமிடியா இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவேளை நீங்கள் நீங்கள் அறிகுறிகளைப் பெற்றால், அது 1-3 வாரங்களுக்கு இடையில் தோன்றலாம் அல்லது சில நாட்களுக்குப் பிறகு வந்து மறைந்துவிடும். இந்த காரணிகள் நோயறிதலை மிகவும் தந்திரமானதாக மாற்றலாம்.

கோனோரியா

கோனோரியா

கோனோரியா இரண்டாவது பொதுவாகப் புகாரளிக்கப்பட்ட பாக்டீரியா பாலியல் பரவும் தொற்று ஆகும். இது பாலியல்ரீதியாக பரவும் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று ஆகும், இது ஆண் மற்றும் பெண் இருவரையும் பாதிக்கிறது. இருப்பினும், இந்த நோய்த்தொற்று அறிகுறியற்றவையாகும். பொதுவாக இதன் அறிகுறிகள் தோன்றும்போது, நோய்த்தொற்றுக்கு 2-7 நாட்களுக்குப் பிறகு இது நிகழ்கிறது, சிலசமயம் 30 நாட்கள் வரை கூட ஆகலாம். 10 முதல் 15 சதவிகித ஆண்களுக்கும், 80 சதவிகித பெண்களுக்கும் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

Mycoplasma genitalium

Mycoplasma genitalium

Mycoplasma genitalium (MG) என்பது ஒரு வகை பாக்டீரியல் தொற்று ஆகும், இது ஒரு STD யை ஏற்படுத்தும். இந்த STI பெண்களிடையே அடிக்கடி அறிகுறியற்றது என்று CDC கூறுகிறது. இருப்பினும் Mycoplasma genitalium நோய்த்தொற்றுடன் தொடர்புடைய விளைவுகள் அறிகுறியற்றவை என்று ஆய்வுகள் கூறுகிறது. நோய்த்தொற்றுக்கு 1-3 வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகள் பொதுவாக தோன்றும். இருப்பினும், அறிகுறிகள் தோன்றுவதற்கும் சரியான நோயறிதலைச் செய்வதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே பலருக்கு இந்த தொற்று இருக்க வாய்ப்புள்ளது. எனவே இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், பாலியல்ரீதியாக பரவும் நோய்க்கு உங்களைத் தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது முக்கியமானது. STI இருப்பது உலகின் முடிவு அல்ல. முறையான சிகிச்சை மூலம், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் குணப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Asymptomatic STIs That May Cause Long Term Problems in Tamil

Here is the list of asymptomatic STIs can delay diagnosis and cause complications.
Desktop Bottom Promotion