Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
சாதாரண இந்த பழக்கங்கள் இருப்பவர்கள் 100 ஆண்டுகள் வாழப்போவது உறுதியாம் தெரியுமா?
நமது முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ காரணமாக இருந்தது அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையும், ஆரோக்கியமான உணவுமுறையும்தான்.
100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. அனைவருக்குமே இந்த பூமியில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் எதார்த்தத்தில் அது நடப்பதில்லை. ஏனெனில் மாறிவிட்ட காலசூழலும், வாழ்க்கை முறையும் நமது ஆயுளை குறைத்து விட்டது. நமது முன்னோர்களின் சராசரி ஆயுட்காலம் 80 ஆண்டுகளாய் இருந்தது. ஆனால் தற்போதைய தலைமுறையினரின் ஆயுட்காலம் அதில் பாதியாக குறைந்து விட்டது.

நமது முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ காரணமாக இருந்தது அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையும், ஆரோக்கியமான உணவுமுறையும்தான். ஆனால் தற்போதைய நிலை அதற்கு நேரெதிராக உள்ளது. ஆனாலும் இந்த காலத்திலும் 100 வயது வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கைதான் குறைந்து விட்டது. இப்போதும் நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். 100 ஆண்டுகள் வாழ்வதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆராய்ச்சி
உலகம் முழுவதும் பல நாடுகளில் 100 வயதை தாண்டியும் வாள்பவர்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபத்தில் 100 வயதை தாண்டி வாழ்பவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களுக்குள் சில அறிகுறிகள் பொதுவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் பெரும்பாலும் 100 ஆண்டுகள் கண்டிப்பாக வாழ்வார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், அதற்கு காரணம் அவை அனைத்தும் ஆரோக்கியமான பழக்கமாக இருப்பதுதான். நீங்கள் 100 ஆண்டுகள் வாழப்போவதற்கான அறிகுறிகள் என்னென்ன மேற்கொண்டு பார்க்கலாம்.

உங்கள் வயதை விட இளமையாக உணருவது
100 வயதை தாண்டியவர்கள் அனைவரும் கூறும் ஒரு பொதுவான கருத்து அவர்கள் எப்பொழுதும் தங்கள் வயதை எண்களை கொண்டு கணக்கிடுவதில்லை. நீங்கள் இளமையாக உணர்ந்தால் உங்கள் உண்மையான வயதை விட எத்தனை ஆண்டுகள் இளமையாக உணருகிறீர்கள் என்பது முக்கியம். உங்கள் உண்மையான வயதை விட இளமையாக உணருவது நீங்கள் நீண்ட காலம் வாழப்போவதற்கான அறிகுறி ஆகும். ஆய்வுகளில் உண்மையான வயதை விட இளமையாக உணருபவர்கள் மற்றவர்களை விட நீண்ட காலம் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உற்சாகமாக உணருவது
உங்கள் மனதிற்குள் உங்கள் உடலில் என்ன நடக்கிறது என்று நினைக்கிறீர்களோ அதுவே உங்கள் உடலுக்கு நடக்கும் என்று நீண்ட காலம் வாழ்பவர்கள் கூறுகிறார்கள். ஆய்வு முடிவில் எப்போதும் உற்சாகமாக இருப்பவர்களுக்கு புற்றுநோய், மாரடைப்பு மற்றும் இதய நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை என்று கூறப்படுகிறது. உங்கள் மனதில் எப்போதும் உற்சாகம் நிரம்பியிருக்கிறதா நீங்கள் உங்கள் ஆயுளை நினைத்து கவலைப்பட தேவையில்லை.

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது
இது நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டதுதான். ஆனால் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சாப்பிடுபவர்கள் அதிக காலம் வாழ்வதற்கான ஆதாரங்கள் உள்ளது. அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடும் பெண்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் வாய்ப்பு 46 சதவீதம் உள்ளது. அதேபோல ஆண்களுக்கு 53 சதவீதம் உள்ளது. 100 வயதை கடந்தவர்கள் அனைவருமே இப்படிப்பட்டவர்கள்தான். உங்களுக்கும் காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா உங்களுக்கு ஆயுசு கெட்டிதான்.

அதிக மீன் சாப்பிடுவது
சிலருக்கு கடல் உணவுகள் பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் 100 ஆண்டுகள் வாழ வாய்ப்புகள் மிகக்குறைவுதான். அதிகளவு கடல் உணவுகள் சாப்பிடும்போது அதில் இருக்கும் ஒமேகா 3 அமிலம் உங்கள் ஆயுளை அதிகரிக்கும் பணியை செய்கிறது. ஆய்வுகளின் படி அதிகளவு மீன் சாப்பிடுகிறவர்களுக்கு 19 சதவீதம் மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. நீங்கள் மீன் அதிகம் சாப்பிடுபவராக இருந்தால் மேலும் அதிகம் சாப்பிடுங்கள், மீன் சாப்பிடாதவராக இருந்தால் இனியாவது சாப்பிட தொடங்குங்கள்.

குட்டித்தூக்கம்
குட்டித்தூக்கத்தை விரும்பாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். நீண்ட காலம் வாழ்ந்த அனைவருமே இந்த பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். குட்டித்தூக்கம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி க்ரீக்கில் இருக்கும் ஒரு இக்ரியா தீவில்தான் உலகிலேயே அதிக 100 வயதை கடந்தவர்கள் இருக்கிறார்கள். இங்குள்ள அனைவருமே மதியம் குட்டித்தூக்கம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். மதிய நேரத்தில் 30 நிமிடம் தூங்குவது உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை 37 சதேவீதம் குறைக்கும்.

சுறுசுறுப்பாக இருக்கிறீர்களா?
நீண்ட காலம் வாழ போகிறவர்களால் கொஞ்ச நேரம் கூட சும்மா இருக்க முடியாது. எப்பொழுதும் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பது, சரியான நேரத்தில் உடற்பயிற்சி செய்வது போன்றவை நீங்கள் 100 ஆண்டுகள் வாழப்போவதற்கான அறிகுறியாகும். தினமும் 1பி நிமிடம் உடற்பயிற்சி செய்வது உங்களின் ஆயுளை 1.8 ஆண்டுகள் அதிகரிக்கும்.

ஒல்லியாக இருப்பது
வயது அதிகரிக்க அதிகரிக்க உங்கள் வடிவத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும். எந்தவித அதீத முயற்சிகளும் இன்றி தானாகவே நீங்கள் எப்பொழுதும் உங்கள் வடிவத்தை பராமரித்தால் உங்களுக்கு ஆயுள் நிச்சயம் அதிகம்தான். ஆண்களின் இடுப்பின் சுற்றளவு 31.5 இன்ச்சும் பெண்களின் இடுப்பின் சுற்றளவு 37 இன்ச்சும் இருந்தால் அவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகிறது.

நல்ல நண்பர்களுடன் இருப்பது
வாழ்க்கையின் மகிழ்ச்சியே அதனை மற்றவர்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டு வாழ்வதில்தான் இருக்கிறது. சிலர் எப்பொழுதும் தன்னை சுற்றி நண்பர்கள் கூட்டம் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஆயுள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகிறது. உளவியல்ரீதியாகவும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











