Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வெறும் 7 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை சாற்றை குடித்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்..?
உடலில் ஏற்பட கூடிய பலவித விளைவுகளுக்கு தீர்வை தர கூடிய தன்மை நம் வீட்டில் உள்ள உணவு பொருட்களுக்கே உள்ளது. ஒரு சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே ஏற்கனவே இருக்க கூடிய நோய்களை குணப்படுத்தி, இனி வர கூடிய நோய்களையும் தடுத்து நிறுத்தலாம். அந்த வகையில் எலுமிச்சை நமக்கு நன்கு உதவுகிறது.

எலுமிச்சையை 1 வாரத்திற்கு தொடர்ந்து குடித்து வந்த பின்னர் உங்களின் உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் என்னென்ன என்பதை நீங்களே உணர்வீர்கள். சாதாரண எலுமிச்சை எப்படிப்பட்ட வித்தைகளை உங்கள் உடலில் நடத்தும் என்பதையும் உங்களால் உணர முடியும். 1 வாரம் தொடர்ந்து எலுமிச்சை நீரை குடித்து வருவதால் உடலில் ஏற்பட கூடிய தாக்கங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கால அளவு..!
பொதுவாக ஒரு சில உணவுகளை சரியான கால அளவில் நாம் உண்டால், எண்ணற்ற மாற்றங்கள் நமது உடலில் நடக்கும். அதுவும் இந்த 1 வார கால அளவு, 2 வார கால அளவு போன்ற கணக்குகள் அறிவியல் பூர்வமான தாக்கத்தை தான் நமக்கு தருகின்றன. அந்த வகையில் இந்த எலுமிச்சை நீரும் அடங்கும்.

வைட்டமின் சி
வைட்டமின் சி நமது உடலில் அதிக அளவில் இருந்தால், நமக்கு பல நலன்கள் உண்டாகும். குறிப்பாக இதய நோய்களை தடுத்து, உயர் ரத்த அழுத்தத்தை இது கட்டுப்படுத்துகிறது. மேலும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

எடையை குறைக்க
படாதபாடுபட்டு உடல் எடையை குறைக்க முடியமால் திணறும் பலருக்கும் இந்த எலுமிச்சை நீர் ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது. 1 வாரத்திற்கு நீங்கள் எலுமிச்சை நீரை குடித்து வந்தால் உங்களின் உடல் எடை குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் அடிக்கடி பசி எடுப்பதை தடுத்து சீரான அளவில் உங்களை சாப்பிட வைக்கவும் இது உதவும்.

சுறுசுறுப்பு...
1 வாரத்திற்கு காலை வேளையில் எலுமிச்சை நீரை குடித்து வந்தால் அந்த நாள் முழுக்க படு வேகமாகவே நீங்கள் செயல்படுவீர்கள். காலையில் எழுந்தவுடன் உங்களை கஷ்டப்பட வைக்கும் மலச்சிக்கல் பிரச்சினைக்கும் இந்த நீர் நல்ல தீர்வை தரும்.

அழுக்குகளை வெளியேற்ற
நமது உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை போக்கும் தன்மை எலுமிச்சைக்கு உள்ளது. தொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை சாற்றை குடித்து வருவதால் எளிதாக நமது உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றி விடலாம். இதனால் குடலில் உண்டாக கூடிய புற்றுநோயும் தடுக்கப்படுகிறது.

ஹார்மோன்களுக்கு
தொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை நீரை குடித்து வருபவர்கள் இதனை அறிய கூடும். அதாவது, ஹார்மோன்களை சீரான அளவில் உற்பத்தி செய்து மன அழுத்தம் போன்றவற்றை குறைக்கிறது. அத்துடன் ரத்த ஓட்டத்தை இது சீராக வைத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

சிறுநீரக கற்களை தடுக்க
சிறுநீரக கற்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையை எலுமிச்சை பழத்தை வைத்தே நம்மால் தீர்த்து விட முடியும். இவற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்களை உண்டாகாமல் பார்த்து கொள்ளும் தன்மை கொண்டது. மேலும், ஏற்கனவே கற்கள் உருவாகி இருந்தாலும் அதனையும் இது அகற்றி விடுமாம்.

துள்ளுவதோ இளமை..!
தொடர்ந்து 7 நாட்கள் இந்த எலுமிச்சை நீரை குடித்து வந்தால் உங்களின் முகத்தில் ஏற்பட கூடிய மாற்றங்களை உங்களால் உணர முடியும். குறிப்பாக நீங்கள் அதிக இளமையாக தெரிவீர்கள். மேலும், உங்களின் சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும் மாறும்.

கொழுப்புகளை குறைக்க
உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைக்க இந்த எலுமிச்சை வைத்தியம் நன்கு உதவும். தொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை நீரை குடித்து வந்தால் இதன் பலனை நீங்களே கண்கூட பார்ப்பீர்கள். மேலும், தொப்பையும் குறைய கூடும்.

தயாரிப்பு முறை
1 கிளாஸ் வெது வெதுப்பான நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் தேவைக்கு 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளலாம். இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேற்சொன்ன பலன்களை எளிதில் அடைய முடியும்.



Click it and Unblock the Notifications