Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
நீங்கள் சாப்பிடும் உணவு விஷமாக மாறியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ!
"கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்" இப்படி கும்மாளமாக பாட வேண்டிய நம்மை "சோதனை மேல் சோதனை" என்று பாட வைத்து விட்டனர். கடந்த சில வாரங்களாக பிராய்லர் மீனை பற்றிய தகவல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டி வரும் இந்த வேளையில் நாம் சாப்பிட கூடிய உணவு விஷயமா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க சில எளிய வழிகள் உள்ளது.

நம் உடம்பில் ஏற்பட கூடிய ஒரு சில மாற்றங்களை வைத்தே இதை கண்டறிய முடியும். அப்படி விஷத் தன்மையாக மாறி இருந்தால் அதை சரி செய்யவும் சில ஆயுர்வேத வழி முறைகள் உண்டு. உணவு விஷமாக மாறுவதால் அபாயமும் பாதிப்பும் நமக்கு தான் என்பதை மறவாதீர்கள். இனி நாம் உண்ணும் உணவு விஷ தன்மை பெற்றுள்ளதா? இல்லையா? என்பதை தெரிவிக்கும் அறிகுறிகளை கண்டறியலாம்.

எது விஷம்?
பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்கும் உணவுங்களை ஒரு போதும் நாம் நம்பி விட கூடாது. இவற்றில் தான் மொத்த விஷமே அடங்கி இருக்கும்.
சில உணவுகள் பார்ப்பதற்கு ஏதோ மாதிரி இருக்கும், ஆனால் இவற்றில் இருக்க கூடிய சத்துக்கள் அளவுக்கு அதிகமானவை. எனவே உணவின் தோற்றத்தை வைத்து எப்போதும் எடை போடாதீர்கள்.

வியர்த்தல்
நீங்கள் சாப்பிட்ட உணவு விஷ தன்மையானது என்பதை உணர்த்தும் முதல் அறிகுறி இதுதான். ஆம், சாப்பிட்டதும் உடலில் அதிக அளவில் வியர்த்து கொட்டினால் மோசமான நிலையில் நீங்கள் உள்ளீர்கள் என்று அர்த்தம்.
சிலருக்கு நேற்றோ அல்லது அதற்கு முன் தினமோ சாப்பிட்ட உணவின் விஷ தன்மை கூட இன்னும் வயிற்று பகுதியில் தேங்கி இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதுவும் மோசமான நிலையை உண்டாக்கி விடும்.

குழப்ப நிலை
பல நாட்களாக நீங்கள் உண்ண கூடிய உணவு இது போன்ற விஷ தன்மையுள்ளதாக இருந்தால் அதற்கான அறிகுறியை உங்களின் மூளை காட்டி கொடுத்து விடும்.
உடலில் சோர்வான, தளர்வான நிலையோ அல்லது மந்தமான, குழம்பிய நிலையோ ஏற்பட்டால் உணவு விஷமாக மாறியுள்ளது என்று அர்த்தம்.

அடி வயிற்று வலி
பெரும்பாலும் இது வெளிப்படையான ஒரு அறிகுறியாகவே மாறியுள்ளது. விஷமாக மாற கூடிய உணவுகள் உடலில் சென்றதும் இந்த அறிகுறி உங்களுக்கு தென்பட ஆரம்பிக்கும்.
அதாவது, வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டு மோசமான அனுபவம் உங்களுக்கு உண்டாகும். சிலருக்கு வயிற்றை இறுக்கமாக பிடித்து வைத்திருப்பது போன்ற உணர்வும் ஏற்படும்.

குளிர்ந்த நிலை
விஷ தன்மையுள்ள உணவுகளை சாப்பிட்ட சில மணி நேரங்களில் உடலின் தட்பவெப்ப நிலை மாறி விடும். குறிப்பாக உடல் முழுக்க ஜில்லென்று உருவாகும். இப்படிப்பட்ட நிலை கூட உணவு விஷமாக மாறியதற்கான அறிகுறிதான்.

வாந்தி
சாப்பிட்ட உணவு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளை வைத்து மிக சுலபமாக கண்டறியலாம். இவை முதல் நிலை அறிகுறியாகவே கருதப்படுகிறது.
இந்த வகை அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை தர கூடும்.

தலை வலி
விஷ தன்மையுள்ள உணவுகளை நீங்கள் சாப்பிட்டுள்ளீர்கள் என்பதை தலை வலியின் மூலமும் நாம் அறிந்து கொள்ள இயலும்.
எந்த வித காரணமும் இல்லாமல் தலைவலி வந்தால், நாம் சாப்பிட்ட உணவு கூட இதற்கு மூல காரணமாக இருக்கலாம்.

வயிற்று போக்கு
உணவு விஷ தன்மையுள்ளதாக மாறினால் இந்த அவசர கால அறிகுறியை வைத்து கண்டறியலாம். தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்பட்டால் அது கூட இதன் அறிகுறியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
உண்ட உணவு சரியாக செரிமானம் அடையாமல் வயிற்று போக்காக அதன் பாதிப்பை நம்மிடம் காட்டும்.

காய்ச்சல்
பசியின்மை, சோர்வு இது போன்ற அறிகுறிகளோடு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இது உணவு விஷமாக மாறியதன் மூல காரணமாக நிச்சயம் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சில சமயங்களில் வயிற்று பகுதியில் பலவித தொற்றுக்களை உருவாக்கும் தன்மையும் இதற்குண்டு.



Click it and Unblock the Notifications