For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பயணம் எப்படி உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தெரியுமா?

பயணம் செய்யஅனைவருக்குமே பிடிக்கும் அதிலும் அது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்றால் மகிழ்ச்சிதானே. நீங்கள் செய்யும் பயணம் உங்கள் மனா ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

|

பணிச்சுமையா, மனஅழுத்தமா அல்லது மனசு சரியில்லையா உடனே ஒரு பயணத்துக்கு கிளம்புங்க. பயணம் செய்வது யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் நெடுந்தூர பயணம் என்றால் அனைவருக்குமே அலாதி பிரியம்தான். சிலருக்கு புகைபிடித்தல், மது அருந்துதல் போன்று பயணமும் ஒரு போதையாக இருக்கும். மற்ற பழக்கங்கள் உங்களுக்கு தீமையை ஏற்படுத்தலாம் ஆனால் இந்த பழக்கம் உங்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் நன்மையைத்தான் செய்யும்.

Health

அதிக பயணம் செய்து காசை கரியாக்குகிறோம் என்று உங்கள் நண்பர்கள் உங்களை கிண்டலடிக்கலாம். ஆனால் ஆரோக்கியத்தை எந்தவித சிரமமும் இன்றி நமக்கு பிடித்தவழியில் பெறுவதற்கு பயணத்தை தவிர சிறந்த வழி எதுவுமில்லை. இங்கு பயணம் செய்வது எவ்வாறு உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், மனஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது என பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

பயணம் செய்வதின் முதன்மையான பலன் இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதுதான். வாகனத்தை பிடிக்க ஓடுவது, மலையேற்றங்களில் ஈடுபடுவது என நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களின் இரத்த அழுத்தத்தை குறைத்து உங்களின் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. மேலும் இது போன்ற நடவடிக்கைகள் உங்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி வருடத்திற்க்கு ஒருமுறையாவது தொலைதூர பயணம் மேற்கொள்வோருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக ஆய்வுமுடிவுகள் கூறுகிறது. அது நெடுந்தூர பயணமாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை உங்களால் முடிந்த அல்லது பிடித்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள்.

புத்திக்கூர்மை

புத்திக்கூர்மை

பயணம் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் உங்கள் புத்திக்கூர்மையையும் அதிகரிக்கிறது. உங்கள் மூளை புதிய அனுபவங்கள் மற்றும் சுற்றுச்சூழல்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்போது அதன் ஆற்றல் சேமிக்கும் அளவு அதிகரிப்பதால் அதன் பாதிக்கப்படும் அளவு பெருமளவில் குறைகிறது. புதுப்புது சூழல்களால் அறிவாற்றல் அதிகரிப்பதுடன் நினைவக ஆற்றல், கவனம் போன்றவை அதிகரிக்கிறது குறிப்பாக டிமென்ஷியா பாதிப்பு உள்ளவர்களுக்கு பயணங்கள் அதிக பலனை கொடுக்கும். மேலும் பயணத்தின் போது நீங்கள் கற்றுக்கொள்ளும் புதிய தகவல்கள் மூளையின் பாதிப்பை தாமதப்படுத்தும். வருடம்தோறும் ஒரே இடத்திற்குச் செல்வதை முடிந்தளவு தவிர்க்க பாருங்கள், அது எந்தவித புது அனுபவத்தையும் தராது.

கற்பனை திறன்

கற்பனை திறன்

நீங்கள் கவனித்து பார்த்தால் படைப்பாளிகள் அனைவரும் பயண விரும்பியாகவே இருப்பார்கள் குறிப்பாக எழுத்தாளர்கள் அதிக பயணம் செய்பவர்களாக இருப்பார்கள். அதற்கான காரணம் பயணங்கள் அவர்களின் கற்பனைத்திறனை அதிகரிக்கிறது. சூழ்நிலைகளும், அனுபவங்களும் மூளையிலுள்ள நரம்புகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே பயணங்கள் மூளையின் கற்பனை திறனை அதிகரிக்க உதவும் என நரம்பியல் நிபுணர்கள் நம்புகிறார்கள். 2016 ஆம் ஆண்டு பல்வேறு துறைகளை சேர்ந்த படைப்பாளிகளிடம் நடத்தபட்ட சோதனையில் அதிகம் பயணம் செய்பவர்கள் அவர்கள் துறையில் அதிகம் சாதித்துள்ளது தெரியவந்தது.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

மனஅழுத்தத்தை குறைப்பது பயணம் செய்வதின் மிக முக்கிய பலனாகும். பயணம் முடிந்து வந்த பிறகு இரண்டு, மூன்று நாட்கள் ஓய்வெடுப்பது அவர்களின் மனஅழுத்தத்தை முழுவதும் உரைத்துவிடுவதாக பலரும் கூடியுள்ளனர். எனவே உங்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து சிறிது வெளியே வந்து பயணத்தில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். இது உங்களின் ஆரோக்கியத்தை இருமடங்கு அதிகரிக்கும். மேலும் பயணம் செய்வது உங்களை உளவியல்ரீதியாகவும் சிறப்பாக உணரச்செய்யும். நண்பர்களுடன் சேர்ந்து பயணங்களை திட்டமிடுவது அதற்கான ஏற்பாடுகளை செய்வது என ஒரு பயணத்தின் உற்சாகம் ஒரு மாதத்திற்கு முன்னரே உங்களை தொற்றிக்கொள்ளும்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

பயணங்கள் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆம் உண்மைதான் பயணங்கள் பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளில் இருந்து மீண்டுவருவதற்கான ஆன்டிபயாட்டிக்களை உடலுக்குள் அதிகரிக்கிறது. புதுப்புது இடங்களுக்கு செல்லும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள நமது உடலுக்கு நாமே பயிற்சி அளிக்கிறோம். இந்த ஆன்டிபயாட்டிக்கள் உங்களை தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

எண்ணங்களில் மாற்றம்

எண்ணங்களில் மாற்றம்

பயணங்கள் உங்கள் மீதான உலகத்தின் பார்வையை மட்டுமல்ல உலகம் மீதான உங்கள் பார்வையையும் மாற்றும். பயணங்களின் போது நீங்கள் இதுவரை பார்க்காத சூழ்நிலையில் இருக்க நேரிடும். அது நல்லதாக இருந்தாலும், மோசமானதாக இருந்தாலும் அது உங்களுக்கு ஒரு அனுபவம்தான். நீங்கள் மகிழ்ச்சியென நினைத்து ஒரு வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கும்போது உலகம் உங்களை அந்த வட்டத்தை விட்டு வெளியே கொண்டு வந்து வேறு சூழ்நிலையில் நிறுத்தும்போது அந்த சூழ்நிலையை பழகிக்கொள்ளவும், அதனை எதிர்கொள்ளவும் உங்களை நீங்களே தயார்படுத்திகொள்ளுவீர்கள்.

புதிய தொடர்புகள்

புதிய தொடர்புகள்

பயணங்களின் கூடுதல் சிறப்பு புதியவர்களின் அறிமுகங்கள். பயணங்கள் இல்லையெனில் தமிழில் "குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை போல" என்று கூறுவார்களே அப்படி நமது வாழ்க்கை ஒரு எல்லைக்குள்ளயே முடிந்துவிடும். சிறகை விரித்து பறக்க தொடங்கும்போதுதான் பறவை புதிய எல்லையை தொடும் அதுபோலத்தான் நமக்கு பயணம். வெளியுலகத்திற்கு சென்று புதிய மனிதர்களை சந்திப்பது உங்கள் மனஆரோக்கியத்திற்கு சிறந்தது சிலசமயம் உங்களுக்கு கிடைக்கும் புதிய தொடர்புகள் உங்கள் வாழ்கையையே கூட மாற்றலாம்.

பயணம் செய்யும் விதம்

பயணம் செய்யும் விதம்

நீங்கள் பயணம் செய்யும் முறையும், பயணத்தில் நீங்கள் செய்யும் செயலும் கூட உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும். ஒருவேளை உங்கள் பயணத்தின்போது நீங்கள் சைக்கிள் பிரியர் என்றால் நீங்கள் செய்யும் அந்த பயிற்சி உங்களுக்கு அதிக பலனை ஏற்படுத்தும். சைக்கிள் ஓட்டுவது உங்கள் உடலின் தேவையற்ற கொழுப்புக்களை கரைக்க உதவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், தசைகளை வலுப்படுத்தும். அதேபோலத்தான் நீங்கள் பயணத்தில் செய்யும் மலையேற்றம் போன்ற பயிற்சிகளும் உங்கள் ஆரோக்கியத்தை இருமடங்காக்கும். இப்படி ஏராளமான பயன்கள் உள்ளது. எனவே பயணம் செய்தாலும் அதில் இப்படி பயனுள்ளவற்றை செய்யாதவறாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How traveling increase human health?

Traveling is helping to increase our physical and mental health. Traveling reduce our stress and protect our heart and increase our immunity power too.
Desktop Bottom Promotion