Latest Updates
-
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்!
நீங்க முரட்டு சிங்கிளா இருந்தா உங்களுக்கு ஆயுள் அதிகமாம்..! எப்படி தெரியுமா.?
நீங்க சிங்களா? வருத்தப்படாதீங்க... கமிட் ஆகி வாழ்க்கைய என்ஜாய் பண்றோம்னு நினைச்சிட்டு இருக்குறவங்கள விட சிங்கிளா கெத்தா நிக்குற மக்கள்தான் நூறு வருசம் சந்தோஷமா வாழ்வாங்களாம்.. அட நான் சொல்லலிங்க.. ஆய்வு சொல்லுது.. இப்போது இருக்க கூடிய நிலையில் காதலில் விழாமலும், காதல் முறிவு ஏற்பட்டவர்களும், காதலை வெறுத்து சிங்கிளாகவே இருப்போர் தான் அதிகம்.

இந்த சிங்கிள்ஸ் வாழ்க்கையிலே பலவிதம் உள்ளது. சாதா சிங்கிள்ஸ், முரட்டு சிங்கிள்ஸ், ரொம்ப முரட்டு தனமான சிங்கிள்ஸ். இந்த வகைகள் அனைத்துமே அவர்களின் காதல் ஈடுபாட்டை பொருத்து அவர்களே வகைப்படுத்தி கொண்டது. காதல் செய்பவர்களை விட காதலில் இல்லாமல் இருக்கும் சிங்கள்ஸ தான் அதிக சந்தோஷமாக இருக்கின்றனர்.
சிங்கிளாக இருப்பதால் பல வித பயன்கள் உடலுக்கும் மனதுக்கும் கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிங்கிளா இருந்தா 100 வயசு வர வாழலாமா..? இப்படி மூளையை கசக்கும் உங்களுக்கே இந்த பதிவு. வாங்க, இது எப்படி சாத்தியம் ஆகும்னு தெரிஞ்சிப்போம்.

சிங்கிள்டா..!
நம்ம ஏரிவிலேயே இது போல சொல்லி கொண்டு செம்ம கெத்தாக நடக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். ஏன், இந்த பதிவை படிக்கும் நீங்கள் கூட ஒரு சிங்கள் சிங்கமாக இருக்கலாம்.
சிங்கள் வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சியில் பல்வேறு உண்மைகள் தெரிய வந்துள்ளது. அவை அனைத்துமே நம் முழு உடல் உறுப்புகள் முதல் ஹார்மோன் வரை பலவித நன்மைகளை உண்டாக்குமாம்.

ஆராய்ச்சி..!
2015 ஆம் ஆண்டு நடந்த ஆய்வின் படி காதல் உறவில் இருப்பவர்களை காட்டிலும் எந்த ஒரு உறவிலும் இல்லாதவர்களே அதிக மன நிம்மதியுடன் இருப்பதாக குறிப்பிடுங்கின்றனர். ஏனெனில், சிங்கில்ஸ்களை சுற்றி எப்போதுமே ஒரு நண்பர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இது தான் அவர்களின் அதிக மகிழ்ச்சிக்கு காரணம் என இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

இதய பாதிப்பு
திருமணம் மற்றும் காதல் வாழ்வில் ஈடுபடும் 60 சதவீதத்தினர் கடனாளியாகவே மாறி விடுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் உறவில் கசப்பு தன்மை ஏற்பட்டு பிரிவு கூட ஏற்படும்.
சிங்கிளாக வாழும் பலருக்கும் இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், முடக்கு வாதம் போன்ற இதய கோளாறுகள் உண்டாக கூடிய வாய்ப்புகள் மிக குறைவாம்.

சுய மதிப்பு
சிக்கலாக இருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையையும் தன் சொந்த உழைப்பில் தீர்வு தர கூடிய திறன் இருக்கும். சுய மதிப்பை அதிகரிக்கும் தன்மை இவர்களுக்கு உண்டு.
வாழ்க்கையில் உள்ள மோசமான கரடு முரடான பாதைகளை கடக்கும் திறன் சிங்கிளாக இருப்பவர்களுக்கே உரியது.

இங்கே நிம்மதி..!
எங்கே நிம்மதி..? எங்கே நிம்மதி..? என பொலம்பும் பலருக்கும் சிங்கிள் வாழ்க்கை மிக அற்புதமான தீர்வை தர கூடும். வாழ்க்கை மிக நிம்மதியாக செல்வதற்கு சிங்கிள் தான் உதாரணம்.
சிங்களக இருந்தால் நிம்மதி இருக்கும், ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். மொத்தத்தில் சிங்கிள் வாழ்க்கை என்பது கம்பீரமான சிங்க வாழ்க்கையாகும்.

மகிழ்ச்சி..!
காதல் அல்லது கல்யாண உறவில் இருப்போரை காட்டிலும் சிங்கள்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிங்கிளாக இருக்கும் பெண்கள் அதிக சுதந்திரத்துடனும், சிங்கிளாக இருக்கும் ஆண்கள் எப்போதுமே இருக்கும் அதே குஜால் தன்மையுடனே இந்த பூமியை வளம் வருகின்றனர்.

எடை குறைவு
காதல் உறவில் இருக்கும் போதும், திருமண உறவில் இருக்கும் போதும் நாம் நம்மை பற்றி பெரிதும் கவனித்து கொள்ள மாட்டோம். இதனால் பரிசாக கிடைப்பது உடல் எடையும், உடல்நல குறைபாடும் தான்.
ஆனால், சிங்கிள்களுக்கு அப்படி கிடையாது. உடற்பயிற்சி, தன்னை பற்றிய அக்கறை சிங்கில்களுக்கு சற்று அதிகமாகவே உள்ளது. இதனால் அதிக ஆரோக்கியத்துடன் இவர்கள் இருப்பார்கள்.

எதையும் தாங்கும் இதயம்..!
சிங்கிளாக இருப்பவர்களுக்கு மன திடம் அதிகமாகவே இருக்கும். வாழ்வில் ஏற்பட கூடிய எல்லாவித பிரச்சினைகளையும் "டேக் இட் ஈசி" என்றே எடுத்து கொள்வார்கள்.
காதல் உறவில் இருப்பவர்களை காட்டிலும் சிங்கிள்கள் என்றாலே எதையும் தாங்கும் இதயம் என்றே போற்றப்படுகின்றனர்.

100 வயசு..!
சிங்கில்ஸ்கள் தனது வாழ்க்கையில் தனி காட்டு ராஜாவாக இருப்பவர்கள். நிம்மதியான வாழ்வும், ஆரோக்கியமான உடலும், நண்பர்களுடன் எந்நேரமும் மிக மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதால் சிங்கிள் லைப்ஃ என்றுமே வேற லெவல் தான்..!
இப்படி எப்போதுமே இவர்கள் சந்தோஷமாக இருப்பதால் இவர்களின் வாழ்நாள் கூடி 100 வயசுக்கு மேல் வாழ முடியும் என்பதை தற்போதைய ஆய்வு ஒன்று சொல்கிறது. மேற்சொன்ன காரணங்கள் தான் சிங்கிள்ஸ் 10 வயசு வரைக்கும் வாழறதுக்கான சாத்திய கூறுகள் ஆகும்.
இந்த பதிவு சிங்கிளாகவே இருந்து, பல சாதனைகளை செய்து வரும் அனைத்து சிங்கிள்களுக்கும் சமர்ப்பணம்.



Click it and Unblock the Notifications