For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டயர்டா இருக்குன்னு சொல்றதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுகோங்க!

அன்றாடம் நீங்கள் தொடர்ந்து சோர்வாகவே உணர்கிறீர்களா அப்படியென்றால் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

|

அன்றாடம் நாம் செய்யக்கூடிய சில பழக்கவழக்கங்கள் நம் உடல் நலத்திற்கும், அதன் தீங்கிற்கும் காரணமாக இருக்கிறது என்று சொன்னால் நம்பவே பயங்கரமானதாய் இருக்கிறதல்லவா? ஆனாலும் கைகளைக் கழுவாமல் சாப்பிடுவது, சுத்தமின்மை ஆகியவை மட்டுமே அதவாது வெளியில் நமக்கு தெரிகிற ஆரோக்கிய குறைபாடுகளாக பார்க்கப்படுகிறது.

இதைத் தவிரவும் நிறையவே இருக்கிறது. பொதுவாக ஒருவர் காலையில் எழுந்ததிலிருந்து குளித்து கிளம்பி பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலுவலகத்திற்கோ பள்ளிக்கோ கல்லூரிக்கோ வந்து சேர்ந்த பின்பும் சோர்வாகவே இருப்பார்கள். டயர்டாக இருக்கிறது என்று சொல்லி எதைஎதையோ சாப்பிட்டும் குடித்தும் பார்ப்பார்கள், அது அந்த நேரத்திற்கு சிறிது உற்சாகத்தை கொடுத்து விட்டு மீண்டும் படுத்துக் கொள்ளும்.

இன்றைக்கு இருக்கக்கூடிய பெரும்பாலானோர் சொல்கிற உடல் நலக் குறைபாடுகளில் இதுவும் ஒன்று. சோர்வாக இருப்பது, கொஞ்ச நேரம் வேல பார்த்தாலே சீக்கிரம் டயர்ட் ஆகிடறேன் என்பது தான். நாட்பட்ட நோய் அல்லது சில நோய்களின் அறிகுறியாகக்கூட இந்த சோர்வு பார்கக்ப்படுகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும் நீங்கள் அன்றாடம் செய்கிற ஒரு விஷயம் மிகச் சாதரணமாக நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் அது உங்களது எனர்ஜியை கடுமையாக செலவழிக்க வைக்கிறது என்பது தெரியுமா?

Reason Why You Feel Tired Every Day

அப்படி தேவையின்றி உங்களது எனர்ஜி செலவாவதால் அத்தியாவசியமாக செய்யப்படுகிற வேலைக்கு எனர்ஜி போதாமல் பெரும் அவஸ்தைக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. அவற்றை எல்லாம் நீங்கள் குறைத்துக் கொண்டால் சோர்வினை ஓரளவிற்கு நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

இன்றைக்கு பெரும்பாலானோரின் கனவு கட்டுடல். உடல் எடையை குறைத்து ஜிம் பாடியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக என்னென்னவோ மெனக்கெடுகிறார்கள். சிலர் நேரங்காலம் எல்லாம் இல்லாமல் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்கள்.

அளவுக்கு மீறி ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி செய்தால் உங்களது எனர்ஜி அதீதமாக செலவாகிடும்.

உண்மை :

உண்மை :

கடினமாக உடல் உழைப்பு செய்தால் மட்டுமே கொழுப்பு கரையும் என்பதெல்லாம் இல்லை மாறாக.... நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலே உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

அதோடு மூச்சுப்பயிற்சி தியானம் ஆகியவையும் இதற்கு நல்ல விதமாக கை கொடுக்கிறது.

தொழில் நுட்பங்கள் :

தொழில் நுட்பங்கள் :

இன்றைய உலகம் தொழில்நுட்பங்களால் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆம், குழந்தைகள் முதல் எல்லாருமே செல்போனுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். செல்போன் மட்டுமல்லாமல் டிவி, லேப்டாப்,ஐபேட் என எல்க்ட்ரானிக் பொருட்களுடன் மிகவும் அன்னியோன்னியமாகவே இருக்கிறார்கள்.

ஒரேயிடத்தில் உட்கார்ந்து அமைதியாக கவனிக்கிறோம் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் இவை உங்களது எனர்ஜியை அதிகப்படியாக விழுங்கிடும்.

தூக்கம் :

தூக்கம் :

அதிலிருந்து வெளியாகக்கூடிய அதீத வெளிச்சம் மற்றும் கதீர் வீச்சு உங்களை அதிகமாக பாதிக்கிறது அதோடு, உங்களது தூக்கத்தினையும் கெடுக்கிறது. இரவில் அதிக நேரம் விழுத்திருப்பேன், இரவில் தூக்கமே வரமாட்டேன் என்கிறது என்று நாம் புலம்புவதற்கு எல்லாம் காரணம் பகல் நேரத்தில் தொடர்ந்து மிக அதிகமாக செல்போன் மற்றும் கதீர்வீச்சு அதிகம் கொண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தான்.

அதோடு இவற்றை நீங்கள் செய்யும் போது உங்களது எனர்ஜியும் அதிகப்படியாக குறைகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஒழுங்கு :

ஒழுங்கு :

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குத்தன்மை இருக்க வேண்டும் என்று நினைப்பது, அதனால் செய்த விஷயத்தையே திரும்ப திரும்ப செய்வது ஆகியவையும் ஒரு வகையில் உங்களது எனர்ஜியை காலி செய்யக்கூடிய விஷயமாக இருக்கிறது.

சிலருக்கு இது மன ரீதியாகவே பாதிப்பாக இருந்திடும். இந்த மனநிலை எப்போதும் உங்களை பதட்டத்துடனே வைத்திருக்கும் அதோடு இது சரிதானா? நாம் சரியாகச் செய்கிறோமா என்ற சந்தேக கண்ணோட்டத்துடனே இருப்பதால் ஒரு வித கவலை உங்கள் மனங்களில் ஆட்கொண்டிருக்கும்.

உணவு :

உணவு :

பெரும்பாலானோர் செய்கிற தவறு இது. டயர்டாக இருக்கிறது என்று சொல்லி எதாவது ஒரு உணவை சாப்பிட்டுக் கொண்டேயிருப்பார்கள். சில நிமிடங்களுக்கு ஒரு முறை எதாவது உணவை எடுத்துக் கொண்டு உடலை கெடுத்துக் கொள்வார்கள்.

டயர்டாக இருக்கிறது என்றாலே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை மெதுவாக ஒரு வாக் சென்று விட்டு வரலாம். நீண்ட நேரமாக ஒரேயிடத்தில் உட்கார்ந்திருந்தால் அந்த இடத்தை மாற்றி சற்று வெளிக்காற்றை சுவாசித்து விட்டு வரலாம் . அதைவிடுத்து உடனேயே உணவு அல்லது பானங்களை எடுத்துக் கொள்வது தவறான பழக்கமாகும்.

செரிமானம் :

செரிமானம் :

அப்படி நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளும் போது, நீங்கள் சாப்பிட்ட உணவினை செரிமானம் செய்ய அதிக எனர்ஜி தேவைப்படும், ஏற்கனவே உங்களுக்கு சோர்வாக இருப்பதனால் தான் உணவு எடுத்துக் கொள்கிறீர்கள்.

இப்போது இருக்கிற எனர்ஜியும் உணவை செரிமானம் ஆக்க சென்று விட்டால் உங்களது நிலையை சற்று யோசித்து பாருங்கள்.

கவலை :

கவலை :

எப்போதும் எதையாவது நினைத்துக் கொண்டு தீவிரமாக யோசிப்பது, வீணாக கற்பனை செய்து அது ஒரு வேலை நடக்கவில்லை என்றால், அல்லது நடந்து விட்டால் அதற்கடுத்து நான் என்ன செய்வேன், எப்படி செயலாற்றுவேன் என்கிற யோசனைகள் எனர்ஜியை கடுமையாக திண்பவை. அதைத் தாண்டி இவை உடல் நல ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை கொண்டு வருகிறது.

இது மனச்சிதைவுவை உண்டாக்கி பல்வேறு சிக்கல்களை உண்டாக்கிடும்.

எமோஷனல் :

எமோஷனல் :

எந்த ஒரு விஷயத்தையும் எமோஷனலாக அணுகுவது. அதே போல உடனே ரியாக்ட் செய்வது ஆகியவையும் உங்களது எனர்ஜியை குறைக்கும். ஒரு பிரச்சனையென்றால் அதனை சற்று தள்ளி வைத்து நிதானமாக யோசித்து முடிவெடுப்பதற்கும், அதனை கேட்டவுடனேயே டென்ஷனாகி படபடவென்று எமோஷனலாக பேசுவதற்கும் வித்யாசங்கள் இருக்கத்தானே செய்கிறது.

காபி :

காபி :

இதனை பல இடங்களில் படித்திருப்பீர்கள், பலரும் சொல்லியிருப்பார்கள். சுறுசுறுப்பிற்காக, தூக்கம் கலைய என்று நீங்கள் தொடர்ந்து காபி குடிப்பீர்களேயானால் அது உங்களது எனர்ஜியை கடுமையாக குறைக்கும்.

அதாவது நம் உடலில் அதிகப்படியாக கேஃபைன் சேர்ந்தால் இந்த பிரச்சனை தொடரும்.

விட்டமின் டி :

விட்டமின் டி :

எல்லாரும் ஒரேயிடத்தில் ஏசி அறையில் உட்கார்ந்து பணியாற்றுவதைத் தான் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் அவை உடல் நலத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் யாருமே உணர்வதில்லை.

உணவுகள் மூலமாக கிடைக்கப்பெறும் சத்துக்களை உடலில் சேருவதற்கு விட்டமின் டி அவசியமான ஒன்றாகும். அவை போதுமான அளவு இல்லையென்றாலும் சுறுசுறுப்பு சீர்குலையும்.

பயணம் :

பயணம் :

ஒரே மாதிரியான வேலை, தொடர்ந்து ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பது. ஒன்றையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது ஆகியவையும் நம் மனதை சோர்வாக்கும் அதாவது எனர்ஜியை குறைக்கும்.

அதற்காகத்தா படிக்கும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சின்னதாக ஒரு வாக் சென்றுவிட்டு வரச் சொல்லி பரிந்துரைக்கிறார்கள்.

இனிப்பு :

இனிப்பு :

உணவுப் பொருட்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சேர்ந்தால் சில நேரம் அஜீரணத்தையும், சில நேரம் சோர்வையும் கொடுத்திடும். நம் உடலில் அதிகப்படியான சர்க்கரை சேர்ந்தாலும் எனர்ஜி அதிகமாக செலவாகிடும்.

ஓய்வு :

ஓய்வு :

இரவில் நீங்கள் ஆரோக்கியமான நல்ல வேலைகளை செய்தாலும் தூங்க வேண்டிய நேரத்தில் நீங்கள் முழிப்புடன் இருப்பதினால் உங்களது எனர்ஜி அதிகமாக செலவாகும். பகலில் சோர்வாக உற்சாகம் குறைந்து காணப்படுவதற்கு முதன்மை காரணம் உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்கவில்லை என்பது தான்.

மூளைக்கு சரியான ஓய்வு தேவை, போதுமான அளவு ஓய்வு கொடுத்தால் மட்டுமே அவை சுறுசுறுப்பாக இயங்கும். மூளைக்கு ஓய்வு என்பது ஏழு மணி நேர தூக்கம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reason Why You Feel Tired Every Day

Reason Why You Feel Tired Every Day
Desktop Bottom Promotion