Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட தினமும் இரவில் 1 கிளாஸ் இதை குடித்து விட்டு தூங்குங்கள்...!
நாம் சாப்பிட கூடிய உணவை பொருத்தே நமது உடலுக்கு ஆற்றல் கிடைக்கின்றன. இது உணவை மற்றும் சார்ந்திருக்காமல், உணவு உண்ணும் நேரத்தையும் பொருத்து அமைகிறது. ஒரு சில உணவுகளை காலையில் சாப்பிட்டால் அதிக ஆரோக்கியம் கிடைக்கும், வேறு சில உணவுகளை இரவில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அந்த வகையில் இந்த பானத்தை தினமும் இரவில் குடித்து வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதுவும் தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட முடியுமாம். அப்படிப்பட்ட பானம் என்னனு யோசிக்கிறீர்களா..? அதற்கான விடையே இந்த பதிவு. உடலுக்கு முழு ஆற்றலையும் தர கூடிய தன்மை இந்த பானத்திற்கு உள்ளதாம். மூளையின் செயல்பாடு முதல் புற்றுநோய் வரையிலும் இது உங்களை காக்கும். இனி இந்த அமிர்த பானத்தை பற்றி தெரிந்து கொள்வோம் நண்பர்களே.

என்ன அது..?
நாம் நினைப்பதை போன்று இது சுறா பானமோ, சோம பானமோ கிடையாது. திராட்சை ரசம் என்று கூறப்படும் ஒயினை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். இதனை தினமும் இரவில் 1 கிளாஸ் குடித்து விட்டு தூங்கினால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்குமாம்.

புற்றுநோய் அபாயம்..!
இரவில் 1 கிளாஸ் ஒயினை குடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு புற்றுநோய் அபாயம் மிக குறைவாம். காரணம் இதிலுள்ள resveratrol என்கிற மூல பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடை செய்து விடுகிறதாம்.
இரவில் ஒயின் குடிக்கும் பெண்களுக்கு 50 சதவீதம் கருப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைகிறதாம்.

புத்தி கூர்மை அதிகரிக்க
கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது, இரவில் ஒயின் குடிப்பதால் உங்களின் மூளை படு வேகமாக செயல்பட கூடுமாம். எனவே, எல்லா செயல்களிலும் அதிக புத்தி கூர்மையுடன் இருப்பீர்கள்.

எலும்புகளுக்கு பலம்..!
ஒயின் குடிப்பதால் எலும்புகள் அதிக பலம் பெறுமாம். ஒரு ஆய்வில், தினமும் இரவில் ஒயின் குடிக்காதவர்களை விட குடித்தவர்களின் எலும்புகளே அதிக வலுவுடன் இருக்கிறதாம்.
எலும்புகள் பலவீனமாக இருப்பவர்களுக்கு இது நல்ல தீர்வை தரும். அத்துடன் மூட்டு பிரச்சினைகளை தடுத்து விடும்.

ஆயுள் கெட்டி..!
இரவில் ஒயின் குடிப்பவர்களுக்கு ஆயுள் கூடும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் 34 சதவீதம் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், சீக்கிரமாக வயதாவதை தடுக்கும் ஆற்றல் இந்த இரவு பழக்கத்திற்கு உண்டு.

தாம்பத்திய வாழ்விற்கு...
ஒயின் குடிப்பதால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும். அதில் மிக முக்கியமானதில் இதுவும் ஒன்று. ஆண்கள் மற்றும் பெண்களின் தாம்பத்திய ஆர்வத்தை தூண்டி இனிமையான இரவாக உங்களுக்கு அமைய செய்யும்.
முக்கியமாக ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் அதிக அளவில் சுரந்து உடல் ஆரோக்கியத்திலும், தாம்பத்திய வாழ்விலும் நல்ல முன்னேற்றத்தை தரும்.

கொலஸ்ட்ராலை குறைக்க
நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இரவில் 1 கிளாஸ் ஒயின் குடியுங்கள்.
மேலும், இதிலுள்ள procyanidins என்கிற மூல பொருள் இதய நோய்களில் இருந்து உங்களை காக்குமாம்.

நீரிழிவை தடுக்க
இரவில் ஒயின் குடிப்பவர்களுக்கு 30 சதவீதம் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதுவும் ரெட் ஒயினால் இந்த பலன் முழுமையாக கிடைக்குமாம்.

மன உளைச்சலை போக்க
இரவில் ரெட் ஒயின் அருந்தினால் உங்களின் மன உளைச்சல் குறைந்து விடும். குறிப்பாக எப்போதும் மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு இது நல்ல மாற்றத்தை தரும்.
மன நிம்மதியை தந்து, இரவில் சிறு குழந்தையை போன்று சுகமாக ஆழ்ந்து உறங்குவீர்கள்.

அளவு முக்கியம்..!
ஒயினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது என்பதால் அதிக அளவில் குடிப்பது நல்லதல்ல. இது உங்களின் ஆரோக்கியத்தை முழுமையாக பாதித்து விடும்.
ஆதலால், தினமும் இரவில் 1 கிளாஸ் மட்டுமே ஒயினை அருந்த வேண்டும். அளவாக அருந்தி வளமாக வாழுங்கள் நண்பர்களே..!



Click it and Unblock the Notifications
