Latest Updates
-
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா?
இந்த ஊட்டச்சத்தை அதிகம் எடுத்துக்கொள்வது உங்களை சிறுநீரகத்தை சிதைக்கக்கூடும்
புரோட்டின் ஊட்டச்சத்தால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதேபோல அதன் அளவு அதிகரிக்கும் போது உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் மிகவும் முக்கியமானது புரோட்டின். நமது சிறுவயது முதலே புரோட்டின் சத்துக்காக பல மருந்துகளையும், உணவுகளையும் சாப்பிட்டிருப்போம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், சீரான இயக்கத்திற்கும் புரோட்டின் சத்து மிகவும் அவசியமானது. குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களின் கட்டுமஸ்தான உடலுக்கு புரோட்டின் மிகவும் அவசியமானது.

புரோட்டின் ஊட்டச்சத்தால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதேபோல அதன் அளவு அதிகரிக்கும் போது உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பதிவில் உங்கள் உடலில் புரோட்டினின் அளவு அதிகமாக இருந்தால் உங்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம்.

எடை அதிகரிப்பு
புரோட்டின் டயட் எடை குறைப்பிற்கு உத்திரவாதம் அளிக்கலாம், ஆனால் இது குறைந்த காலத்திற்கு மட்டுமே. அதிகளவு புரதம் உங்கள் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படும். இது கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்க காரணமாகிறது.

சுவாச துர்நாற்றம்
அதிகளவு புரோட்டின் உட்கொள்வது உங்களுக்கு சுவாச துர்நாற்றத்தை ஏற்படுத்தும், குறிப்பாக நீங்கள் போதுமான அளவு கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்ளாத போது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் புரோட்டின் அளவு அதிகரித்த 40 சதவீதத்தினருக்கு இந்த பிரச்சினை உள்ளது. இதனால் உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தால் கெடொசிஸ் என்னும் நிலை ஏற்படுகிறது. இது உங்கள் சுவாசத்தில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் இரசாயனங்களை உற்பத்தி செய்கிறது.

மலச்சிக்கல்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்றுக்கொண்ட 44 சதவீதத்தினர் மலச்சிக்கல் பிரச்சினையை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். உங்கள் உடலில் புரோட்டின் அளவு அதிகரிக்கும்போது கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்துகள் எடுத்துக்கொள்ளும் அளவை குறைக்கிறது.

வயிற்றுப்போக்கு
அதிகளவு பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது உங்கள் உடலில் நார்ச்சத்துக்களின் அளவை குறைக்கும். இதன் விளைவாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம். உங்கள் உடலில் லாக்டோஸ் குறைவாக இருக்கும்போது நீங்கள் அதிக புரோட்டின் உள்ள உணவுகளை சாப்பிடுவது நிச்சயம் உங்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க அதிக தண்ணீர் குடியுங்கள், சீரான அளவு நார்ச்சத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

சிறுநீரக பாதிப்பு
தொடர்ந்து புரோட்டின் உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்வது உங்களுக்கு சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் புரோட்டின் உணவுகளை தவிர்ப்பதே நல்லது. இதற்கு காரணம் அமினோ அமிலங்களில் உள்ள அதிகளவு நைட்ரஜன்தான். நைட்ரஜனை வெளியேற்ற உங்கள் சிறுநீரகம் அதிக வேலை செய்ய வேண்டி வரும்.இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கும்.

புற்றுநோய்
உயர் புரத உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும், குறிப்பாக இறைச்சிகள் சார்ந்த புரதத்தை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது. இதனால் மார்பக, குடல் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க இறைச்சி மூலம் அதிகளவு புரதத்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். இறைச்சியில் காணப்படும் ஹார்மோன்கள்,கொழுப்புகள்தான் இதற்கு காரணம்.

இதய பாதிப்பு
இறைச்சிகள் மற்றும் உயர் கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் புரத உணவுகளில் முக்கியமானவை. இவற்றை அதிகம் சாப்பிடுவது இதய கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இது நிறைவுற்ற கொழுப்பை அதிகம் எடுத்துக்கொள்வதுடன் தொடர்புடையது. குறிப்பாக இந்த உணவுகள் பெண்களிடையே அதிக இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கால்சியம் இழப்பு
உடலின் சீரான இயக்கத்திற்கு கால்சியம் அவசியமான ஒன்றாகும். ஆனால் உயர் புரத உணவுகள் உங்களுக்கு கால்சியம் இழப்பை ஏற்படுத்துகிறது என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும். இதனால் ஆஸ்டோபோரோசிஸ் மற்றும் பலவீனமான எலும்புகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். 2016 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் அதிகளவு புரோட்டின் பலவீனமான எலும்புகளுக்கு வழிவகுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நார்மல் நிலை
பொதுவாக ஒருநாளைக்கு ஆண்கள் 56 கிராம் புரோட்டினும், பெண்கள் 46 கிராம் புரோட்டினும் எடுத்துக்கொள்வதுதான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த அளவு உயரும்போது அது நிச்சயம் பிரச்னைகளை ஏற்படுத்தும். இல்லையெனில் அவர்களின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவிற்கு 0.8 கிராம் புரோட்டின் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு கிலோவிற்கு 2 கிராமை விட அதிக புரோட்டின் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமற்றது.



Click it and Unblock the Notifications