எந்த காரணத்திற்காகவும் இனிமே பேய் படம் பார்க்காம இருக்காதீங்க...ஏனா அதுல அவ்வளவு நல்லது இருக்கு...!

பேய் படங்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் அவை உங்களுக்கு பயத்தை மட்டும் தருவதில்லை மாறாக ஆரோக்கியத்தையும் தருகிறது.

இன்றைய உலகில் படங்கள் பார்ப்பது என்பது கிட்டதட்ட அனைவருக்குமே இருக்கும் ஒரு பழக்கமாகும். உலகின் இலாபகரமான தொழில்களில் முதல் வரிசையில் இருப்பது திரைப்படங்கள்தான். இதில் ஒவ்வொரு வயதினருக்கும் பிடித்த வகை படங்கள் என்று ஒன்று இருக்கும். ஆனால் அனைத்து வயதினரும் விரும்பி பார்க்கும் அதேசமயம் பயப்படும் ஒரு படம் என்றால் பேய் படங்கள்தான்.

surprising health benefits of watching horror movies

பேய் படங்கள் என்னதான் நம்மை பயமுறுத்தினாலும் கையால் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டை வழியாக அதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதற்கு சான்றுதான் பல பேய்படங்களின் இமாலய வெற்றிகள். பேய் படங்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் அவை உங்களுக்கு பயத்தை மட்டும் தருவதில்லை மாறாக ஆரோக்கியத்தையும் தருகிறது. உண்மைதான் பேய் படங்கள் பார்ப்பதால் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பேய் படங்கள் பார்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதட்டம் மற்றும் கவலைகளை போக்கும்

பதட்டம் மற்றும் கவலைகளை போக்கும்

பேய் படங்களை பார்க்கும் போது நமது மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும், இந்த நேரத்தில் நமது மூளை அட்ரினலின், குளுக்கோஸ் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் சுரப்பை தூண்டுகிறது. இந்த படங்களை பார்க்கும் போது வெளியுலகத்தின் ஆபத்துகளிலும், தொல்லைகளிலும் இருந்து தப்பித்து நிம்மதியாக உணருவோம்.

மூளையின் செயல்திறன்

மூளையின் செயல்திறன்

ஆய்வுகளின் படி பேய் படங்கள் பார்க்கும் போது நமது மூளை நியூரோட்ரான்ஸ்மீட்டர் என்னும் நரம்பியல் கடத்திகளை அதிகம் வெளியிடுகிறது. இது நமது மூளையின் செயல்திறனை அதிகரிப்பதுடன் நமது எச்சரிக்கை உணர்வையும் அதிகரிக்கிறது. மேலும் இது நமக்கு தினசரி சவால்களை சந்திக்கும் தைரியத்தையும் வழங்குகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

திகில் படங்களை பார்க்கும்போது நமது உடலுக்குள் அட்ரினலின் அதிகம் சுரப்பதை நாம் எளிதில் உணரலாம். வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு தோன்றும். இந்த அட்ரினலின் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும். திகில் படங்கள் பார்த்து முடித்து பிறகு ஆண், பெண் இருவருக்கும் அவர்களின் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

கலோரிகளை எரிக்கும்

கலோரிகளை எரிக்கும்

ஜிம் சென்று உடலை குறைக்க நேரமில்லையா? கவலையே வேண்டாம் 90 நிமிடங்கள் பேய் படங்கள் பார்ப்பது உங்கள் உடலில் இருந்து கிட்டதட்ட 113 கலோரிகளை எரிக்கும். இந்த கலோரிகளை நீங்கள் உடற்பயிற்சி மூலம் கரைக்க வேண்டுமென்றால் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் உடல் எடையை பராமரிக்க இதைவிட எளிய வழி எதுவுமில்லை.

உறவுகளுக்கு நல்லது

உறவுகளுக்கு நல்லது

நாம் பயத்தில் இருக்கும்போது நமது மூளை நல்ல ஹார்மோன்களான டோபமைன் மற்றும் செரோட்டினினை அதிகம் வெளியிடுகிறது. நாம் வேறொருவரின் மீது காதலில் விழும்போது நமக்குள் சுரக்கும் ஹார்மோன்கள் இதுதான். இதையெல்லாம் விட பேய் படங்கள் இருவருக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்க பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மரபணுக்களை தூண்டும்

மரபணுக்களை தூண்டும்

நமது தற்கால வாழ்க்கைமுறை கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்துவதில்லை. ஆனால் அப்படி செயல்படுவதற்கான ஆசைகள் நமது மரபணுக்களில் இருக்கும். திகில் படங்களை பார்ப்பது உங்களுக்கு இந்த எண்ணத்தை அதிகரித்து, கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க உதவும்.

மனஅழுத்தத்தை குறைக்கும்

மனஅழுத்தத்தை குறைக்கும்

உங்களை மனஅழுத்தம் வாட்டி வதைக்கிறது எனில் நீங்கள் அதனை விரட்டியடிக்க உதவும் எளிய வழி பேய் படங்கள் பார்ப்பதாகும். ஆனால் இந்த டெக்னிக் சரியாக செயல்பட வேண்டுமென்றால் நீங்கள் இதுவரை பார்க்காத புதிய பேய் படத்தைதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே பார்த்த படத்தை பார்க்கும்போது சுவாரஸ்யமோ, பதட்டமோ இருக்காது.

பயத்தை எதிர்கொள்ள உதவும்

பயத்தை எதிர்கொள்ள உதவும்

சிலர் சிறிய விஷயங்களுக்கு கூட பயப்படுபவராக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பேய் படங்களை பார்க்கும்போது அவர்களுக்குள் தானாக தங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். பூச்சிகள், நாய், இருட்டு போன்ற சிறிய விஷயங்களுக்காக பயப்படுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்வார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion