ஐம்பதை நெருங்குகிறீர்களா? இதைக் கொஞ்சம் படிங்க..

By Gnaana
Subscribe to Boldsky

வயது என்பது வெறும் எண் மட்டுமே, அதனால், என் வாழ்க்கை முறை மாறப்போவதில்லை என்று தன்னம்பிக்கை கொண்டவர்கள் கூறினாலும், வயதாவதால், நாம் சில விசயங்களை, இளவயதுபோல செய்யமுடிவதில்லை என்பதே கசப்பான உண்மை. ஆயினும் நகரங்களில் வசிக்கும் பெண்களைவிட, கிராமங்களில் வசிக்கும் பெண்கள், நடுத்தர வயதுகளில் மிகவும் வயதானதுபோன்ற கோலத்தில் இருப்பார்கள். இனி நமக்கு என்ன இருக்கிறது, பிள்ளைகள் கல்யாணம் முடிந்து, பேரப்பிள்ளைகள் வந்துவிட்டார்கள், காடு வாவா என்கிறது என தத்துவம் பேசி, ஏகாந்த மனநிலையில் இருப்பதும், சமூக அமைப்பும் காரணமாகும்.

உண்மையில் ஐம்பது வயது ஆகிவிட்டால், எல்லாம் முடிந்துவிட்டதா? அதற்குப்பின் வாழ்க்கை இல்லையா? நிச்சயம் வாழ்க்கை இருக்கிறது. சொல்லப்போனால், இதுவரை அடைந்த அனுபவங்கள், இளைய தலைமுறைகளுக்கு பயன்படும் விதத்தில் அவர்களால் வாழ முடியும். நல்ல உணவுபழக்கத்தை கடைபிடித்து ஆரோக்கியமாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ முடியும்.

health tips

முன்னர், ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே, மெனோபாஸ் எனும் மாதவிலக்கு சுழற்சி முழுமையாகத் தடைபடும். தற்காலத்தில் நாற்பது வயதுகடந்தாலே, மெனோபாஸ் பருவம் வந்து, பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற காலகட்டத்தைக் கடந்து,பெண்கள், வலுவான உடலுடனும், வளமான மனமுடனும் சமூகத்தில், சிறப்பாக வாழ்வது எப்படி?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயது முதிர்ச்சி

வயது முதிர்ச்சி

பெண்களுக்கு வயதாவதை உணர்வது, அவர்களின் தலைமுடி நரைப்பதும், கண்பார்வைக் குறைபாடுமே, முப்பது வயதில் இருந்ததுபோன்ற உடல்நிலை இப்போது இருக்காது, அதேபோன்ற உடல்நிலையை அடைய, சமச்சீரான உணவுகளை, உடற்பயிற்சிகளை, சில பழக்கங்களை மேற்கொள்ளவேண்டும். முதலில் உணவுமுறைகளை பார்க்கலாம்.

2சமச்சீர் உணவுகள்.

2சமச்சீர் உணவுகள்.

ஐம்பதைக் கடந்த வாழ்க்கை என்பது வரமாகவும், உடல் வியாதிகள் இன்றி நலமாகவும் இருக்க, சில தனிப்பட்ட ஊட்டச்சத்துமிக்க உணவுகளை அவசியம் சாப்பிடவேண்டும். அவை, உடல் ஆற்றலை சீராக்கி, வியாதிகள் அணுகாமல் உடலைக் காப்பதுடன், மனதையும் புத்துணர்வாக்கும்.

3கால்சியம் சத்துணவு.

3கால்சியம் சத்துணவு.

உடலில் தசைகள், இதய இரத்தநாளங்கள் இவற்றின் இயக்கத்திற்கு, கால்சியம் முக்கியமானது, உடலில் கால்சியம் குறையும்போது, எலும்புகளிலுள்ள கால்சியத்தை உடல் நாடும்போது, கைகால் உடலில் தளர்ச்சி மற்றும் வலி ஏற்படும். இதைத் தவிர்க்க, உடலில் கால்சியத்தை சீராக பராமரிக்க, கால்சியம் நிறைந்த பசலைக்கீரை, பிரக்கோலி, பாதாம் போன்ற பருப்புகளை உணவில் சேர்க்கவேண்டும். பால், தயிர் போன்றவை, கால்சிய இருப்பை உறுதியாக்கும்.

வைட்டமின் D உணவு.

வைட்டமின் D உணவு.

வயதாவதால் ஏற்படும் வியாதிகளுக்கு வைட்டமின் D குறைபாடு காரணமாகிறது, இதய குறைபாடு, புற்றுநோய் மற்றும் வயிறு தொடர்பான பாதிப்புகளுக்கு, வைட்டமின் D, தீர்வளிக்கும். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது, வைட்டமின் D. சீஸ் எனும் பாலாடைக்கட்டி, சோயா பானம், ஆரஞ்சு பழச்சாறு, சாலமன் மற்றும் துனா வகை மீன்களில் இந்தச்சத்து அதிகமுள்ளது. வைட்டமின் D சத்துக்களை அடைய எளிய வழி காலை வேளைகளில் சூரிய ஒளி மேனியில் படும்படி சற்றுநேரம் இருந்தாலே, தேவைப்படும் வைட்டமின் D சத்து, உடலில் சேர்ந்துவிடும்.

வைட்டமின் B12 சத்துணவு.

வைட்டமின் B12 சத்துணவு.

கொபாலமின் எனும் வைட்டமின் B12, உடலில் வளர்சிதைமாற்றம் சீராக நடைபெறவும், உடல் இயக்க மூளை செயல்பாடுகள் மற்றும் புதிய செல்கள் உருவாக்கத்தில், முக்கியமானது. கம்பு, சோயா உள்ளிட்ட தானியங்கள், சீஸ், பால், முட்டை மற்றும் மீன் உணவுகளை சாப்பிட, வைட்டமின் B12 சத்து கிடைக்கும்.

மக்னீசியம் உணவுகள்.

மக்னீசியம் உணவுகள்.

உடலில் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல், இரத்த அழுத்த பாதிப்புகளைத் தடுக்கும் உணவாக, தசை இதய இயக்கங்களை வலுவாக்கும் சத்தாக, மக்னீசியம் விளங்குகிறது. இது குறையும்போது, இதய பாதிப்புகள், இரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்புகள் அதிகரிக்கும். கீரைகள், பீன்ஸ், சோயா, பாதாம், முந்திரி, நிலக்கடலை, எள் விதைகள் போன்றவற்றில் மக்னீசியம் நிறைந்துள்ளன, ஆயினும் பெண்கள், தேவைக்கதிகமாக மக்னீசிய உணவுகளை சாப்பிடக்கூடாது.

பொட்டாசியம் உணவுகள்.

பொட்டாசியம் உணவுகள்.

மக்னீசியத்தைப்போல, பொட்டாசிய உணவுகளையும் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பெண்களின் பக்கவாதம் போன்ற வாத பாதிப்புகளைத் தவிர்ப்பதில், பொட்டாசியம் உறுதுணையாகிறது. துவரம்பருப்பு, பீன்ஸ், வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம் இவற்றில் பொட்டாசியம் உள்ளது.

ஒமேகா 3 கொழுப்பு

ஒமேகா 3 கொழுப்பு

உடலின் செயல்பாட்டுக்கும், மூளையின் இயக்கத்துக்கும், எலும்புகளின் வலுவிற்கும், ஒமேகா 3 கொழுப்பு ஒமேகா 3 கொழுப்பு உடலின் செயல்பாட்டுக்கும், மூளையின் இயக்கத்துக்கும், எலும்புகளின் வலுவிற்கும், ஒமேகா 3 கொழுப்புச்சத்து காரணமாகிறது. கீரைகள், ஆளிவிதைகள், சோயா விதைகள், பாதாம் மற்றும் மீன்களில், இந்தச் சத்து மிகுந்துள்ளது.

புரோ பயாடிக் உணவுகள்.

புரோ பயாடிக் உணவுகள்.

ஐம்பதை நெருங்கும் பெண்களுக்கு சிறந்த செரிமானத்துக்கும் குடல் வளத்துக்கும், புரோபயாடிக் உணவுகள் இன்றியமையாதவை. தயிர், கெஃபிர், சோயா போன்றவை, சில புரோ பயாடிக் உணவுகள். மேலே குறிப்பிட்டவை, ஐம்பதைக் கடக்கும் பெண்கள், உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சத்துக்களாகும். இந்த காலகட்டத்தில், உடலின் வளர்சிதைமாற்றம், தசை மற்றும் எலும்புகளின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும். மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்பட ஆரம்பிக்கும். இவற்றை, மேற்கண்ட உணவு வகைகள் சரிசெய்து, உடலை ஆரோக்கியமாக்கி, மனதை வலுவாக்கும். இத்துடன் மேலும் சில பழக்கங்கள் உடல்நலனைக் காக்கும்.

உடலைக் காக்கும் காலை உணவு.

உடலைக் காக்கும் காலை உணவு.

காலையில் சாப்பிடும் உணவு, உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, உடல் வளர்ச்சியை வலுவாக்கும். இரத்த அழுத்த பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.

மூச்சுப் பயிற்சி.

மூச்சுப் பயிற்சி.

மன அழுத்தம், படபடப்பு போன்ற பாதிப்புகளைத் தவிர்க்க, மூச்சை நன்கு சுவாசித்து, சற்றுநேரம் கழித்து வெளியேற்ற, உடலின் பல்வேறு பாதிப்புகள் விலகிவிடும்.

டிரக்கிங்

டிரக்கிங்

சோர்ந்த மனதைத் தேற்றி, உற்சாகத்தை ஊட்டும் ஆற்றல் பயணத்திற்கு உண்டு, இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்கள், கடற்கரை போன்ற புதிய இடங்களுக்கு சென்றுவருதல், புதிய மொழி, நீச்சல், இசைக்கருவிகள், தற்காப்புக்கலை போன்ற புதுப்புது விசயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், உடலும் மனமும் புத்துணர்வு பெறும். சக தோழிகளுடன் மலையேற்றம் செல்லலாம், கடற்கரைகளில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம்.

வாய் விட்டு சிரித்தல்

வாய் விட்டு சிரித்தல்

மனம் விட்டு சிரிக்கலாம், ஆளில்லாத இடங்களில் அல்லது வீட்டு அறைகளில் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம், கண்களில் நீர் வழியும் அளவுக்கு சிரிப்பதால், உடலும் மனமும் புத்துணர்வடையும், வியாதிகள் ஓடிவிடும். தோழிகள் அல்லது துணையுடன், மால்களில் ஷாப்பிங் செய்யலாம், இதுவும், மனதை உற்சாகப்படுத்தும் ஒன்றாகும். பர்ஸ் கரையுமே என்றால், விண்டோ ஷாப்பிங் செய்யலாம்.

குறுகிய இலக்கு

குறுகிய இலக்கு

குறுகிய காலத்தில் அடையக்கூடிய ஒரு இலக்கை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், வாழ்வை ஒவ்வொரு வினாடியும் அனுபவித்து, இலக்கை அடையும் சிந்தனையுடன் வாழ முடியும். இதுவே, மனதுக்கு புது உற்சாகத்தையும் உடலுக்கு தெம்பையும் அளிக்கும். ஐம்பதைக் கடந்தவர்கள், கண், இரத்தம் போன்ற பொதுவான உடற்பரிசோதனைகளை மேற்கொண்டு, தங்கள் உடல்நலனை உறுதிசெய்து கொள்ளலாம். ஐம்பது என்பது பயப்படும் வயதல்ல, அது நமது வாழ்வின் சிறந்த அனுபவம்!உலகில் ஃபிரெஞ்சு மக்களை, மிகவும் ரொமான்டிக்கானவர்கள் என்பார்கள். அதற்குக் காரணம் அவர்கள், வயதாவதால், நம் வாழ்வு அவ்வளவுதான் என்ற தாழ்வு மனப்பான்மையில் உழலாமல், வயது என்பது, அவர்களின் அனுபவத்தின் அளவு என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டு, எண்பது தொண்ணூறு வயதுகளில்கூட, காதலில் ஈடுபடுவதும், அவர்களின் நீடித்த உற்சாகமான வாழ்க்கைக்கு, சான்றாக விளங்குகிறது. மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதற்கும், உடல் வயதாவதற்கும் சம்பந்தம் இல்லை, பெண்கள் இனிதான் புதுவாழ்க்கை ஆரம்பம், எனும் எண்ணத்தைக் கொண்டு, மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டால், உடல் தானாகவே, இளமையாகும்! மனம் இலகுவாகி, காரியங்களில் அனுபவத்தெளிவு ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    nutrients tips for 50 years women

    As a woman approaches 50 years of age, she will undoubtedly start to experience some changes in her body
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more