Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு பெருங்குடலில் புண்ணை ஏற்படுத்தும் தெரியுமா?
கோலிடிட்ஸ் வலி என்பது குடலின் உட்புறச்சுவர்களில் ஏற்படும் கோளாறால் ஏற்படும் செரிமானக்கோளாறாகும்.
நமது உடலில் அடிக்கடி பிரச்சினைக்குள்ளாகும் பாகம் என்றால் அது வயிறுதான். எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதனுடன் இலவச இணைப்பாக வயிற்று வலியும் சேர்ந்தே வந்துவிடுகிறது. பல சமயங்களில் ஏன் வயிறு வலிக்கிறது என்பதை கண்டறிவதே நமக்குக்கு மிகவும் சிரமமான காரியமாக மாறிவிடுகிறது.

கோலிடிட்ஸ் வலி என்பது குடலின் உட்புறச்சுவர்களில் ஏற்படும் கோளாறால் ஏற்படும் செரிமானக்கோளாறாகும். இதனை பெருங்குடலில் ஏற்படும் வீக்கம் உங்களை பல அசௌகரியங்களுக்கு ஆளாக்கக்கூடும். நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் உங்களுக்கு இந்த பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.

அதிக நார்ச்சத்து இருக்கும் உணவுகள்
பழுப்பு அரிசி, குயினோ, ஓட்ஸ் போன்ற அதிக நார்ச்சத்து இருக்கும் உணவுகள் கொலிட்டிஸ் வலியை உண்டாக்கும் குறிப்பாக பெருங்குடல் புண்ணை உண்டாக்கும். அதிக நார்ச்சத்து இருக்கும் உணவுகள் செரிமானம் அடைய அதிக காலம் எடுத்துக்கொள்ளும், இதற்கு அதிக குடல் இயக்கங்கள் தேவைப்படும், மேலும் அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.

காஃபைன்
காபி, டீ மற்றும் அதிகளவு காஃபைன் இருக்கும் உணவுகள் உங்களுக்கு பெருங்குடல் புண்ணை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகவும் அதிகமாகும். கொலிட்டிசால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அதிகளவு குடிக்கும் போது அது அவர்களின் குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.

காரமான உணவுகள்
மிகவும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியமாகும் ஏனெனில் அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது செரிமானக்கோளாறுகளின் மிகவும் முக்கியமான அறிகுறியாகும். குறைந்த காரத்தில் சாப்பிடும் உணவு விரைவில் செரிமானம் அடைந்துவிடும்.

சாக்லேட்
கொலிட்டிசால் பாதிக்கப்பட்டவர்கள் சாக்லேட் சாப்பிடுவதை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது. சாக்லேட்டில் இருக்கும் காஃபைன் மற்றும் சர்க்கரை குடல் இயக்க பாதையில் எரிச்சலை உண்டாக்கும். இதனால் அடிவயிற்றில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.

கொழுப்பு இறைச்சிகள்
கொலிட்டிஸ் பிரச்சினை இருக்கும்போது இறைச்சிகள் செரிமானம் அடைவது என்பது மிகவும் கடினமானது. அவை முழுமையாக குடலால் உறிஞ்சப்படுவதில்லை, இதனால் குடல் இயக்க பாதையில் எரிச்சல் ஏற்படும். இறைச்சி சாப்பிட ஆசைப்பட்டால் அதிகளவு கொழுப்பு இல்லாத குடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத இறைச்சியை சாப்பிடுங்கள்.

கார்பனேட் குளிர்பானங்கள்
சோடா, கோலா போன்ற கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களில் இருக்கும் கார்பானிக் அமிலம் செரிமான பாதையில் வீக்கத்தை ஏற்படுத்தும், மேலும் கொலிட்டிஸ் பிரச்சினையை அதிகரிக்கும். மேலும் இதில் இருக்கும் காஃபைன் மற்றும் சர்க்கரை வாயுக்கோளாறு, இரைப்பை குழாயில் சிக்கல் போன்ற பிரச்சினைளை ஏற்படுத்தும்.

சோளம்
சோளம் என்பது மிகவும் செரிமானத்தில் அதிக சிக்கலை ஏற்படுத்தும் ஒன்றாகும். இதனை செரிமானம் அடைய செய்வது அவ்வளவு எளிதானதல்ல, இதனால் வயிற்றுப்போக்கு, இரைப்பை கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பெருங்குடல் புண் இருப்பவர்கள் இதனை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

மது
கொலிட்டிஸ் பிரச்சினை இருப்பவர்கள் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது. இது குடல் மற்றும் அதன் இயக்கங்களை வெகுவாக பாதிப்பதுடன் வயிற்றுப்போக்கு, குடல் அழற்சி போன்ற பிரச்சினைக்ளை உண்டாக்கும்.



Click it and Unblock the Notifications