Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
பெண்களே! உங்கள் பிறப்புறுப்பு உங்களிடம் கூற வரும் நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவத்தின், நிறம் பொறுத்து அது உங்களிடம் கூற முயற்சிக்கும் ஆரோக்கிய பிரச்சினை என்னவென்பதை அறிந்துகொள்ளலாம்.
பெண்களே உங்களுடைய பெண்ணுறுப்பு உங்களிடம் கூற வருவது என்பதை அறிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமன்று. பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவத்தின், நிறம் பொறுத்து அது உங்களிடம் கூற முயற்சிக்கும் ஆரோக்கிய பிரச்சினை என்னவென்பதை அறிந்துகொள்ளலாம். பொதுவாக பெண்களுக்கு பிறப்புறுப்பு வெளிப்பாடு என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஏனெனில் இந்த சமயத்தில் பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்கள் அவற்றின் மூலம்தான் வெளியேற்றப்படுகிறது.

ஆனால் இது அனைத்து சமயத்திலும் நல்லது என்று கூற இயலாது. ஆரோக்கியமான பிறப்புறுப்பு வெளிப்பாடு என்பது வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால் உங்கள் உடலில் சில பிரச்சினைகள் இருக்கும்போது இதன் நிறத்திலோ, அளவிலோ மாற்றங்கள் ஏற்படும்.சிலசமயங்களில் துர்நாற்றம் கூட ஏற்படும். இந்த பதிவில் இவ்வாறு உங்கள் பிறப்புறுப்பு வெளிப்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் உங்களிடம் கூறுவது என்னவென்று பார்க்கலாம்.

நீர்ச்சத்து பற்றாக்குறை
உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும்போதெல்லாம் உங்கள் உடலானது எஞ்சியுள்ள திரவங்களை சேகரித்து பயன்படுத்தும். இதன் விளைவாக இந்த திரவங்கள் பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும். இந்த நீர் ஒதுக்கீட்டிற்கு பிறப்புறுப்பும் விதிவிலக்கல்ல. எனவே உங்கள் பிறப்புறுப்பில் இருந்து கெட்டியான திரவம் வெளியேறினால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்று பொருள். இதனை சரிசெய்ய அதிக தண்ணீர் குடித்தாலே போதும்.

அதீத மனஅழுத்தம்
மனஅழுத்தம் உங்கள் உடலுக்கு பல வழிகளில் தீங்கை ஏற்படுத்தலாம். பிறப்புறுப்பு வெளிப்பாடும் அதில் ஒன்று. நீங்கள் அதீத பதட்டத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் ஆட்படும்போது உங்கள் பிறப்புறுப்பு வெளிப்பாடும் அதிகமிருக்கும். ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் மனஅழுத்தமும் இதற்கு காரணமாக இருக்கலாம். மனஅழுத்தம் அதிகமாக இருப்பது உடலுறவில் ஈடுபடும்போது கூட பிறப்புறுப்பில் வறட்சியை உண்டாக்கும். இதனால் உங்களால் உறவில் முழுமையாக ஈடுபட முடியாது.

pH சமநிலையின்மை
உங்கள் பிறப்புறுப்பில் pH சமநிலை இருக்கும். அதன் சமநிலையில் மாற்றம் ஏற்படும்போது அது உங்களுக்கு பிறப்புறுப்பு வெளியேற்றத்தின் மூலம் உணரவைக்கப்படும். உங்கள் pH அளவு குறையும்போது அது உங்களுக்கு ஈஸ்ட் தொற்றை உண்டாக்கும். இதனால் ஏற்படும் வெளியேற்றமானது பாலாடைக்கட்டி போல இருக்கும். மேலும் சில பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படுவதோடு அடர்நிற வெளியேற்றமும், துர்நாற்றமும் ஏற்படும்.

பாலியல்ரீதியான நோய்
பாலியல்ரீதியாக பரவும் நோய்கள் பெரும்பாலும் உங்கள் யோனி வெளியேற்றத்தில் பல மாற்றங்களை உண்டாக்கும். ட்ரிகோமோனியாசிஸ் என்னும் பாலியல் நோய் இருக்கும்போது உங்கள் யோனி வெளியேற்றமானது துர்நாற்றத்துடன் மஞ்சள் நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலோ இருக்கும். அதேபோல சல்மேடியா என்னும் பாலியல் நோய் இருக்கும்போது உங்கள் யோனி வெளியேற்றத்தின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

இடுப்பு அழற்சி நோய்
உங்கள் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாக்டீரிய தொற்றால் ஏற்படும் நோய்தான் இடுப்பு அழற்சி நோய். பெரும்பாலானவர்களுக்கு இந்த இடுப்பு அழற்சி நோய்க்கான அறிகுறிகளை உணர்வதில்லை. மேலும் யோனி வெளியேற்றத்தின்போது கடுமையான துர்நாற்றமும், கடுமையான இடுப்பு வலியும் ஏற்படும். இவ்வாறு இருந்தால் உங்களுக்கு PID என்னும் நோய் உள்ளது.

கருமுட்டை வெளிப்படுதல்
உங்களுக்கு மாதவிடாய் தொடங்கும் முன் சிறிது யோனி வெளியேற்றம் ஏற்படலாம். கருமுட்டை வெளிப்படும்போது உங்களுக்கு இது அதிகம் ஏற்படும். சொல்லப்போனால் வழக்கத்தை விட பலமடங்கு வெளிப்பாடு இருக்கும். நீங்கள் அடிக்கடி உங்கள் யோனி வெளியேற்றத்தை சுத்தப்படுத்தி கொண்டிருந்தால் நீங்கள் கருமுட்டை வெளிப்படுதலின் உச்சத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

கர்ப்பம்
நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் பல உள்ளது. மாதவிடாய் தடைபடுவது, மார்பகங்களில் மாற்றம் ஏற்படுவது போன்றவை அதன் அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால் வழக்கத்தை விட யோனி வெளியேற்றமும் கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு காரணம் உங்கள் உடலில் அதிகம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன்தான் காரணம்.

இனிமையான மனநிலை
இது பெரும்பாலும் நிகழ்வதுதான். நீங்கள் உற்சாகமான ஒரு மனநிலையிலேயோ அல்லது உறவுக்கு தயாரான சூழ்நிலையாலோ இருந்தால் வழக்கத்திற்கு மாறாக நீங்கள் அதிகளவு யோனி வெளியேற்றம் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் பிறப்புறுப்பு அதிக திரவத்தை வெளியிடுவது உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.



Click it and Unblock the Notifications