For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஆணுறுப்பில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை பற்றி இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டிருக்கீங்களா?...

  By Suganthi Rajalingam
  |

  வாசெக்டமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யும் சிறிய மாறுதல் ஆகும். இந்த அறுவை சிகிச்சையின் போது ஆண்களின் விந்தணுக்களை சுமந்து செல்லும் இழை நாளக் குழாயை அடைத்து விடுகின்றனர்.

  what is meant by vasectomy

  இதனால் விந்தணுக்கள் பெண்ணுறுப்புக்குள் பாய்வது தடைபட்டு கருத்தரிப்பது தவிர்க்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்ய வெறும் 10-30 நிமிடங்கள் மட்டுமே ஆகுகிறது. இது ஒரு எளிதான நிரந்தர கருத்தடைப்பு முறையாகும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  செய்யும் முறை

  செய்யும் முறை

  ஆண்களின் விதைப்பையில் இரண்டு விதைகளும் இரண்டு இழை நாளங்களும் காணப்படும். இப்பொழுது விதைப்பையை லேசாக வெட்டி திறந்து அதிலிருந்து விந்தணுக்களை சுமந்து செல்லும் இழை நாளங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த இழைநாளங்களின் குறுக்கே வெட்ட வேண்டும். பிறகு அதன் முனைகளை சிறிய அடைத்து விடுவார்கள். இப்பொழுது இந்த துண்டாக்கப்பட்டு அடைக்கப்பட்ட இழை நாளங்களை மறுபடியும் விதைகளுனுள் வைத்து தைத்து விட வேண்டும். விந்தணுக்கள் பாய்ந்து செல்லும் பாதை துண்டாக்கப்பட்டு அடைக்கப்பட்டு விட்டதால் அவை பெண்ணின் கருப்பையை அடைய முடியாமல் நின்று விடும்.

  விழிப்புணர்வு

  விழிப்புணர்வு

  நிறைய பேர்கள் இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இயற்கை வழிகளையே மேற்கொள்கின்றனர். ஆனால் இது ஓரு சிறந்த எளிமையான வழி. இதன் மூலம் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இந்த அறுவை சிகிச்சை பற்றிய முழு விவரங்களையும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று விட்டு செய்வது நல்லது. இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே கண்டிப்பாக மேம்பட வேண்டும்.

  இது சிறந்ததா?

  இது சிறந்ததா?

  உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் கண்டிப்பாக இந்த கருத்தடை முறையை மேற்கொள்ளலாம்.

  எனக்கு வயது 37, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.நான் குடும்பக் கட்டுப்பாடு செய்ய நினைக்கும் போது தான் இந்த வாசெக்டமி முறையை பற்றி தெரிந்து கொண்டேன். நாம் பயப்படும் அளவிற்கு பக்கவிளைவுகள் இல்லாத ஒரு கருத்தடை முறை. 100 சதவீதம் கருத்தடை வேலையை செய்கிறது. மூன்று மாதங்களுக்கு பிறகு நீங்கள் எப்போதும் போல் செயல்பட முடியும். அதே நேரத்தில் இந்த அறுவை சிகிச்சையை மறுபடியும் பழைய நிலைக்கும் கொண்டு வந்திடலாம். இதில் 40-90 % அளவு பயனடைய இயலும்.

  வலி மிகுந்ததா?

  வலி மிகுந்ததா?

  உங்களுக்கு இந்த மருத்துவ சிகச்சையின் போது கொடுக்கும் தூக்க மருந்துகள் மட்டுமே வேதனையை தரும். உங்கள் விதைப்பந்தில் ஊசியில்லாத ஒரு தூக்க மருந்து ஸ்பிரே அல்லது ஏர் ப்ரஷ் பேனா வடிவ கருவியை கொண்டு அன்ஸ்தீசியா கொடுக்கப்படும். ஒரு விதமான வலி உண்டாகும். குமட்டல் மற்றும் அசெளகரியமாக இருப்பீர்கள். வயிற்றில் ஒரு வித உணர்வை காண்பீர்கள். அறுவை சிகிச்சை ஆரம்பித்த பிறகு நீங்கள் அமைதியான மனநிலையை அடையக் கூட நேரம் இல்லாமல் போகி விடலாம்.

  உங்கள் மருத்துவரிடம் அறுவை சிகிச்சையின் போது நீங்கள் பேசிக் கொண்டு இருக்க நினைத்தால் தாராளமாக பேசுங்கள். இது உங்களுக்குள் இருக்கும் பயத்தை போக்கி அறுவை சிகிச்சையை சுலபமாக்கும்.

  அபாயம்

  அபாயம்

  இந்த அறுவை சிகிச்சையின் பக்க விளைவால் சில சமயங்களில் உங்கள் விதைப்பந்தில் இரத்தக் கசிவு, தொற்று போன்றவை ஏற்படலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இது ஒரு பாதுகாப்பான சிறந்த முறையாகும்.

  இதனால் அதிகப்படியான இரத்தம் வெளியேறுதல், இறப்பு, பக்க வாதம், இதயம் செயலிழப்பு போன்றவை ஏற்படும் போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். 2015 ஆம் ஆண்டு வாசெக்டமி மற்றும் புரோஸ்டேட் புற்று நோய் இவற்றிற்காக ஹார்வர்ட் நடத்திய ஆராய்ச்சியில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இவை இந்த அறுவை சிகிச்சை பற்றிய உங்களது பயத்தை சரியாக்கி விடும்.

  மருந்து மாத்திரைகள்

  மருந்து மாத்திரைகள்

  ஆனால் இந்த அறுவை சிகிச்சை பெற்ற பிறகு மற்ற மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் கவனம் இருக்க வேண்டும். ஏனெனில் அஸ்பிரின் போன்ற மாத்திரைகள் இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து இரத்தம் உறையாமல் இரத்தக் கசிவை விதைப்பந்தில் ஏற்படுத்தி விடும். பிறகு முழுவதுமாக அஸ்பிரின் மருந்தை இரத்தத்தில் இருந்து வெளியேற்ற வேண்டியிருக்கும்.

  பதட்டம்

  பதட்டம்

  சில சிறுநீரக மருத்துவர்கள் சானக்ஸ் போன்ற மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். இவை வலியிலிருந்து கொஞ்சம் நிவாரணம் அளிக்கும் . உங்களுக்கு மருத்துவ ரீதியாக என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாது. ஆனால் நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை நீங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தேவையற்ற பதட்டத்தை காணாமல் செய்ய முடியும்.

  பிந்தைய வேதனை

  பிந்தைய வேதனை

  இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு மணி நேரம் வரை வேதனை இருக்கும். இது ஒரு மந்தமான வேதனையாகும். வயிற்று பகுதிகளிலும் ஒரு வித வலி உணர்வு ஏற்படும். எனவே இதற்கு மருத்துவர்கள் டைலெனோல் 3 உடன் கோடைன் வலி நிவாரணியை வழங்குவர். கடுமையான முதுகு வலி போன்றவை ஏற்படும்.

  பழைய நிலைக்கு திரும்புதல்

  பழைய நிலைக்கு திரும்புதல்

  சாதாரணமாக 10-14 நாட்களில் 100% குணமடைந்து விடலாம். ஆனால் முதலில் உங்கள் கால்களை ஒரே இடத்தில் வைத்து 24-48 மணி நேரம் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும். முதல் நாள் வெறும் ஐஸ் ஒத்தடம் பிறகு இரண்டாம் நாள் தான் குளியலை மேற்கொள்ள வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து உங்களால் ஓரளவு நடைபயிற்சி நல்லாவே மேற்கொள்ள முடியும். 7 நாட்களில் உங்களால் ஓட ஆரம்பிக்க முடியும்.

  எல்லா ஆண்களும் இந்த அறுவை சிகிச்சை வேதனையை நினைத்து பயப்படுகின்றனர். ஆனால் இரண்டு நாட்கள் மட்டுமே இந்த கஷ்டம் இருக்கும். பிறகு மூன்றாவது நாட்களில் இருந்து உங்கள் வழக்கமான செயல்பாடுகளை நீங்கள் மேற்கொள்ள இயலும்.

  உடலுறுவு

  உடலுறுவு

  நீங்கள் சீக்கிரமாகவே உடலுறுவை மேற்கொள்ள இயலும். ஆனால் அறுவை சிகிச்சை செய்த சில நாட்களில் உடலுறுவை மேற்கொண்டால் விதைப்பந்தில் போடப்பட்ட தையல் பிரிய வாய்ப்புள்ளது. எனவே 10 நாட்கள் வரையாவது காத்திருந்து பின்னர் உங்கள் துணையுடன் தாம்பத்ய வாழ்வில் ஈடுபட்டு மகிழுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: health
  English summary

  What It Actually Feels Like to Get a Vasectomy

  Medically speaking, a vasectomy cuts off the supply of sperm to your semen by sealing the vas deferens, the tubes that carry sperm. Local anesthetic is applied to numb the pain, and your doc does some stuff in your nether-region while the two of you make inane small talk about the weather. Typical operating time for this outpatient procedure is between 10 and 30 minutes. Easy peasy.
  Story first published: Monday, May 7, 2018, 18:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more