சரக்கடிக்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் மதுவால் எந்த பக்கவிளைவுகளுமே இருக்காதாம்...!

இன்றைய காலகட்டத்தில் மது அருந்துவது என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் சாதாரணமான,பொதுவான ஒரு பழக்கமாக மாறிவிட்டது.

இன்றைய காலகட்டத்தில் மது அருந்துவது என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் சாதாரணமான,பொதுவான ஒரு பழக்கமாக மாறிவிட்டது. மது அருந்துவது பொறுத்தவரை அளவாக மது அருந்துவது நல்லதுதான் என்று பொதுவான ஒரு கருத்து நிலவி வருகிறது. மது அருந்துவதில் இருக்கும் முக்கியமான பிரச்சினை அடுத்தநாள் காலையில் எழுவது ஆகும்.

foods that will instantly cure your hangover

அதிலும் அடுத்தநாள் அலுவலகம் செல்ல நேர்ந்தால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஏனெனில் போதை முழுவதும் தெரிந்திருக்காது, மேலும் தலைவலி வேற அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நாளை கடத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்த பிரச்சினையை சமாளிக்க ஒரு எளிய வழி உள்ளது, சில இயற்கை பொருட்கள் எளிதில் போதையை இறக்குவதுடன் தலைவலி இல்லாமலும் பார்த்துக்கொள்ளும். எந்தெந்த பொருட்கள் போதையை எளிதில் குறைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன்

தேன்

போதையை குறைக்கும் ஒரு எளிய வீட்டு வைத்தியம் தேன் ஆகும். இது ஆல்கஹாலால் ஏற்படும் மோசமான விளைவுகளை சமநிலை படுத்தக்கூடியது. இதற்கு காரணம் தேனில் உள்ள ப்ரெக்டொஸ் என்னும் பொருளாகும். இது ஆல்கஹாலால் உங்கள் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதை தடுக்கும். மேலும் தேன் ஆல்கஹாலை விரைவில் செரிமாணம் அடைய வைக்கிறது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

நீங்கள் மதஅருந்தும் போது உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வேகமாக குறைகிறது. இதை சரிசெய்யத்தான் வாழைப்பழம் பயன்படுகிறது. இதில அதிகளவு பொட்டாசியமும், மெக்னீசியமும் உள்ளது, இந்த ஊட்டச்சத்துக்கள் போதையை விரைவில் குறைக்க உதவும். மேலும் இதிலுள்ள அனடாசிட்கள் உங்கள் அதிகளவு குடித்தபிறகு உங்கள் வயிற்றில் ஏற்படும் சமநிலையின்மையை சரிசெய்கிறது.

இஞ்சி

இஞ்சி

சிலருக்கு குடிக்கும் போது குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதனை சரி செய்ய இஞ்சியை தவிர சிறந்த மருந்து வேறொன்றும் இல்லை. இதனை எடுத்துக்கொள்ள சிறந்த வழி இதை அப்படியே சாப்பிடுவதுதான். ஆனால் இட்டான் காரச்சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் கொதிக்கவைக்கப்பட்ட தண்ணீரிலோ அல்லது பழச்சாறிலோ இஞ்சியை சேர்த்து குடிக்கவும்.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீர்

எலெக்ட்ரோலைட்டுகள் அதிகமுள்ள தேங்காய் தண்ணீர் போதையை குறைக்கும் சிறந்த வீட்டு மருத்துவமாக இருக்கிறது. குடித்தவுடன் உங்கள் உடலில் உள்ள நீர்சத்துக்கள் அதிகம் வெளியேறும், அந்த சமயத்தில் செயற்கை குளிர்பானங்களை குடிப்பதை விட இதனை குடிப்பது உங்களுக்கு சிறந்த நிவாரணமாக அமைவதுடன் நீரிழப்பையும் தடுக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை டீயை போதையை குறைக்க உதவும் மிகவும் பிரபலமான வீட்டு மருத்துவமாகும். இது ஆல்கஹாலின் பாதிப்புகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. எலுமிச்சையின் சிறந்த பண்பு என்னவெனில் இது வயிறு பிரச்சினைகளும் சிறந்த தீர்வளிக்கும்.

தர்பூசணி

தர்பூசணி

ஆல்கஹால் உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவிடும். இதனை ஈடுகட்ட தர்பூசணி உங்களுக்கு உதவும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளவர்கள் மது அருந்தும்போது மிகவும் சோர்வாகவும், தளர்வாகவும் உணருவார்கள், அப்போது ப்ரெக்டொஸ் அதிகமுள்ள தர்பூசணியை சாப்பிட வேண்டியது அவசியம். நீர்ச்சத்து அதிகமுள்ள இந்த பழம் உங்கள் உடலில் உள்ள நீரின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஆல்கஹால் டையூரிடிக் விளைவைக் கொண்டுள்ளது, அதிகமாக குடிக்கும்போது உங்கள் உடலில் உள்ள அவசியமான ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் குறையும். ஓட்ஸில் அதிகமுள்ள வைட்டமின் பி உங்கள் ஈரலுக்கு மட்டும் நல்லதல்ல உங்கள் மனநிலைக்கும் மிகவும் நல்லதாகும். ஓட்ஸ் உங்கள் உடலில் உள்ள அமிலத்தன்மையை சமநிலை படுத்துவதுடன், நச்சு பொருட்களை உறிஞ்சி சர்க்கரையின் அளவை குறைக்கிறது.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

கிரேக்கர்களும், ரோமானியர்களும் முட்டைகோஸை அதன் மருத்துவ குணங்களுக்காக பெரிதும் பயன்படுத்தி வந்தனர். இரவு மது அருந்துவதற்கு முன் அதிகளவில் முட்டைகோஸ் சாப்பிடுவதை அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர், இதனால் ஆல்கஹாலால் ஏற்படும் பக்கவிளைவுகள் பெருமளவில் குறையும். இதனால்தான் வினிகரில் ஊறவைக்கப்பட்ட முட்டைகோஸ் போதையை குறைக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion