Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சைக்கோ குணத்தின் உச்சம் எதுவென்று தெரியுமா? இது உங்கள் காதலன்(அ) காதலிக்கு கூட ஏற்படலாம்..!
காதல் நிச்சயம் பல கட்டங்களை தாண்டி தான் நிம்மதியான வாழ்வை தரும். ஆனால், சிலருக்கு முதல் கட்டத்திலே இது நிராசையாக மாறி விடும். காரணம், எதற்கெடுத்தாலும் சண்டை. ஏன் சண்டை என காரணத்தை அறிந்தால் சில்லறை தனமான ஒன்றாக தான் இருக்கும். இது போன்ற பிரச்சினைகள் பலரின் வாழ்வில் நடந்திருக்கும். இது காதலுக்கு மட்டுமின்றி மேலும் சில உறவுகளுக்கு இதே நிலை ஏற்பட கூடும்.

இது போன்ற உறவு சிக்கல்கள் நாளடைவில் ஒருவரை பைத்தியக்காரத்தனமாக மாற்றும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதை ஆரம்ப நிலையில் "பொஸசிவ்" என்கிற பாணியில் தொடங்கும். அதன் பின்னர் பலவித பாதிப்புகளை உண்டாக்கும். இந்த நிலை முத்திய பின் இதை அவராலே தாங்கி கொள்ள இயலாமல் பாதிப்புகள் அதிக அளவில் நிகழ தொடங்கும். இந்த நிலையை தான் "சைக்கோ" என மருத்துவ துறையில் கூறுவார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தான் இன்று பல காதல்கள் நடந்து வருகின்றன. உங்கள் காதலி அல்லது காதலர் மிக மோசமான சைக்கோ தன்மையுடன் நடந்து கொள்கிறார் என்பதற்கான சில அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

குறுகிய மனப்பான்மை
இது போன்று சைக்கோத்தனம் கொண்டோர்கள் பெரும்பாலும் குறுகிய மனப்பான்மையுடன் இருப்பார்கள். இதை முதல் நிலையில் அவருடன் பழகுவோர் எளிதில் கண்டறிய இயலாது. ஆனால், இந்த குறுகிய மனப்பான்மை தான் உங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் ஆயுதம்.

மோசமான எண்ணங்கள்
உங்கள் மீதுள்ள அபரிமிதமான அன்பு அவர்களை மூர்க்கத்தனமாக மாற்றி விடும். இது நாளுக்கு நாள் அதிகரித்தால் யார் உயிருக்கு வேண்டுமானாலும் ஆபத்தை உண்டாக்கும். மேலும், உங்களை பற்றிய ஆவேசமான சிந்தனை இவர்களுக்கு எப்போதுமே மனதில் ஓடி கொண்டிருக்கும்.

கைப்பாவையாக..!
உங்களை தனக்கு மட்டுமே உரியவர் என்கிற மனப்பாங்கு இவர்களுக்கு அதிகம். இதனால் உங்களை வேறொருவருடன் கூட பேசவோ பழகவோ விட மாட்டார்கள்.
இதன் விளைவு உங்கள் இருவருக்குள்ளும் சண்டை, பேச்சுவார்த்தை இன்மை, அதனால் பல தகராறுகள் ஏற்படுதல் போன்றவை அடுக்கி கொண்டே போகும்.

கவர்ச்சி
இப்படிப்பட்ட சைக்கோ தன்மை கொண்டோர் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பார்கள். இவர்கள் பலருடன் பழகி பலரையும் ஏமாற்றும் தன்மை கொண்டோராக இருப்பார்கள். பார்க்க அழகுமிக்கவராக இருக்கிறார்கள் என்பதற்காக ஒருபோதும் சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள்.

தன்னம்பிக்கை
ஒருவர் தன்னை நம்புவது தவறில்லை. ஆனால், அதுவே மோசமான நிலைக்கு அவரை தள்ளி விட கூடாது என்பதே முக்கியமானது.
இந்த வகை சைக்கோ கேரக்டர்கள் அதீத நம்பிக்கையை அவர்கள் மீதே வைத்து கொள்வார்கள். எதையும் அடையாமல் விடுவதில்லை என்கிற மனப்பாங்கு இவர்களுக்கு உண்டு.

பொய் சொல்லுதல்
உங்களை சமாதானம் செய்வதற்காக பல பொய்களை இவர்கள் சொல்வார்கள். இந்த மனநிலை உச்சகட்டமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலைக்கு வந்து விட்டால் அவரால் பல பிரச்சினைகள் உங்களுக்கு உண்டாக போகிறது என அர்த்தமாம்.

பொறாமை
பெரும்பாலும் இந்த வகை சைக்கோ குணம் கொண்டோர் தங்களை பற்றிய கீழ்மதிப்பீடு தான் அதிகம். இது நாளுக்கு நாள் அதிகரித்தால் நிச்சயம் அவர்களுக்கு விருப்பமானவரை பாதிக்க கூடும். கூடவே பொறாமை படக்கூடிய குணமும் இவர்களுக்கு உண்டு.

ஆக்ரோஷமான
பொதுவாகவே சைக்கோ தன்மை கொண்டர்கள் ஆக்ரோஷமாக செயல்படுவார்கள். இது ஆரம்ப நிலையில் நமக்கே தெரியாமல் இருந்திருக்கும்.
ஆனால், ஒரு சில நாட்களிலே இதனை நம்மால் புரிந்து கொள்ள இயலும். இப்படிப்பட்ட எண்ணம் கொண்டோர் கொலையை கூட அசால்ட்டாக செய்து விடுவார்கள்.

அக்கறை இன்மை
எதை பற்றியும் அக்கறை இவர்களுக்கு இருக்காது. எதை கண்டாலும் ஒருவித வெறுப்பு தன்மை இத்தகைய மனப்பான்மை கொண்டோருக்கு இருக்கும். இதனால் தான் எப்போதுமே எந்தவித அக்கறையும் இல்லமால் இவர்கள் இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications