For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைவமா? அசைவமா? டூத்பேஸ்ட் வாங்கும் போது இத கவனிக்காம வாங்காதீங்க! மீறினால் ஆபத்து நிச்சயம்!

|

காலையில் எழுந்துக்கறதே இங்கு பலருக்கு நெடு நாள் போராட்டமாக உள்ளது. அப்படியே தூங்கி எழுந்துக்கலாம்னு நாம்ம நினைச்சாலும் நம்மோட மொபைல் நம்மை சும்மா விட மாட்டுது. எப்படியோ எல்லாத்தையும் கடந்து, தூக்கத்தை ஒரு வழியாக ஓரம் கட்டி வச்சிட்டு பல் துலக்க தான் போவோம். பல விளம்பரங்கள்ல "உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா, காரம் இருக்கா" இப்படித்தான் கேக்குறாங்களே தவிர, உங்க டூத்பேஸ்ட் சைவமா, அசைவமா-னு கேட்க மாட்டுறாங்க.

நீங்க பயன்படுத்தும் டூத்பேஸ்ட் சைவமா? அசைவமா? இவற்றில் எது அபாயகரமானது தெரியுமா?!

இது வரைக்கும் இப்படி ஒரு யோசனை உங்களுக்கு வந்துருக்காது. ஆனா, இன்னைக்கு காலையில நான் பல் துலக்கும் போது எனக்கு இந்த சந்தேகம் வந்துச்சி. சைவ டூத்பேஸ்ட் சிறந்ததா? இல்ல அசைவ டூத்பேஸ்ட் சிறந்ததா? இந்த கேள்விக்கு விடையை தேடி பார்த்தேன். எனக்கு கிடைச்ச விடையை உங்க கிட்ட பகிர தான் இந்த பதிவ எழுதுறேன்.

உண்மையிலே எந்த டூத்பேஸ்ட் சிறந்தது? எதை பயன்படுத்தினால் நமக்கு எந்தவித ஆபத்தும் வராது? தவறான டூத்பேஸ்ட் பயன்படுத்தினால் என்னமாதிரியான விளைவுகள் நமக்கு உண்டாகும்... இப்படி பல கேள்விகளுக்கான விடையை இந்த தொகுப்பில் அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்மூடித்தனம்

கண்மூடித்தனம்

நாம் கண்மூடி தனமாக எதையுமே பயன்படுத்த கூடாது. ஒரு பொருளை எந்தவித பரிசோதனையும் இன்றி நாம் வாங்குவதால் தான் பல்வேறு அபாயங்கள் நம் உடலுக்கு உண்டாகுகின்றன. கடைகளில் விற்கப்படும் சில வகையான சாதாரண டூத்பேஸ்ட்கள் நமது ஆரோக்கியத்தை கெடுப்பவையாக உள்ளன.

பச்சை நிற அங்கீகாரம்

பச்சை நிற அங்கீகாரம்

சைவ வகை டூத்பேஸ்ட்களை சதுர வடிவ பச்சை நிறத்தை வைத்து நம்மால் அடையாளம் காண முடியும். ஆனால், சில நிறுவனங்கள் இவற்றிலும் போலி தனத்தை உருவாக்குகின்றன. சைவ வகை டூத்பேஸ்ட், அசைவமா மாறுவதற்கு ஒரு முக்கிய மூல பொருள் தான் காரணம்.

PC: Mychemicalromanceisrealemo

க்ளிசரின் (glycerine)

க்ளிசரின் (glycerine)

பொதுவாகவே டூத்பேஸ்ட்களில் க்ளீசரின் என்கிற மூல பொருள் இடம் பெற்றிருக்கும். இது இரண்டு மூல பொருட்களில் இருந்து பெற படுகின்றன. ஒன்று விலங்குகளின் கொழுப்பில் இருந்து பெறப்படுபவை, வேறொன்று மரத்தின் கொழுப்பிலிருந்து பெறப்படுபவை.

சுத்த சைவமாக இருப்போர், மரத்திலிருந்து பெறப்பட்ட க்ளிசரின் சேர்த்த டூத்பேஸ்ட்டை தான் பயன்படுத்துவார்கள்.

MOST READ: இப்போ வாட்சப்பில் டி.பி -யாக வைக்குற இந்த கருப்பு ரிப்பனுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..?

பிளூரைடு

பிளூரைடு

இந்த Fluoride என்கிற மூல பொருள் நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் பல உணவு பொருட்களில் உள்ளது. இதன் அளவு அதிகமாகினால் உயிருக்கே ஆபத்தாகி விடும். இதை சரியான அளவில் பயன்படுத்தினால் எந்தவித பாதிப்பும் உண்டாகாது.

அந்த வகையில் டூத்பேஸ்ட்டில் Fluoride கலந்திருந்தால் அதன் அளவை நீங்கள் பரிசோதிக்க வேண்டும். மிக அதிகமான அளவில் இவற்றை டூத்பேஸ்ட்டில் கலந்திருந்தால் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

அசைவ டூத்பேஸ்ட்

அசைவ டூத்பேஸ்ட்

பலருக்கும் அசைவ டூத்பேஸ்ட் என்றாலே மிக மோசமான அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கும். விலங்குகளின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் சிலபல பாதிப்புகளை நமக்கு தருகின்றன. இவை பற்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்க கூடும் என ஆய்வுகள் சொல்கின்றன.

வேண்டாம்!

வேண்டாம்!

அசைவ வகை டூத்பேஸ்ட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என கூறுவதற்கு சில காரணிகளும் உண்டு. முதலில் இந்த வகை டூத்பேஸ்ட்கள் பற்களின் ஈறுகளை பாதிக்கும். இதே நிலை நாளுக்கு நாள் அதிகரித்தால் பற்கள் சொத்தையாகி ஒவ்வொன்றாக விழ தொடங்கும்.

சைவ டூத்பேஸ்ட்

சைவ டூத்பேஸ்ட்

இன்றைய கால கட்டத்தில் சைவ டூத்பேஸ்ட்கள் தான் அதிக அளவில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை பயன்படுத்துவதால் பற்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது.

மரத்திலிருந்து இதன் மூல பொருளான க்ளீசரின் எடுக்கப்படுவதால் இவை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

தவிர்க்க வேண்டும்!

தவிர்க்க வேண்டும்!

நீங்கள் டூத்பேஸ்ட் வாங்கும் போது அவற்றில் ஒரு சில மூல பொருட்கள் உள்ளதா என்பதை உற்று கவனித்து வாங்க வேண்டும்.

உதாரணத்திற்கு Propylene Glycol, parabenspetroleum, mineral oil போன்ற வேதி பொருட்கள் இல்லாத டூத்பேஸ்ட்டாக பார்த்து வாங்குவது நல்லது.

MOST READ: உங்கள் இதயம் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள் இதோ!

சிறந்தது எது?

சிறந்தது எது?

நீங்கள் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் முற்றிலும் இயற்கை வடிவில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. குறைந்த பட்சமாவது இவை இயற்கை சார்ந்த பொருட்களால் உருவாகி இருந்தால் சிறந்தது.

மேலும், புதினா, வேம்பு, இலவங்கம் ஆகியவை சேர்க்கப்பட்ட டூத்பேஸ்ட் அதிக ஆரோக்கியம் பெற்றவை என மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Using Organic Toothpaste

Here we listed some of the health benefits of using organic toothpaste.
Desktop Bottom Promotion