Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
உங்கள் காதலியை கட்டிப்பிடிக்கும் போது அவரின் உடல், உங்களைவிட ஜில்லுனு இருப்பதற்கு காரணம் என்ன..?
ஒவ்வொருவரின் உடலும் அவர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு மாறுபடும். ஒரு சிலரது உடல் மிக வெப்பமாக இருக்கும். கொஞ்சம் நெருங்கினாலே வெப்ப கனலாக கொதித்து கொண்டு இருக்கும். ஒரு சிலரின் உடலோ மிகவும் குளிர்ந்த தன்மையாகவே இருக்கும். எவ்வளவு வெப்பம் கொளுத்தினாலும் இவர்களின் உடல் ஜில்லென்றே இருக்க கூடும். அதுவும் குறிப்பாக ஆண்களின் உடலை காட்டிலும் பெண்களின் உடல் அதிக குளிர் நிலையிலே இருக்கும். பலரும் இதை கவனித்து இருப்பீர்கள்.

அதாவது, உங்களின் காதலி அல்லது மனைவியை கட்டி அணைக்கும் போது மிகவும் குளிர்ந்த நிலையிலே அவர்களின் உடல் இருக்கும். இப்படி பெண்களின் உடல் அதிக குளிர் நிலையில் இருப்பதற்கும் ஒரு சில விஞ்ஞான பூர்வமான காரணங்கள் உள்ளன. இது மிகவும் புதுவிதமான தகவலாக உள்ளது என ஆய்வுகளும் சொல்கின்றன. சரி, வாங்க ஆண்களின் உடலை விட பெண்களின் உடல் ஏன் இப்படி ஜில்லுனு இருக்கு என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

உடலும் அமைப்பும்..!
மனிதனின் உடல் அமைப்பு பலவித மாற்றங்களை கொண்டது. நமது உடலில் ஏற்படுகின்ற ஒவ்வொரு மாற்றத்துக்கும் ஒரு முக்கிய அர்த்தம் உள்ளது. ஆண்களின் உடல் அதிக வெப்பமாக இருப்பதற்கும், பெண்களின் உடல் ஜில்லுனு இருப்பதற்கும் அவரவரின் உடல் அமைப்பு தான் முதல் காரணம்.

தட்பவெப்பம் எப்படி..?
ஆண்களின் உடலும் பெண்களின் உடலும் தட்பவெப்பத்தில் மாறுபடும். இது தான் ஆண்களின் உடல் உண்மையில் வெப்ப நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம். அதாவது, பெண்களின் தட்பவெப்ப நிலை ஆண்களை காட்டிலும் குறைவாகவே இருக்குமாம். இது நாள் முழுக்க இப்படி தான் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

படுக்கையிலும் இப்படித்தானோ..?
பெண்கள் அதிக நேரம் ஓடினாலும், குளிர் நிலையில் அதிக நேரம் இருந்தாலும் அவர்களின் உடல் மிகவும் ஜில்லென்று மாறி விடும். குறிப்பாக படுக்கையில் இருந்தாலும் இவர்களின் உடல் குளிர் நிலையில் அதிக நேரம் இருக்குமாம். படுக்கையில் உங்களின் மனைவி அல்லது காதலியின் கைகளை தொட்டு பார்த்தாலும் உங்களை விட குளிர்ந்த நிலையில் தான் இருக்குமாம்.

ஹோர்மோன் மாற்றங்கள்..
பெண்களின் உடலிலும் ஆண்களின் உடலிலும் வெவ்வேறு விதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இப்படி பெண்களின் உடல் குளிர் நிலையில் இருப்பதற்கு ஹார்மோன்களும் முக்கிய காரணிகள் ஆகும். பெண்களின் மாதவிடாயின் போது, இது முற்றிலுமாக வேறுபடும். இந்த குளிர்ந்த உடல் நிலை பெண்களின் மாதவிடாயை பொருத்தே நிர்ணயிக்க படுகிறதாம்.

செயல்பாடு மாறுதலா..?
ஆண்களின் உடலை காட்டிலும் பெண்கள் உடலின் செயல்திறன் கொஞ்சம் குறைவானது தான். எனவே, உடலில் கலோரிகள் வேகமாக எரிய கூடும். இது ஆண்களின் உடலுக்கும் பெண்களின் உடலுக்கும் சற்று மாறுதலாகவே இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

சிறிய உடலா.!
உடல் அமைப்பிலும் இந்த மாற்றம் உண்டு. பெண்களின் உடல் ஆண்களை காட்டிலும் சிறியதாக இருக்கும். இது உயரத்திலும், எடையிலும் ஆண்களை காட்டிலும் குறைவாக இருக்கும். ஆண்களின் உடல் பெரிதாக இருப்பதால் எளிதாக வெப்ப நிலை அடையும். எனவே, பெண்களின் உடல் அமைப்பும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

காரணம் என்ன..?
பொதுவாக பெண்களின் உடலானது உறுப்புகளுக்குள் வெப்பத்தை தக்க வைத்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. ஆதலால், மிதமான வெப்பத்துடன் பெண்களின் உடல் எப்போதும் இருக்க கூடும். எனவே, இவர்கள் ஓடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் இது போன்று ஜில்லென்று மாறி விடுகிறது.

கால நிலை மாற்றமா..?
ஒவ்வொரு கால நிலையிலும் நமது உடல் பல்வேறு மாற்றங்களை சந்திக்க கூடும். அந்த வகையில் அதிக வெப்ப காலத்தில் குறைந்த தட்பவெப்பத்தில், குளிர் காலத்தில் மிக குறைந்த தட்பவெப்பத்திலும் பெண்களின் உடல் இருக்குமாம். இதற்கு மேற்கூறியவை தான் முக்கிய காரணிகளாக உள்ளது.



Click it and Unblock the Notifications
