For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரத்ததானத்தால் தொடரும் எய்ட்ஸ் பிரச்சினை... யார் ரத்ததானம் செய்யலாம்? யார் செய்யக்கூடாது?

ரத்த தானம் செய்வது பற்றிய உண்மைகள் மற்றும் அதனால் உங்களுக்கு உண்டாகும் நன்மைகள் பற்றியும் யார் கொடுக்கலாம் என்பது பற்றியும் இங்கே விளக்கப்பட்டுள்ளது.

|

ரத்த தானம் செய்வது பற்றியும் அதை உடலில் செலுத்தி எய்ட்ஸ் முதலான நோய்கள் பரவுவது பற்றியும் தமிழ்நாட்டில் சமீபத்தில் பல சிக்கல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

donate blood

அதனால் நிச்சயமாக ரத்த ானம் செய்வதில் இருக்கின்ற சந்தேகங்கள் மற்றும் அதுபற்றிய உண்மைகளை நாம் எல்லோருமே தெரிந்து வைத்திருப்பது நல்லது. அப்படி யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம். அதை செய்வதற்கு முன்போ பின்னோ என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்ல உடல்நலம்

நல்ல உடல்நலம்

உடல் நலனில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கக்கூடிய எல்லா ஆண், பெண்களும் ரத்ததானம் செய்வதற்கு அடிப்படையாகத் தகுதியானவர்கள் தான்.

MOST READ: புதுவருஷம் தொடங்கிடுச்சு... இன்னைக்கு எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது?

வயது

வயது

பொதுவாக எந்த வயதினர் ரத்ததானம் கொடுக்கலாம் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதாவது பதினெட்டு வயது முதல் 60 வயதுக்குள் இருக்கும் அனைவரும் (ஆண், பெண்) ரத்ததானம் செய்யலாம்.

எடை

எடை

ரத்த தானம் செய்ய விரும்புபவர்களுக்கு உடல் எடை என்பது கட்டாயமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ரத்ததானம் செய்ய வேண்டுமென்றால், கட்டாயம் அவர்களுடைய எடையானது குறைந்தபட்சம் 45 கிலோவாவது இருக்க வேண்டும்.

ஹீமோகுளோபின் அளவு

ஹீமோகுளோபின் அளவு

ரத்த தானம் செய்கின்றவர்களுக்கு உடல் எடையும் வயதும் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அவர்களுடைய ஹீமோகுளோபின் அளவு மிக முக்கியம். ரத்ததானம் செய்பவர்களுக்கு 12.5 கிராமுக்கு மேல் ஹீமோகுளோபின் அளவு இருக்க வேண்டும். அதேசமயம் இயல்பான ரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.

ரத்த சர்க்கரை

ரத்த சர்க்கரை

ரத்த தானம் செய்பவருக்கும்எந்தவிதமான நோய் தொற்றுக்களும் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வளவு ஏன் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூட சரியான அளவில் இருந்தால் மட்டும் தான் ரத்த தானம் செய்ய வேண்டும்

மது

மது

மது அருந்திவிட்டு ரத்த தானம் செய்யக்கூடாது. மது அருந்தி குறைந்தபட்சம் 24 மணி நேரமும் அதிகபட்சமாக 48 மணி நேரத்துக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம். கட்டாயமாக அதற்கு முன்பாக செய்யக்கூடாது.

MOST READ: 2019 ஆண்டில் பெரிய பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் யார் தெரியுமா?

கால இடைவெளி

கால இடைவெளி

சிலர் ஒரு முறை தான் ரத்ததானம் செய்யலாம். அடிக்கடி செய்தால் நம்முடைய உடலில் உள்ள ரத்தத்தின் அளவு குறைந்து விடும் என்று ஒரு தவறான கருத்து இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. எவ்வளவு நாட்கள் இடைவெளியில் ரத்ததானம் செயய்லாம் என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆண்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்ததானம் செய்யலாம்.

எவ்வளவு நேரம் ஆகும்?

எவ்வளவு நேரம் ஆகும்?

ஒருவருக்கு ரத்த தானம் செய்வதற்காகத் தேவைப்படும் நேரமானது குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் தான் ஆகும். பத்து நிமிடங்களுக்குள் ஒரு யூனிட் ரத்தத்தை நம்முடைய உடலில் இருந்து தானமாகக் கொடுத்துவிட முடியும்.

ஓய்வு நேரம்

ஓய்வு நேரம்

ரத்த தானம் செய்து முடித்தவுடன் உடனே எழுந்து உங்களுடைய வேலையை கவனிக்கச் சென்று விடக்கூடாது. ரத்த தானம் செய்த பிறகு குறைந்தது இருபது நிமிடங்களாவது ஓய்வு எடுப்பது அவசியமான ஒன்று.

எவ்வளவு ரத்தம் எடுக்கப்படும்?

எவ்வளவு ரத்தம் எடுக்கப்படும்?

நம்முடைய உடலில் சராசரியாக ஐந்து லிட்டர் அளவுக்கு ரத்தம் இருக்கும். ஒரு யூனிட் என்பது கிட்டதட்ட 350 மில்லி அளவு ரத்தம் தான். அதனால் ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் ஒரு யூனிட் ரத்தம் எடுப்பார்கள். அந்த ரத்தமும் உடனடியாக நம்முடைய உடலில் மிக விரைவாகவே ஊறிவிடும். அதாவது குறைந்தபட்சம் பத்து முதல் இருபத்தோரு நாட்களில் தானமாகக் கொடுத்த ரத்தம் நம்முடைய உடலில் ஊறிவிடும்.

MOST READ: குன்றிமணி எண்ணெயை சாதாரணமா நினைக்காதீங்க... இத்தன விஷயத்துக்கு பயன்படும்...

ஏன் கொடுக்க வேண்டும்?

ஏன் கொடுக்க வேண்டும்?

ரத்த தானம் செய்வதால் நாம் கொடுப்பவருக்கு நல்லது. நமக்கென்ன நல்லது என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் அந்த எண்ணம் முற்றிலும் தவறான ஒன்று. அதேசமயம் ஏன் ரத்ததானம் செய்ய வேண்டும் என்று தெரிநது வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று.

நம்முடைய ரத்தத்தில் இருக்கின்ற சிவப்பணுக்கள் 120 நாட்கள் வரை தான் உயிரோடு இருக்கும். பின்பு தானாகவே அழிந்து புதிய சிவப்பணுக்கள் உருவாகும். நீங்கள் ரத்ததானம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் உங்களுடைய உடம்புக்குள் நடக்கும். அதனால் நீங்கள் ரத்த தானம் செய்வதால் உங்களுக்கு எந்தவித உடல் ரீதியான பிரச்சினைகளும் வராது. அதனால் நீங்கள் உறுதியாக நம்பிக்கையோடு உங்களுடைய ரத்தத்தைப் பகிர்ந்து கொண்டு மற்றவருடைய உயிர் காக்க உதவ முன்வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

who they are ready to donate blood

here we are discussing about the blood donation and that benefits and facts.
Story first published: Wednesday, January 2, 2019, 14:58 [IST]
Desktop Bottom Promotion