For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகம் கடித்ததால் உயிருக்கு போராடும் மனிதர்... 15 லட்சம்பேரை காவு வாங்கும் கொடூரம்...

பொதுவாக நகம் கடிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் நகம் கடிப்பதால் உயிருக்கு ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா

|

பொதுவாக நகம் கடிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் நகம் கடிப்பதால் உயிருக்கு ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா? லுக் ஹனோமன் என்பவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை.

nail biting

அவருடைய விரலில் இருந்த நகத்தைக் கடித்ததால், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, அந்த விரலில் சீழ் பிடித்து இறக்கும் அபாயத்தைக் கண்டு உள்ளார் என்று த சன் பத்திரிகை கூறுகிறது. இப்படி சீழ் பிடிப்பதை செப்சிஸ் என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
28 வயது இளைஞன்

28 வயது இளைஞன்

28 வயதான லுக் ஹனோமன் தனக்கு சிறுவயதில் இருந்தே நகம் கடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக பிரிட்டிஷ் நாளிதழுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்படி ஒரு நாள் நகம் கடிக்கும்போது, நகத்தின் அருகில் உள்ள தோல் பகுதியையும் கடித்து விட்டேன். ஆனால் அதைப் பற்றி நான் பெரிதாக நினைக்கவில்லை என்று கூறுகிறார்.

மரண வாயில்

மரண வாயில்

ஒரு வாரத்திற்கு பிறகு சில அபாயகரமான அறிகுறிகள் அவருக்கு தென்பட்டது. அவரால் எதிலும் முழு கவனத்தையும் செலுத்த முடியவில்லை. அதிகமாக வியர்த்து கொட்டியது. நடுக்கம் ஏற்பட்டது. அவருடைய விரல் வீங்கி, துடிக்க ஆரம்பித்தது. தொடக்கத்தில் இதனை ஒரு வைரல் தொற்று என்று லுக் நினைத்திருக்கிறார். விரைவில் தானாக சரியாக விடும் என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டார். வெள்ளிக்கிழமை இரவு உறங்கச் சென்றுவிட்டார். அதிகாலை 2 மணி அளவு வரை உறங்கி இருக்கிறார். அடுத்த நாள், அவருடைய அம்மா வந்து அவரைப் பார்க்கிறார். அப்போது லுக்கிற்கு கடுமையான கலாய்ச்சல் மற்றும் உடல் முழுவதும் சிவப்பு கோடுகள் உருவாகி இருந்தன. இது இந்த தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். லூக்கின் தாயார், தேசிய சுகாதார மையத்தை அணுகினார். அவர்கள் லுக்கை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தினார்கள். கடந்த ஜூலையில் இந்த தொற்றின் சிகிச்சைக்காக நான்கு நாட்கள் லுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது லுக், இந்த தொற்றைப் பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசுகிறார்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

இறப்பின் பிடியில் இருந்து நான் விடுபடும் அளவிற்கு மிகுந்த அதிர்ஷ்டசாலி என்று அனைவரும் கூறினார்கள் என்று லுக் குறிப்பிடுகிறார். மருத்துவர்களும், செவிலியர்களும், நான் வேதனைப் படக் கூடாது என்று என்னிடம் இந்த தொற்றின் அபாயத்தைப் பற்றி குறிப்பிடவில்லை. அவர்கள் மிகவும் நல்லவர்கள். எனக்கு ஓரளவிற்கு குணமானவுடன் நான் உயிரோடு இருப்பது மிகவும் அதிர்ஷ்டம் என்று மட்டும் என்னிடம் கூறினார்கள் என்று லுக் கூறினார்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

ஒரு நபரின் உடலின் பாக்டீரியா தொற்று கட்டுப்படுத்த இயலாமல் அதிகரிக்கும் போது, நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. இதனால் உறுப்பு செயலிழப்பு ஏற்படுகிறது. திசுக்கள் சேதமடைகிறது. முறையான சிகிச்சை அளிக்காமல் இருந்தால் இந்த செப்சிஸ் தொற்று, செப்டிக் ஷாக் என்னும் உயிருக்கு ஆபத்தான நிலையைத் தோற்றுவிக்கும். மேயோ கிளினிக்கின் படி, சுவாச துடிப்பு அதிகரித்தல், மூச்சு விட சிரமம் அடைதல், ஈரம் அதிகம் உள்ள சருமம், குழப்பம், வயிற்று வலி, போன்றவை செப்சிஸ் நோயின் அறிகுறியாகும்.

ஆண்டுக்கு 1.5 மில்லியன்

ஆண்டுக்கு 1.5 மில்லியன்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) ஆய்வின்படி. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செப்சிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். மற்றும் 250,000 அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் செப்சிஸ் நோயால் இறக்கின்றனர், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், செப்சிஸ் தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்கள். எந்த வித தொற்று ஏற்பட்டாலும், அதில் சீழ் பிடித்து அபாயத்தை உண்டாக்கலாம்.

சீழ் பிடிப்பு

சீழ் பிடிப்பு

செப்சிஸ் என்ற சீழ் பிடிப்பு நோயைப் பற்றி பலருக்கும் தெரியாது என்றும் அதற்கான அறிகுறிகள் பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைப்பதில்லை என்றும் லுக் கூறுகிறார். இதனை பற்றிய விழிப்புணர்வு அவசியம் வேண்டும். எந்த வயது மக்களையும் இந்தத் தொற்று தாக்க முடியும் என்று ஹனோமன் கூறுகிறார்.

நீங்களும் ஹனோமன் போல் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவரா?? உடனடியாக இந்த பழக்கத்தைக் கை விடுங்கள். உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்.

டெர்மட்டாலஜி அகாடமி

டெர்மட்டாலஜி அகாடமி

அமெரிக்க டெர்மட்டாலஜி அகாடமி உங்கள் நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்த சில குறிப்புகள் வழங்குகிறது.

நகங்களை நீளமாக வளர்க்காமல் வெட்டி, சிறியதாக வைத்துக் கொள்ளலாம்.

நகம் கடிக்கும் பழக்கத்திற்கு மாற்றாக வேறு எதாவது நல்ல பழக்கத்தைக் கைக்கொள்ளலாம். உதாரணத்திற்கு ஸ்ட்ரெஸ் பால் விளையாட்டு போன்றவை.

கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health
English summary

This Man Nearly Died of Sepsis Caused By Biting His Nails

you're one to nibble on your nails, it might be time to give it up for good because apparently the bad habit can turn into a health emergency.
Desktop Bottom Promotion