For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க

By Haribalachandar Baskar
|

வயிறுக்குள் யுத்தம் நடப்பது போல் சத்தம் கேட்கும் போதே தலையில் கைவைத்து விட்டு கழிவறை நோக்கி பயணப்பட வேண்டும் என உள்மனம் நமக்கு கட்டளை இடும். ஆரம்பத்தில் உண்டு செரித்த சக்கைகளை வெளியேற்றும் . 3 வது 4 வது ரவுண்டுகளில் உங்கள் உடலிளுள்ள நீரை எல்லாம் வெளியேற்றிவிடும். நீரில்லாத உடம்பை வைத்துக் கொண்டு குண்டூசியை கூட உங்களால் எடுத்து வைக்க முடியாது.

வயிற்றுப் போக்கு வந்து இறந்து போனவர்கள் எல்லாம் ஏராளம். கெட்டுப்போன உணவுகள் உங்களுக்கு ஒவ்வாத உணவுகளால் தான் வயிற்றுப்போக்கு நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமில்லாமல் வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கு காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு வேளை முந்தைய நேரங்களில் எடுத்துக் கொண்ட உணவுகளில் ஏதும் தொந்தரவு இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு காரணத்தை தேடுகிறவர்களாக இருந்தால் இந்தக் கட்டுரையை நிச்சயம் முழுமையாக படியுங்கள்.

179 மில்லியன்:

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 179 மில்லியன் மக்கள் வயிற்றுப் போக்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுகின்றனர். வயிற்றுப் போக்கு போவதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன. ஆனால் வயிற்றுப்போக்கிற்கான தலைசிறந்த காரணங்கள் இரண்டு உள்ளது.

1 தொற்றினால் பரவக்கூடியது
2. தொற்று அல்லாம வருகிற வயிற்று போக்கு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய் எதிர்ப்பு சக்தி:

நோய் எதிர்ப்பு சக்தி:

நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்களைக் கூட வயிற்றுப் போக்கு ஒரு ஆட்டம் காண வைக்கும் இருந்தாலும் கூட இயல்பாகவே நோயை எதிர்க்கும் திறன் இருப்பதால் விரைவில் அவர்கள் இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள். தொற்றினால் ஏற்படக்கூடிய வயிற்று போக்கு என்பது பாக்டீரியா, வைரஸ் மற்றும் பிற நுண்ணுயிர்கள் மூலமாக பரவுகிறது.

முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்

தொற்று அல்லாத வயிற்றுப் போக்கு :

தொற்று அல்லாத வயிற்றுப் போக்கு :

நாள்பட்ட வியாதி உதாரணமாக சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது மாத்திரைகளால் உடலில் ஏற்படும் ஒவ்வாமையால் வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. இந்த வகை வயிற்றுப் போக்கில் ஒரே நன்மை என்னவென்றால் எளிதில் இதைக் குணப்படுத்தலாம்.

உணவுக் கலப்படம்:

உணவுக் கலப்படம்:

உணவுக் கலப்படம் தான் உங்கள் உடலில் பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை உட்செலுத்தி வயிற்றுப் போக்கு போன்ற அசௌகரியங்களை உங்கள் உடலில் ஏற்படுத்துகிறது. அதோடு நிக்காமல் வாந்தியையும், வயிற்றுப் பிடிப்பையும் இலவச இணைப்பாக கூடவே உங்களுக்கு குடுத்து வேதனையை அளிக்கிறது.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொதுவாக உணவு விநியோகத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியால் பலரையும் ஒரே சாவியின் வழியாக சென்றடைகிறது.

காபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா? சிக்கரி அதிகமா இருக்கணுமா?

வைரல்(வைரஸ்) / தொற்றுகள்

வைரல்(வைரஸ்) / தொற்றுகள்

வயிற்றுப்போக்கை வரவைக்கும் முக்கியமான திருடர்களில் வைரசும் ஒன்று. அதிர்ஷ்டவசமாக இந்த வைரஸ்கள் நமது உடலில் சிறுது காலத்திற்கு மட்டுமே தங்குவதால் விரைவில் குணமாகும் என்றாலும் அந்தக் குறைந்த நேரத்தில் உங்களை பாடாய் படுத்த்விடும் என்பதில் எந்த அச்சமும் இல்லை.

எப்படி பரவுகிறது?

வைரஸ் தொற்றுள்ள உணவுகள், பண்ணைகளுக்கு செல்லும் போது அல்லது அங்குள்ள விலங்குகளைத் தொடுவதன் மூலமாகவும் இந்தத் தொற்று நமது உடலுக்கு ஏற்படுகிறது. நோரா வைரஸ் தொற்றுகள் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு எளிதில் தொற்றிவிடும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களான நர்சிங் ஹோம்ஸ், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற இடங்களில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

பயணம்:

வீடுகளில் இருக்கும் போது நீங்கள் உண்ணும் உணவால் வருகிற வயிற்றுப்போக்கை விட பயணங்கள் மேற்கொள்ளும் போது குறிப்பாக வளர்ந்து வரும் இடங்களை நோக்கி நகரும் போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

சுகாதார நடைமுறைகள் என்பது வெளியூர்களில் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். கழிவுகளை சுத்தப்படுத்துவதற்கு நீருக்கு பதிலாக பேப்பர்கள் இடம்பெறலாம். அதை முறையாகப் பயன்படுத்த ஆரம்பக் காலங்களில் நீங்கள் தடுமாறுவீர்கள். சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அது நோய்த்தொற்றுக்கு உங்களை நிச்சயம் அழைத்துச் செல்லும்.

மருந்து :

மருந்து :

நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளே உங்களுடைய வயிற்றுப் போக்கிற்கு காரணமாக அமைகிறது. சில நேரங்களில் நீங்கள் உட்கொள்ளும் ஆண்டி பயாட்டிக் மாத்திரைகளே உங்களுக்கு ஒவ்வாமையை ஏறபடுத்தி வயிற்றுப் போக்கிற்கு வழிவகுக்கிறது.

சில இரத்த அழுத்த மாத்திரைகள், புற்றுநோய் மருந்துகள், ஆண்டாசிட்ஸ், மக்னீசியம் போன்ற மருந்துகள் வயிறு மற்றும் வயிற்றுப் போக்கு சம்மந்தமான வியாதிகளை உண்டாக்குகிறது. அதனால் இந்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்யும்போதே கூடவே வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளும் மருந்தையும் சேர்த்துக் கொடுத்துவிடுவார். இதனால் தான் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை.

ஒட்டுண்ணிகள்:

பாக்டீரியா, வைரஸை போன்று ஒட்டுண்ணிகளும் நுண்ணுயிரி வகையைச் சார்ந்தது தான்.

வைரஸ் பாக்டீரியா எப்படி உணவு மூலமாக நமது உடலுக்குள் செல்கிறதோ அதே மாதிரிதான் ஒட்டுண்ணிகளும் உள்ளே செல்கின்றன. இது பெரும்பாலும் பயணங்களில் தான் அதிகமாக நடைபெறுகிறது உணவுப் பொருட்கள் நன்றாக சமைக்கப்பட்டிருந்தால் தான் அதிலுள்ள ஒட்டுண்ணிகள் சாகும் ஆனால் நிறைய இடங்களில் அது நடைபெறாததால் நமது உடலில் நுழையும் இந்த ஒட்டுண்ணிகள் குடைச்சலைத் தருகின்றன.

நாளமில்லா பகுதிகளில் ஏற்படும் கோளாறுகள்:

நீண்டகால சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களில் 20 முதல் 25% மக்கள் நாள்பட்ட வயிற்றுப் போக்கிற்கு ஆளாகுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தைராய்டு சுரப்பிகளில் செயல்பாடு அதிகமாக இருக்கும் போது வயிற்றுப்போக்கு ஏற்பட காரணமாக இருக்கிறது.

செரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்

எரிச்சல் கொண்ட குடல்:

எரிச்சல் கொண்ட குடல்:

ஐபிஎஸ் எனப்படும் இந்தக் குடல்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிறு வீக்கம், வயிற்றுப் போக்கு, தலை சுற்றல், குமட்டல் போன்ற அசாதாரண உணர்வுகளைப் பெற்றிருப்பார்கள். உங்களுக்கு ஐபிஎஸ் பிரச்சினையால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது என்றால் பால் சார்ந்த உணவு போன்ற உணவுக்கட்டுப்பாட்டை விதித்து உங்கள் குறைகளை சரி செய்வார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things That Can Cause Diarrhea

Food alone does not cause diarrhea. Therefore, there are numerous factors beyond diet that can cause diarrhea. This article lists the top 10 factors.
Story first published: Saturday, July 20, 2019, 16:29 [IST]