Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மாத்திரை சாப்பிடும்போது வெந்நீரை பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தினால் விஷமாக மாறி விடுமா?
நாளுக்கு நாள் நோய்களின் வீரியம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது ஒரு புறம் இருக்க இதற்கான தடுப்புகளும் மற்றொரு புறத்தில் கண்டுபிடித்து கொண்டே வருகின்றனர். நோய்கள் அதிகரிப்பதால் மருந்து- மாத்திரைகளின் அளவும் பல மடங்கு உயர்ந்துள்ளது. காலையில் எழுந்ததும் தனது வாழ்வை மாத்திரைகளுடன் தான் பலர் தொடங்குகின்றனர். இது உண்மையிலே மோசமான நிலை தான்.

ஒவ்வொரு பொருளையும் உட்கொள்ளும் போது அவற்றின் தன்மை அறிந்து நாம் எடுத்து கொள்ள வேண்டும். இல்லையேல் அவை நம் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். அந்த வகையில் உடல்நல கோளாறுகளை தீர்க்க பயன்படும் மாத்திரைகளும் அடங்கும். மாத்திரைகளை நாம் நீண்ட நாட்களாக தவறான முறையிலே சாப்பிட்டு வருகின்றோம்.
இவ்வாறு சாப்பிட்டு வருவதால் நிச்சயம் மேலும் பல ஆபத்துகள் நம்மை நோக்கி வர தொடங்கும். மாத்திரைகளை சுடு நீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? அல்லது குளிர்ந்த நீரை பயன்படுத்தலாமா? சரியான நீரை பயன்படுத்தவில்லை என்றால் எப்படிப்பட்ட அபாயங்கள் உண்டாகும் போன்ற பல தகவல்களை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

மாத்திரையும் நாமும்!
எப்படி மொபைல் போனும் நாமும் ஒன்றாக உள்ளோமோ அதே போன்று மாத்திரைகளும் நாமும் இன்றைய கால நிலையில் ஒன்றாகி விட்டோம். இந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கு சில காரணிகள் உண்டு. சுற்றுப்புற சூழல், அன்றாட பழக்க வழக்கங்கள், உணவு முறை போன்றவற்றை கூறலாம். பிறந்த குழந்தை கூட இதில் இருந்து தப்பவில்லை என்பதே நிதர்சனம்.

நீர் அவசியம்!
பொதுவாக நாம் உட்கொள்ளும் மருந்துகளை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்ல ஒரு கருவியாக இருப்பவை தான் திரவ பொருட்கள். இதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மருந்துகளை சாப்பிட்ட பின்னர் அவற்றை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்லும் வாகனமாக நீர் தான் விளங்குகிறது.

வேறு விதம்
மாத்திரைகளில் பலவிதங்கள் உண்டு. அவற்றின் தன்மைக்கேற்ப தான் சரியான தட்பவெப்பம் கொண்ட நீரை நாம் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கேப்சுயூல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரைகளை சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்பவெப்ப நீருடன் நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

அறையின் தட்பவெப்பம்
பெரும்பாலும் நாம் உட்கொள்ளும் மாத்திரைகான நீரை, நமது அறையின் தட்பவெப்பத்தை பொருத்தே நாம் எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின் டி, கால்சியம் போன்ற மாத்திரைகளை பாலை பயன்படுத்தி நாம் குடித்து வரலாம். ஆனால், இது எல்லா வகை மாத்திரைகளுக்கும் உகந்தது அல்ல.

வெந்நீரை தவிர்க்கவும்!
சில வகையான மாத்திரைகளுக்கு வெந்நீரை நாம் பயன்படுத்த கூடாது. முக்கியமாக கேப்சியூல் வகை மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி நாம் குடித்து வந்தால் அவை நாக்கிலே ஒட்டி கொள்ளும். கேப்சியூல் மாத்திரைகளை அறையின் தட்பவெப்பத்தில் உள்ள நீரை கொண்டு சாப்பிடலாம்.

இரும்பல், காய்ச்சல்
பாராசிட்டமால் போன்ற காய்ச்சல் வகை மாத்திரைகள் விரைவில் கரைய வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம். மேலும், தொண்டையில் வலி, இரும்பல் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை வெண்ணீருடன் எடுத்து கொள்ளலாம்.

எவ்வளவு நீர்?
பலர் மாத்திரைகளை அப்படியே சாக்லேட் போன்று சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால், அவ்வாறு சாப்பிடவது தவறு. மாத்திரை சாப்பிடும் போது போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும்.
இல்லையேல் வாயில் இருந்து வயிற்று பகுதிக்கு அவை செல்லாது. இதனால் அஜீரண கோளாறு ஏற்பட்டு, மாத்திரையும் சரியாக தனது வேலையை செய்ய இயலாது.

எப்போது?
சாப்பிட அடுத்த நொடியே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், அப்படி மாத்திரைகளை எடுத்து கொள்வது மோசமான விபரீத நிலையை நமக்கு தந்து விடும். ஆதலால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடம் கழித்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது.

முடிவு
ஆதலால் எப்போது மாத்திரைகளை எடுத்து கொண்டாலும் அவற்றை அதிக சூடும், அதிக குளிர்ந்த தன்மையும் இல்லாத மிதமான நீரை பயன்படுத்தி சாப்பிடலாம். மேலும் மாத்திரைகளை சாப்பிடும் போது 1 கிளாஸ் நீரை பருகுவது சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
