Latest Updates
-
காரசாரமான நெல்லூர் சிக்கன் வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
கள்ள உறவு அதிகமாக இருக்கும் இந்தியாவின் டாப் 5 நகரங்கள் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சிகரமான செய்தி -
செஃப் தீனா ஸ்பெஷல் கறிவேப்பிலை தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
புதன் உருவாக்கும் நீச்ச பங்க யோகத்தால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
அடை தோசையும், கத்திரிக்காய் சட்னியும் எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 04 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்...! -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் -
ஏப்ரல் மாதத்தில் 5 முறை உருவாகும் அரிய சுப யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும்! -
தஞ்சாவூர் ரோசாப்பூ கார சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
எடைக்குறைப்பு மருந்தை உட்கொள்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் - புதிய ஆய்வு சொல்வது என்ன?
இந்த அறிகுறிகள் இருந்தால் பெண்களுக்கு ஹார்மோன் கோளாறுகள் உள்ளது என்று அர்த்தம்
பெண்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இந்த ஹார்மோன்களின் சமநிலையின்மையே காரணம்.
பெண்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சினைகள் என பல ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளது. பெண்களின் சீரான செயல்பாடுகளுக்கும், வளர்ச்சிக்கும் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஏனெனில் ஹார்மோன்களின் உற்பத்தியை பொறுத்தே அவர்களின் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

ஹார்மோன்கள் சமநிலைமையின்மை என்பது இன்றைய காலகட்டடத்தில் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். பெண்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இந்த ஹார்மோன்களின் சமநிலையின்மையே காரணம். இதில் அதிர்ச்சியான செய்தி என்னவெனில் பல பெண்களுக்கு தங்களுக்கு ஹார்மோன்கள் குறைபாடு பிரச்சினை இருப்பதே தெரியாமல் இருப்பதுதான். பெண்களே! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு நிச்சயம் ஹார்மோன்கள் சமநிலையின்மை குறைபாடு உள்ளது என்று புரிந்து கொள்ளுங்கள்.

பருக்கள்
ஹார்மோன் பிரச்சினையால் பருக்கள் ஏற்படுவது இளம்வயதினருக்கு மட்டும் ஏற்படுவதில்லை. ஆனால் உங்களின் வழக்கமான மருந்துகள் உபயோகித்தும் பருக்களை குணமாகவில்லை என்றாலோ, அல்லது சில கன்னத்தில் பரு, உதட்டில் பரு போன்ற குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பருக்கள் தோன்றினால் உங்களுக்கு நிச்சயம் ஹார்மோன் சமநிலைமையின்மை பிரச்சினை உள்ளது. உங்கள் ஹார்மோன்கள் எண்ணிக்கையை சமநிலை படுத்த வேண்டியது அவசியம் இல்லையெனில் இந்த பருக்கள் நிரந்தரமாக இருக்க வாய்ப்புள்ளது.

முடி உதிர்வு
உங்களுக்கு மனநிலை மாறுபாடுகள் இல்லையென்றாலும் உங்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது அதற்கு முக்கிய அறிகுறிதான் முடி உதிர்வு. முடி உதிர தொடங்குவது ஹார்மோன் சமநிலையின்மை தொடங்கியதற்கான அறிகுறி ஆகும். இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவது அவசியமாகும் ஏனெனில் இது மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.

கண் வறட்சி
சமநிலையற்ற ஹார்மோன்கள் உங்கள் கண்கள் மீது பெரிய பிரச்சினைகளை உருவாக்கும். புதியதாக கண் பிரச்சினைகளை நீங்கள் உணர்ந்தாலோஉங்களுக்கு ஹார்மோன்கள் சமநிலை பிரச்சினை உள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக கண்களில் வறட்சி ஏற்பட்டால் இதனை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மனஅழுத்தம், கர்ப்பகால பிரச்சினைகள், உறவு பிரச்சினைகள் போன்றவற்றால் ஹார்மோன்கள் சமநிலையின்மை பிரச்சினை ஏற்பட்டாலும் கண் வறட்சி ஏற்படும்.

முகத்தில் முடி
உங்கள் முகத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு முடி காணப்பட்டால் உங்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை உள்ளது. அதிர்ஷ்டவசமாக, இது ஒரு நிரந்தர பிரச்சினை அல்ல. ஹார்மோன்களை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வருவது இந்த பிரச்சினையை சரிபண்ணும். எனவே இந்த பிரச்சினை தொடங்கியவுடன் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பார்வை குறைபாடுகள்
கண்களின் வறட்சி மட்டுமின்றி பார்வையில் பிரச்சினைகள் ஏற்படுவதும் ஹார்மோன்கள் சமநிலையின்மையின் அறிகுறியாகும். ஹார்மோன்கள் சமநிலையின்மை ஏற்படும்போது அது கண்களின் முன் மேற்பரப்பின் மீது சிறிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக பார்வையில் சில கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக கர்ப்பகாலங்களில் இந்த பிரச்சினை அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தலைவலி
தலைவலி என்பது பல குறைபாடுகளின் அறிகுறியாக இருக்கிறது. ஆனால் தொடர்ச்சியான தலைவலி ஏற்படும்போது அது ஹார்மோன்களின் சமநிலையின்மையின் அறிகுறியாக கூட இருக்கலாம். 20 வயதுகளில் இருக்கும் பெண்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுவது சகஜம்தான். ஏனெனில் இதற்கு காரணம் மனஅழுத்தம் மற்றும் பதட்டமாக இருக்கலாம். அதேசமயம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறைபாடும் தலைவலியை உண்டாக்க வாய்ப்புள்ளது.

பலவீனமான எலும்புகள்
உங்களுக்கு சமீபத்தில் எலும்பு முறிவுகள் ஏதேனும் ஏற்பட்டால் நிச்சயம் நீங்கள் உங்கள் ஹார்மோனின் அளவுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எலும்புகளில் வலி மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் உங்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை இருக்க வாய்ப்புள்ளது. போதுமான அளவு ஈஸ்ட்ரோஜன் இருக்க வேண்டியது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. இதனால் ஆஸ்டோபோனியா மற்றும் ஆஸ்டோபோரோசிஸ் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிகிச்சை முறைகள்
மேலே சொன்ன அறிகுறிகள் மட்டுமின்றி மாதவிடாய் பிரச்சினை, சோர்வு, எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் கூட ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். ஹார்மோன் சமநிலையின்மை பெண்களின் அன்றாட செயல்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை சரிசெய்ய தேங்காய் எண்ணெய், கேரட், மீன், பூண்டு போன்ற பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் சரியான மருத்துவ சிகிச்சையும் இதற்கு அவசியம்.



Click it and Unblock the Notifications











