Latest Updates
-
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம்
மாதவிடாய் கால அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க…
மாதவிடாய் காலங்களில் ஏற்படக் கூடிய வலியை போக்குவதற்கு, உண்ணும் உணவில் சிறு மாற்றத்தை செய்து, முறையாக சாப்பிட்டாவே போதும் வலி ஏற்படாமல் தடுத்திடலாம்.
பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும், மாதந்தோறும் அனுபவிக்கக்கூடிய ஒன்றை எதை கொண்டும் சரி செய்திட முடியாது. பெண்ணாக பிறந்தால் இதை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று பெரும்பாலானோர் கூறி கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றோம். வெறும் இரத்தப்போக்கு மட்டும் ஏற்பட்டாலே, ஒருவித அசௌகரியத்தை பெண்கள் அனுபவிக்கின்றனர். ஆனால், இன்னும் சிலரோ அந்த சௌகரியத்தோடு சேர்த்து பெரும் வலியையும் அனுபவிக்கின்றனர். மாதவிடாய் ஏற்பட்டாலும், சாதாரண நாளை போலவே ஒரு பெண் அந்த தினத்தை ஓட்டி தான் ஆக வேண்டும். அந்த நாட்களை கடத்துவது என்பது பெரிய சவாலாகவே அமைந்தாலும், பல்லை கடித்துக் கொண்டு கடத்தும் பலரை காண முடிகிறது.

வலியை தாங்கியே தான் ஆக வேண்டும் என்பது கட்டாயமல்ல. சிலர், அந்த வலியை போக்குவதற்கு மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். இன்னும், சிலர் சில கை வைத்தியங்களை மேற்கொள்கின்றனர். ஆனால், இவை எதுமே தேவையில்லை. மாதவிடாய் காலங்களில் ஏற்படக் கூடிய வலியை போக்குவதற்கு, உண்ணும் உணவில் சிறு மாற்றத்தை செய்து, முறையாக சாப்பிட்டாவே போதும் வலி ஏற்படாமல் தடுத்திடலாம். மாதவிடாய் நேரங்களில் அதிகப்படியான தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில உணவுகளையும் முறையாக எடுத்துக் கொள்ளுங்கள் வலி என்பதே இருக்காது.

இரும்புச்சத்து
அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அனிமியா ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால், மாறுபட்ட மனநிலை, சோம்பல் மற்றும் உடல் பலவீனம் ஆகியவை ஏற்படக்கூடும். பூப்பெய்திய பெண்கள் அனைவருக்குமே இத்தகைய ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, இதுபோன்ற நாட்களில், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது சிறந்தது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான, பீன்ஸ், டார்க் சாக்லேட், கீரைகள், நட்ஸ், சூரியகாந்தி விதைகள் மற்றும் டோஃபு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மெக்னீசியம்
பதற்றம், தூக்கமின்மை, தலைவலி மற்றும் மாதவிடாய் கால தசைபிடிப்பு போன்ற பிரச்சனைகளை குறைப்பதற்கு மெக்னீசியம் மிகவும் உதவக்கூடியது. இந்த ஊட்டச்சத்தானது, மாதவிடாய் கால தசைப்பிடிப்பிற்கு காரணமான கருப்பையில் உள்ள தசைகளை அமைதிப்படுத்த உதவிடும். மெக்னீசியம் அதிகம் இருப்பதால் தான் பெண்கள், மாதவிடாய் காலங்களில் சாக்லேட் அதிகம் சாப்பிட ஆசைப்படுவதற்கான காரணம். எனவே, அது போன்ற காலங்களில் மெக்னீசியம் நிறைந்த முந்திரி, சோயாபீன்ஸ், பசலைக்கீரை, பாதாம், அவகேடோ, வாழைப்பழம் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்து
தலைவலி, தசைப்பிடிப்பை போன்றே வயிற்று உப்புசமும் மாதவிடாயின் மற்றொரு பொதுவான அறிகுறியாகும். இவை ஒருவித அசௌகரியத்தையும், அமைதியற்ற மனநிலையையும் உண்டாக்கக்கூடும். இந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை மாதவிடாய் காலங்களில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், சுமூகமான குடல் இயக்கத்தையும், சீரான செரிமானத்தையும் பெற்றிடலாம். ஆப்பிள், பீன்ஸ், சியா விதைகள், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அந்த நாட்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் பி
முட்டை, கடல் உணவுகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற வைட்டமின் பி நிறைந்த உணவுகளை இரத்தப்போக்கு ஏற்படக்கூடிய நாட்களில் அதிகமாக எடுத்துக் கொள்ள மறவாதீர்கள். போதுமான அளவு வைட்டமின் பி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய தசைபிடிப்பு, தசை வலி மற்றும் உடற்சோர்வு ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

கால்சியம்
மாதவிடாய் காலங்களில் கால்சியம் அளவை அதிகரித்துக் கொள்ள மறவாதீர்கள். ஏனென்றால், இந்த புரதச்சத்தானது, மாதவிடாய் கால தசைப்பிடிப்பு, வயிற்று உப்புசம் மற்றும் உடலில் நீர் குறைதல் போன்றவை ஏற்படாமல் குறைத்திடும். எனவே, பால், தயிர், பாதாம், ப்ரோகோலி மற்றும் கீரைகள் போன்றவற்றை மாதவிடாய் காலங்களில் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவிடக்கூடும்.



Click it and Unblock the Notifications
