For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்மை குறைவை ஏற்படுத்துமா PUBG கேம்..! மீம்களில் வலம் வரும் PUBG சர்ச்சை...!

|

இன்று பல ஆன்லைன் கேம்களையெல்லாம் அள்ளி சாப்பிட்டுவிட்ட மிக பிரபலமான கேம் தான் PUBG. ஒரே வருடத்தில் பலவித சாதனைகளை இந்த PUBG கேம் செய்துள்ளது. இந்த கேம் 2.4 கோடி பிரதிகளை விற்று உலக அளவில் புதுவித சாதனையை படைத்துள்ளது. இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர் இந்த PUBG கேமை விளையாடி இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இப்படி சாதனைகளை அடுக்கி கொண்டே போகிறது இந்த PUBG கேம்.

ஆண்களுக்கு ஆண்மை குறைவை ஏற்படுத்துமா PUBG கேம்..?!

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி ஆடுகின்றனர். இவ்வளவு பிரபலமான இந்த கேமால் தான் பலவித பிரச்சினைகளும் கோளாறுகளும் ஏற்படுகின்றன. அதுவும் ஒருவரின் உயிரையே இந்த PUBG கேம் வாங்கி விடும் அளவிற்கு வேரூன்றி உள்ளது. இந்த கேமினால் எக்கசக்க பாதிப்புகள் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. என்னதான் பல்வேறு சாதனைகளை இது படைத்திருந்தாலும் இதன் மற்ற தீமைகளினால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

இப்போதெல்லாம் ஒரு சில மீம்ஸ்கள் கூட வளம் வருகின்றன. அதாவது, "PUBG கேம் விளையாடும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு" ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையா..? என்பதையும் இதனால் வேறு என்னென்ன தீங்குகள் உள்ளன என்பதையும் இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிர வைக்கும் PUBG..!

அதிர வைக்கும் PUBG..!

பேர கேட்டாலே சும்மா அதிருதுலா..?!" என்கிற வசனத்தை போலவே PUBG என்கிற பெயரை சொன்னாலே ஒரு கூட்டம் மொபைலை தூக்கி கொண்டு வந்து விடும். இந்த கேம் எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு நமது உடலை முழுவதுமாக சிதைத்து விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மிருக தன்மை வளர..!

மிருக தன்மை வளர..!

PUBG விளையாட்டில், இரக்கமின்றி ஒரு உயிரை கொல்வது போன்று விளையாட்டின் அமைப்பு இருக்கும். இது பலருக்கும் வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் இருக்கலாம். ஆனால், இது நமது மனதுக்குள் மிருக தன்மையை உருவாக்கி விடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

உயிர் இழப்புகள்..!

உயிர் இழப்புகள்..!

"ப்ளூ வேல்" கேம் போன்றே இந்த விளையாட்டும் சில மோசமான விளைவுகளை இளைஞர்கள் இடையே கொண்டு வந்துள்ளது. வீட்டில் PUBG விளையாட விடாததால் பெற்றோரையே தாக்கும் அளவிற்கு இதன் பாதிப்பு உள்ளது. இது மேலும் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்த கூடும் அளவிற்கு விபரீத விளையாட்டாக உள்ளது.

தடை..!

தடை..!

இந்த PUBG-யின் மோசமான பாதிப்பால் பல நாடுகளில் இதை தடை செய்தும் உள்ளனர். அதிலும் குறிப்பாக சீன அரசு இந்த விளையாட்டை முழுவதுமாக தடை செய்து உள்ளது.

இது அந்நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மனதளவிலும் உடல் அளவிலும் பாதிப்பதால் சீன அரசு தடை செய்துள்ளது.

MOST READ: வெறும் 2 வாரத்தில் உடல் எடையை குறைக்க இந்த பொடிய தண்ணியில கலந்து குடிங்க..!

எந்நேரமும் PUBG..!

எந்நேரமும் PUBG..!

பொதுவாக வீடியோ கேம் விளையாடுவதே மன உளைச்சலை ஏற்படுத்த கூடிய ஒன்று தான். இதுவே ஒரே இடத்தில் மணி கணக்கில் மற்றவரை சாக அடிக்கும் கோரமான விளையாட்டை நாம் விளையாடினால் அது நமது மூளையை பாதித்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நமக்கு தெரியாது..!

நமக்கு தெரியாது..!

PUBG கேமை அதிக நேரம் விளையாடுபவர்களுக்கு பலவித பாதிப்புகள் வரும். அதில் பலரும் அறியாதது இதுதான்.

அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாடுவதால் எலும்புகள் மற்றும் தசைகளில் வீக்கம் ஏற்படும். இது நாளுக்கு நாள் அதிகமாகி நடக்கவே முடியாமல் கூட ஆகலாம்.

விஞ்ஞான அடிமை..!

விஞ்ஞான அடிமை..!

புகை பழக்கம், மது பழக்கம் போன்றே இந்த வீடியோ கேம் பழக்கமும் நமக்கு வந்துள்ளது. இது நாளுக்கு நாளுக்கு அதிகமாகி வெறி தனத்தை நமக்குள் உருவாக்கும்.

புதுவித விஞ்ஞான அடிமைகளாக நமது சந்ததி உருவாகி கொண்டிருக்கிறது.

பார்வை குறைபாடு..!

பார்வை குறைபாடு..!

முன்பை விட PUBG விளையாட்டு அதிகம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதை தொடர்ந்து விளையாடுவதால் தலை வலி, மூளை பாதிப்பு போன்ற பிரச்சினைகள் வர தொடங்கும். முக்கியமாக கண் பார்வை பாதிக்க கூடும்.

MOST READ: தினமும் உங்கள் காதலி(அ) மனைவியை கட்டிப்பிடிப்பதால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும்..?

தூக்கமின்மை..!

தூக்கமின்மை..!

பொதுவாக இது போன்ற கேம்களில் நாம் மூழ்கி விட்டால் பசி கூட நமக்கு எடுக்காது. இது நமது உடல் அமைப்பையே மாற்றி விட கூடிய தன்மை கொண்டதாம்.

மேலும், தூக்கமின்மை, மன அழுத்தம், மயக்கம், சோம்பல் போன்றவையும் நமக்கு பரிசாக கிடைக்க கூடும்.

ஆண்மை குறைவா..?

ஆண்மை குறைவா..?

இன்று பல மீம்களிலும் இந்த வாக்கியம் வளம் வருகிறது. அதாவது, PUBG விளையாடும் ஆண்களுக்கு "ஆண்மை குறைவு" ஏற்படுவதாக மீம்கள் சமூக வலைத்தளங்களில் இடம் பெறுகின்றன. இது இன்னும் விஞ்ஞான பூர்வமாக நிருபிக்க படவில்லை என்பதே உண்மை.

குழந்தைகளுக்கு ஆபத்து..!

குழந்தைகளுக்கு ஆபத்து..!

குழந்தைகள் இந்த கேமை அத்தியாகும் விளையாடுவதால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகமாகி மிக மோசமான தாக்கத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தும்.

அடுத்த தலைமுறையினர் எப்படி வளர வேண்டும் என்கிற பொறுப்பு நமது கையில் தான் உள்ளது. எனவே, எப்போதும் இந்த கேமை விளையாடி நேரத்தை வீணாக்காதீர்கள் நண்பர்களே.

இளைஞர்களுக்கு வேண்டுகோள்..!

இளைஞர்களுக்கு வேண்டுகோள்..!

இளைஞர்களே..! நீங்கள் என்ன செய்கிறீர்க்ளோ அதையே தான் உங்களது வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்குகளும் செய்வார்கள். எனவே, இந்த விளையாட்டிலே உங்கள் கவனத்தை செலுத்தாமல் வேறு பல உபயோகம் உள்ள விஷயங்களுக்கு செலவிடுங்கள். "எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது" என்கிற கடமையை மறவாதீர்கள்.

MOST READ: நூறு வயசு வர வாழணுமா..? அப்போ தினமும் இந்த சின்ன சின்ன விஷயத்த மறக்காம செய்யுங்க...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Negative Effects Of Playing PUBG Game

This article talks about the negative side effects of PUBG game.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more