Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
எவ்வளவு சரக்கடிச்சாலும் போதையே ஏறாமல் இருப்பதற்கு இப்படி ஒரு காரணமா..?
சிலருக்கு உடலில் சில விசித்திரமான மாற்றங்கள் எப்போதுமே இருக்கும். சிலரின் உடலில் காந்த தன்மை அதிக அளவில் இருக்கும்; சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் பசித்து கொண்டே இருக்கும்; இன்னும் சிலருக்கு எதை செய்தாலும் மறந்து விடுவர். இப்படி பலவித மனிதர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

இதில் இப்போதைய ட்ரெண்டாக உள்ள வகையினர் "எவ்வளவு சரக்கு அடிச்சாலும் போதையே ஏறாமலும், கொஞ்சம் கூட ஹேங்ஓவரே இல்லாமால் அசால்ட்டாக இருப்பவர்கள் தான். என்னது இப்படி கூடமா நடக்கும் என கேட்டால்... அதற்கு பதில் ஆம்" என்பதே.
இது போன்ற கேரக்டர்கள் உங்களுடனே எப்போதும் சுற்றுவதுண்டு. இதற்கு உண்மையான காரணமும் உள்ளது. ஏன் எவ்வளவு சரக்கடிச்சாலும் சாதாரணமாக இவர்கள் இருக்கின்றனர் என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சரக்கு!
இன்று எதற்கெடுத்தாலும் பார்ட்டி பண்ணுகிற கலாச்சாரம் வந்து விட்டது. காதல் வெற்றியா..? வா, பார்ட்டி பண்ணலாம். காதல் முறிவா? வா, பார்ட்டி பண்ணலாம். தாத்தா செத்துட்டாரா? அட வாப்பா, பார்ட்டி பண்ணலாம்..! இப்படி பார்ட்டி பண்றதுக்காகவே பலர் இங்குள்ளனர். இதில் முக்கிய பங்கு சரக்குக்கு தான் உள்ளது. எல்லாம் முடிந்ததும் போதை ஏறவில்லையே என வருந்தும் பலரும் இங்குண்டு.

போதை!
பொதுவாக போதை மற்றும் ஹாங்ஓவேர் என்பது கல்லீரலில் உள்ள நொதிகளை உடைத்து acetaldehyde என்கிற நச்சு பொருளாக மாறும் போது ஏற்பட கூடிய நிலையே. இந்த நிகழ்வு தான் போதைக்கு முக்கிய காரணம். ஆனால் இது பலருக்கு ஏற்படுவதில்லை.

தாக்கம்!
இப்படி கல்லீரலில் உள்ள நொதிகள் acetaldehyde என்கிற நச்சாக மாறும்போது உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். குறிப்பிட்டு சொல்ல போனால், தலைவலி, மயக்கம், வாந்தி, நாக்கு வறட்சி போன்ற பாதிப்புகள் சரக்கு அடிச்சவர்களுக்கு உண்டாகும்.

ஆய்வுகள்!
குடி பழக்கம் கொண்ட பலரை வைத்து எண்ணற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளது.
அதாவது, சிலருக்கு எவ்வளவு சரக்கடிச்சாலும் போதையோ அல்லது ஹாங்ஓவரோ ஏற்படுவது இல்லையாம். இதில் பெண்களை விட ஆண்களே முன்னிலையில் உள்ளனர் என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

காரணம்?
மேலும், இது போன்ற நிலை ஏற்படுவதற்கு மரபணு ரீதியான காரணங்களும் உள்ளதாம். இது போன்று இவர்களுக்கு அவ்வளவு எளிதாக இந்த மதுவானது கல்லீரலுக்கு சென்று போதை மற்றும் ஹாங்ஓவரை ஏற்படுத்துவதில்லையாம்.

பெண்கள்!
பொதுவாக ஆண்களை விட பெண்கள் தான் மிக விரைவிலே போதையாகி விடுவர். இதற்கு காரணம் ஆண்களின் உடல் அமைப்பும் பெண்களின் உடல் அமைப்பும் வெவ்வேறு விதமாக இருப்பதே. இதனால் தான் பெண்கள் மிக சீக்கிரத்தில் மட்டையாகி விடுகின்றனர்.

எப்படி?
இது போல ஹாங்ஓவர் ஆகும் பலருக்கும் தீர்வை தர சில வழிகள் உள்ளது. அதாவது எப்போதுமே 1 கிளாஸ் சரக்கின் அளவிற்கு 1 கிளாஸ் தண்ணீரை கலந்து குடிக்க வேண்டும். மேலும், சரக்கடிக்கும் போது எண்ணெய் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இதை குடியுங்கள்!
எவ்வளவு சரக்கடிச்சாலும் ஹாங்ஓவர் ஆகாமல் இருக்க, இளநீர் அருந்தி வரலாம். மேலும், பிராண்டட் சரக்குகள் குடித்தால் ஹாங்ஓவரை குறைக்கலாம்.
இல்லையேல் மறுநாள் முழுக்க மோசமான பாதிப்பை இது உண்டாக்கி விடும். எதுவாக இருந்தாலும் "மது உடலுக்கு, இன்றும் என்றும் கெடுதல்" தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!



Click it and Unblock the Notifications