For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால், வாழ்வில் இப்படிப்பட்ட ஆபத்துகளை சந்திக்க நேரிடும்!

|

நாள் முழுக்க உழைத்த மனித இனம் இரவில் தனது சோர்வை நீக்கி கொள்ள ஓய்வை தேடுவது இயல்பு தான். ஓய்வு என்பது அளவாக இருந்தால் எந்த வித பாதிப்பும் கிடையாது. இதுவே அளவுக்கு அதிகமாக இருந்தால் நிச்சயம் இதனால் பல்வேறு பாதிப்புகள் உடலுக்கு உண்டாகும். உடல் நலத்தை சமநிலையில் வைத்து கொள்ளவே இந்த ஓய்வு உதவுகிறது.

8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால், வாழ்வில் இப்படிப்பட்ட ஆபத்துகளை சந்திக்க நேரிடும்!

சராசரியாக 7 முதல் 8 மணி நேர தூக்கமே ஒரு மனிதனுக்கு போதுமானது. இந்த அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ எண்ணற்ற வகையில் நாம் பாதிக்கப் படுவோம். 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கம்

தூக்கம்

உடலை ஓய்வு நிலையில் வைத்து கொள்ள உதவுவதே இந்த ஓய்வு தான். இரவு நேரத்தில் தூங்கும் நீண்ட நேர ஓய்வும், குறைந்த நேரம் ஓய்வெடுக்கும் "குட்டி தூக்கம்" போன்றவையும் உடலுக்கு நல்லது தான். ஆரோக்கியமான வாழ்வை பெற ஓய்வு மிகவும் அவசியமானது.

உடல் எடை

உடல் எடை

8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் முதலில் பாதிக்கப்படுவது உங்களின் உடல் எடை தான். அதிக தூக்கம் உடல் எடையை அபரிமிதமாக அதிகரித்து விட கூடும். இதனால் உங்களுக்கு மேலும் மேலும் தூங்க வேண்டும் என்கிற எண்ணம் தான் அதிகரிக்கும்.

இதய நோய்கள்

இதய நோய்கள்

நீண்ட நேரம் தூங்குவதால் மிக குறைந்த காலத்திலே உங்களுக்கு இதய நோய்கள் வந்து விடும். தூக்கத்தை பற்றிய ஆய்வில், அதிக நேரம் தூங்குவதால் இதய நோய் ஏற்பட்டு அதனால் மரணிப்போர் 34 சதவீதம் கொண்டவராக இருக்கின்றனர் என இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகிறது. எனவே, 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதை குறைத்து கொள்ளுங்கள்.

MOST READ: வழுக்கையில் உடனே முடி வளர, வெங்காயத்த இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவங்க!

மூளை திறன்

மூளை திறன்

அதிக நேரம் தூங்குவதால் மூளையின் திறன் குறைய தொடங்கும். மேலும், ஞாபக திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடும். புத்தி கூர்மையையும் இதனால் பாதிக்கப்படும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தலைவலி

தலைவலி

8 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு நிச்சயம் தலைவலி பிரச்சினை உண்டாக கூடும். அதிக நேரம் தூங்குவதால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு பலவித பிரச்சினைகள் உண்டாகும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவோருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் ஹார்மோன் பாதிப்பும் ஏற்படும். உங்களின் தூக்கம்படி படியாக உறுப்புகளையும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன நிலை சார்ந்த பாதிப்புகளுக்கும் தூக்கத்திற்கும் தொடர்புண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். 8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும்.

இதனால் பலவித உளவியல் சார்ந்த பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படும். வாழ்வில் நிம்மதியின்மையை தருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

MOST READ: தும்பல் வந்தால் மூக்கை அடைக்காதீர்கள்! மீறி அடைத்தால் என்னென்ன அபாயங்கள் உண்டாகும் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Problems Faced By People Who Sleep For More than 8 Hours

Here we listed some of the problems faced by people who sleep for more that 8 hours.
Story first published: Wednesday, April 10, 2019, 17:52 [IST]
Desktop Bottom Promotion