Latest Updates
-
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா?
2020-இல் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமா? அப்ப இத தினமும் ஃபாலோ பண்ணுங்க...
சோம்பேறி, தூங்குமூஞ்சி, சுறுசுறுப்பா இருக்கியா அப்படி இப்படினு நிறைய திட்டு வாங்கி சுறுசுறுப்பாக இருப்பது போல் நடித்து வாழ்பவர்கள் தான் இங்கு அதிகம். இந்த புத்தாண்டில் ஒரு புதிய தீர்மானத்தை எடுப்போமா?
வந்தாச்சு 2020. சோம்பேறி, தூங்குமூஞ்சி, சுறுசுறுப்பா இருக்கியா அப்படி இப்படினு நிறைய திட்டு வாங்கி சுறுசுறுப்பாக இருப்பது போல் நடித்து வாழ்பவர்கள் தான் இங்கு அதிகம். அதனால், இந்த புத்தாண்டில் ஒரு புதிய தீர்மானத்தை எடுத்துக் கொள்வோமா? வேறொன்றும் இல்லை, ஆரோக்கியமாக இருப்பது என்று தான்.

தினமும் உடற்பயிற்சி செய்து, உணவுக் கட்டுப்பாடு இந்த மாதிரி போர் அடிக்கும் விஷயத்தை சொல்லப் போவது கிடையாது. தினசரி வாழ்வில் இதனையும் செய்து பார்க்கலாமே என்று எண்ணும் வகையில் தான் இங்கே சில டிப்ஸ் சொல்ல போகிறோம். இதனை மட்டும் செய்து வந்தாலே போதும், டயர்டா எனக்கா, வாய்ப்பே இல்ல, அப்படினு டயாலாக் விடலாம்... சரி வாங்க என்ன செய்யலாம்னு இப்போ பார்க்கலாம்...

சோடா குடிக்க வேண்டாமே
நம் உணவில் நாம் சேர்த்து கொள்ளும் ஒரு சிறு பதார்த்தம் நம் உணவு பழக்கத்திலேயே மிகப் பெரிய மாற்றத்தை செய்திட கூடும். அந்த வகையில், ஆரோக்கியமான உணவை சாப்பிட்டுவிட்டு, செரிக்க வில்லை என சோடாவை எடுத்து குடித்தால், சாப்பிட்டது எந்த வகையிலும் உதவாமல் போய்விடும். ஏனென்றால், அதிகப்படியான சோடாவை நாம் குடித்தால், பல்வேறு வகையான உடல் உபாதைகளை நாம் சந்திக்க நேரலாம். அதாவது, நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறு, கருத்தரிப்பதில் பிரச்னை, கல்லீரல், கணையம், குடல் போன்ற உள்ளுறுப்புகளில் கொழுப்பு சேர்வது போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஏன், மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு கூட அதிகரிக்கும். எனவே, சோடா போன்ற காற்றேற்றப்பட்ட எந்த ஒரு குளிர்பானத்தை குடிப்பதையும் நிறுத்திவிட்டால், உட்கொள்ளும் கலோரிகளின் அளவு மற்றும் சர்க்கரையின் அளவை சுலபமாக குறைத்திடலாம். ஒரு மாற்றம் பெரும் வித்தியாசத்தை நம்மில் ஏற்படுத்தும்.

கொஞ்சம் அதிகமா நடங்களேன்
ஜிம் அல்லது மாரத்தான் பயிற்சி சேர்ந்து உடலை ஃபிட் ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என மிகப் பெரிய அளவிலான திட்டம் எதுவும் தீட்டாமல், சாதாரண நடைப்பயிற்சியை மட்டுமே தொடர்ந்து மேற்கொள்ளுங்கள் போதும். அப்படி தொடர்ந்து நடைப்பயிற்சி செய்தாலே, ஏராளமான நன்மைகளை உடலுக்கு பெற்று தர முடியும். ஒரு ஆய்வின் முடிவின் படி, ஒரு வாரத்திற்கு 4 மணிநேரம் அல்லது ஓர் நாளைக்கு 35 நிமிடங்கள் நடந்தாலே, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை மிகவும் குறைத்திட முடியும். அதுமட்டுமல்லாமல், ஒருவர் தனது ஓய்வு நேரத்தை நடப்பதற்காக ஒதுக்கினாலே, இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து மற்றும் அதனால் ஏற்படக்கூடிய மரணத்தையும் குறைத்திடலாம். இதில் நடக்கும் வேகத்தை பொருத்து நன்மைகள் அதிகமாகும். ஒருவர் சாதாரண வேகத்தில் நடந்தால், அவர்களுக்கு மெதுவாக நடப்பதால் கிடைக்கும் நன்மைகளில் இருந்து சுமார் 20% அதிகமாக கிடைக்கும். அதுவே, அதி வேகத்தில் விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் நடந்தால் 24% கூடுதல் பலன் கிடைக்குமாம். தனியாக நடக்க பிடிக்கவில்லையென்றால், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் பேசி உடன் அழைத்து சென்றுவிடுங்கள். நேரம் போவதும் தெரியாது, உடலுக்கும் நன்மையும் சேர்த்தது போலாகிவிடும்.

சூரியவெளிச்சத்தை கொஞ்சம் பெறலாமே
பெரியவர்கள் சொல்வது போல் காலை மற்றும் மாலை நேர சூரிய வெளிச்சம் உடலுக்கு நன்மை அளிக்க கூடியது. இது போன்ற வெளிச்சத்தை நம் உடல் மீது படும்படி காலையில் வெளியே செல்வதன் மூலம், மனஅழுத்தம் ஏற்படுவதை குறைத்திட முடியும். அதுமட்டுமின்றி, பிரசவத்திற்கு பின்பு ஏற்படக்கூடிய மனச்சோர்வு மற்றும் கண்ணின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ள உதவும். ஒருவேளை, வெளியே செல்வது சற்று கடினமானதாக சிலருக்கு இருந்தால், வீட்டில் உள்ள ஜன்னல்களை திறந்து வைத்து, சூரிய வெளிச்சம் படும் படி சிறிது நேரம் உட்காருங்கள் அல்லது அலுவலகங்களில் ஜன்னல்கள் அருகே வெளிச்சம் படும்படி உட்கார்ந்து வேலையை பாருங்கள். அதுவும் முடியவில்லை என்றால், ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்தி மனச்சோர்வில் இருந்து விடுபடுங்கள். குறிப்பாக குளிர்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்று.

ஜாலியாக மசாஜ் செய்து கொள்ளலாமே!
பொதுவாக, உடலுக்கு மசாஜ் செய்து கொள்வதால், உடலுக்கும் மனதிற்கும் மிகவும் தேவையான மன அழுத்த குறைவை பெற முடியும் என்று அனைவருக்கும் தெரியும். தற்போதைய ஆய்வு ஒன்றில், மனஅழுத்தத்தை குறைப்பதை தவிர, மசாஜ் செய்வதன் மூலம் இன்ன பிற பயன்களையும் பெற்றிட முடியும் என்பது தெரியவந்துள்ளது. சமீப கால ஆய்வு ஒன்று, மசாஜ் செய்வதன் மூலம் ஆர்த்ரிடிஸ் அறிகுறிகளில் இருந்து விடுபட உதவுவதாகவும், மேலும், 2014 ஆம் ஆண்டில் வெளியான ஆய்வறிக்கையின் மூலம், ஷியாட்சு மசாஜ் செய்து கொண்டால் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும் என்றும தெரிய வருகிறது. இந்த ஆண்டில், ஆரோக்கியத்தை மேம்படுத்த ஏதாவது செய்ய விரும்பினால், உடனடியாக மசாஜ் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

பசுமையான இடங்களுக்கு அடிக்கடி சென்று வாருங்களேன்
பசுமையான இடங்கள் என்பது நீல இடம் மற்றும் பச்சை இடத்தை குறிக்கின்றன. நீல இடம் என்பது ஆறு, ஏரி, குளம் போன்ற நீரோட்டமான இடங்களையும். பச்சை இடம் என்பது வயல்வெளி, காடுகள், தோட்டங்கள் போன்ற இடங்களையும் கூற பயன்படுத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற இடங்களுக்கு சென்று வருவது மிகவும் சுலபமான ஒரு விஷயம். நகர்புறங்களில் இதெல்லாம் எங்குள்ளது என்று கேட்பார்கள். நகரத்திலும் நீலம் மற்றும் பச்சை இடங்கள் உள்ளன. அவற்றை தேடி சென்றால் நிச்சயம் நன்மை நடக்கும். அருகே உள்ள ஏரி, பூங்கா, காடுகள் போன்ற பகுதிகளுக்கு சென்று சிறிது நேரம் நடந்துவிட்டு வந்தால் ஒருவித புத்துணர்ச்சி கிடைக்கும். இயற்கை சூழலுக்கு அருகே நாம் இருப்பதன் மூலம், சுவாச கோளாறுகள் ஏற்படாமலும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைத்திடவும், மேம்பட்ட மனநலம், மனச்சோர்வில் இருந்து விடுதலை போன்ற எண்ணற்ற நன்மைகளை எளிதில் பெற்றிட முடியும். எனவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தினருடன், இயற்கை நிறைந்த சூழலுக்கு சுற்றுலா சென்று நேரம் செலவிடுங்கள். மனதிற்கும் சரி, உடலுக்கும் சரி அது பல்வேறு வகையில் நன்மைகளை செய்துவிடும்.



Click it and Unblock the Notifications
