Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ஆண்களே! இதோ உங்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை வரப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்!
தம்பதியர்கள் படுக்கையில் நீண்ட நேரம் உல்லாசமாக இருக்கும் வரை எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் எப்போது ஒரு ஆணால் பெண்ணை படுக்கையில் சந்தோஷப்படுத்த முடியாமல் போகிறதோ, அப்போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.
இன்று பல ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள் என்பது தெரியுமா? பொதுவாக விறைப்புத்தன்மை பிரச்சனை 40-50 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் இன்றோ 30-35 வயதிலேயே சில ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையால் துணையை சந்தோஷப்படுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படப் போகிறது என்றால், முன்கூட்டியே அது ஒருசில அறிகுறிகளை நமக்கு உணர்த்தும். ஆனால் அந்த அறிகுறிகளை பல ஆண்கள் சாதாரணமாக எண்ணிவிடுவதால், இப்பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே உடலில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்து சிகிச்சை பெற்று வந்தால், விறைப்புத்தன்மை பிரச்சனையின் தீவிரத்தைத் தவிர்க்க முடியும்.

எனவே ஆண்களே! இனிமேல் உங்கள் ஆணுறுப்பில் சிறு பிரச்சனையை சந்தித்தாலும், அதை சாதாரணமாக எண்ணாதீர்கள். இக்கட்டுரையில் ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்த்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

அதிகாலையில் விறைப்பு ஏற்படாமல் இருப்பது
பொதுவாக ஆண்களுக்கு இரவு மற்றும் அதிகாலையில் ஒருவித பாலுணர்ச்சி உடலினுள் தூண்டப்பட்டு விறைப்பு ஏற்படுவது வழக்கம். இதற்கு காரணம் மூளையில் இருந்து குறைவான அளவில் நார்அட்ரினலின் வெளியிடுவதால் தான். நார்அட்ரினலின் என்பது ஒரு ஹார்மோன். இது தூக்கத்தில் கூட விறைப்பை உண்டாக்கும்.
ஆண்களுக்கு காலையில் அடிக்கடி விறைப்பு ஏற்படுவது நல்லது தான். ஏனெனில் இதன் மூலம் ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆனால் சமீப காலமாக நீங்கள் அதிகாலையில் எழும் போது விறைப்பு ஏற்படாமல் இருப்பதை கவனித்து வந்தால், உங்கள் ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். எனவே இம்மாதிரியான அறிகுறியை நீங்கள் சந்தித்தால், விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவஸ்தைப்படப் போகிறீர்கள் என்று அர்த்தம். இந்நிலையில் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டு வாருங்கள்.

செக்ஸ் பற்றிய எண்ணமே வராமல் இருப்பது
டெஸ்டோஸ்டிரோன் என்னும் முக்கியமான ஹார்மோன் தான் உடலுறுவில் ஈடுபடத் தூண்டுகிறது. ஆனால் ஒரு ஆணுக்கு எப்போது உடலுறவில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் தோன்றாமல் இருக்கிறதோ, அந்த ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் வழக்கத்திற்கு மாறாக குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவான அளவில் இருந்தால், களைப்பு அல்லது மனநிலையில் மாற்றம், உடல் தசைகளை வளர்ப்பதில் சிரமம் போன்ற இதர அறிகுறிகளையும் உணரக்கூடும்.

கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் அதிக அளவில் இருப்பது
ஆண்கள் 30 வயதிற்கு மேல் வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்த பரிசோதனையைக் கொண்டே விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை அறியலாம். அதுவும் இரண்டு வகையான பரிசோதனையக் கொண்டே அதை தெரிந்து கொள்ளலாம். அவை உயர் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவைகளாகும்.
ஒரு ஆணின் உடலில் கொலஸ்ட்ரால் அளவானது 240 mg/dL அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், அதே சமயம் இரத்த அழுத்தத்தை ஒரு முறைக்கு இரண்டு முறை பரிசோதிக்கும் போது அதிக அளவில் காட்டினால், அந்த ஆணுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதற்கு காரணம் உயர் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை இழக்கச் செய்து, இரத்த நாளங்களைப் பெரிதாக பாதிக்கிறது. இதன் விளைவாக அந்தரங்க பகுதிகளில் உள்ள இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்குகிறது.

புதிய மருந்துகளை எடுக்க ஆரம்பிப்பது
மன இறுக்க நிவாரணிகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் போன்றவைகளும் ஒரு ஆணின் விறைப்புத்தன்மையில் பாதிப்பை உண்டாக்கும் என்பது தெரியுமா? ஏனெனில் இம்மருந்துகளில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்கள் பாலுணர்ச்சியைப் பாதித்து, விறைப்பு ஏற்படுவதில் சிரமத்தை உண்டாக்கும். இந்த மாற்றத்தை புதிய மருந்துகள் எடுத்துக் கொண்டு இரண்டு வாரங்களிலேயே நன்கு காண முடியும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள், ஒருவரது இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது தான். ஆனால் செக்ஸ் வாழ்க்கைக்கு இம்மருந்து மிகவும் மோசமாக பாதிக்கும்.

ஈறுகளில் வீக்கம் அல்லது எளிதில் இரத்தக்கசிவு ஏற்படுவது
ஈறுகள் வீக்கத்துடனோ, வலியுடனோ அல்லது பற்களைத் துலக்கும் போது இரத்தக்கசிவையோ உண்டாக்கினால், அது ஈறு நோய்களுக்கான அறிகுறிகளாகும். இது நேரடியாக விறைப்புத்தன்மையை உண்டாக்காவிட்டாலும், ஒரு தொடர்ச்சியான ஒரு பிரச்சனை நிகழ்வை உடலினுள் ஏற்படுத்தி, அதன் விளைவாக விறைப்புத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஒருவருக்கு ஈறு நோய்கள் இருந்தால், அது ஒட்டுமொத்த உடல் முழுவதும் அழற்சியை உண்டாக்கி, இரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இரத்த நாளங்கள் சரியாக செயல்படாமல் போனால், உடலினுள் முக்கியமான அந்தரங்க உறுப்பில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, விறைப்புத்தன்மை பிரச்சனையை வழிவகுக்கும்.

தூங்குவதில் சிரமத்தை சந்திப்பது
ஒருவர் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அது உடலில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். முக்கியமாக தூங்கும் போது மிகவும் சப்தத்துடனான குறட்டையை விடுபவர்கள், இரவு முழுவதும் இடையூறுடன் சுவாசிக்க நேரிடுகிறது. இப்படி குறட்டை விடும் பழக்கம் கொண்ட சுமார் 70 சதவீத ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ளதென பாலியல் மருத்துவத்திற்கான சர்வதேச சமூகம் கூறுகிறது.
தூக்க பிரச்சனையானது டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பாதிப்பதோடு, மன அழுத்தம் அல்லது பதற்ற உணர்வை அதிகரிக்கிறது. இதன் விளைவாக பாலுணர்ச்சி அழிக்கப்பட்டு, உடலுறவின் போது விறைப்புத்தன்மை ஏற்படுவதில் சிரமத்தை சந்திக்க வைக்கிறது.

விறைப்புத்தன்மைக்கான அறிகுறி தெரியும் போது என்ன செய்வது?
ஒரு ஆணுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை உணரும் போது, சற்றும் தாமதிக்காமல் மருத்துவரிடம் இதுக்குறித்து கூற வேண்டியது மிகவும் முக்கியம். இதன் மூலம் விறைப்புத்தன்மை பிரச்சனை தீவிரமடைவதைத் தடுக்கலாம். மேலும் உடலில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதையும் ஆரம்பத்திலேயே அறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம்.
மேலும், சில உணவுகளை சாப்பிடுவதால் ஆண்களின் விறைப்பை அதிகரிக்க செய்யலாம். அவற்றை குறித்து தொடர்ந்து காணலாம்...



Click it and Unblock the Notifications