இந்த பழங்களையும்ம், காய்கறிகளையும் தெரியாமல் கூட இரவு நேரத்தில் சாப்பிட்டு விடாதீர்கள்

பகல் நேரத்தில் நீங்கள் சாப்பிடும் சில காய்கறிகளும், பழங்களும் இரவு நேரத்தில் சாப்பிடும்போது உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

நமது ஆரோக்கியமான வாழ்விற்கு இரவு உணவு என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இரவு உணவுதான் நமக்கு அடுத்தநாளை வெற்றிகரமாக தொடங்குவதற்கு தேவையான ஆற்றலை வழங்கக்கூடியது. அப்படி இருக்கையில் இரவு உணவில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் உங்கள் உடலானது பகலில் இருப்பது போல இரவில் இருக்காது.

list of vegetables and fruits should avoid at night

பகலில் நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் இரவு நேரத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் பகல் நேரத்தில் நீங்கள் சாப்பிடும் சில காய்கறிகளும், பழங்களும் இரவு நேரத்தில் சாப்பிடும்போது உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பதிவில் இரவு நேரத்தில் நீங்கள் சாப்பிட கூடாத பழங்கள் மற்றும் காய்கறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீட்ரூட்

பீட்ரூட்

பொதுவகாவே பீட்ரூட் என்பது அதிக சத்துக்கள் நிறைந்த காகம். ஆனால் அதை இரவு நேரத்தில் சாப்பிடுவது என்பது நல்ல தேர்வாக இருக்காது. ஏனெனில் இரவு நேரத்தில் பீட்ரூட் சாப்பிடுவது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கக்கூடும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

பொதுவாகவே இரவு நேரங்களில் சிட்ரிக் அமிலங்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது உங்கள் குடல் இயக்கங்களுக்கு நல்லது. குறிப்பாக பழத்தை விட ஆரஞ்சு ஜூஸில் அதிக கலோரிகள் இருப்பதால் அதனை இரவி நேரத்தில் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

மாம்பழம்

மாம்பழம்

மாம்பழம் அதிக ஊட்டச்சத்துக்களும், புரோட்டின்களும் நிறைந்த ஒரு பழமாகும். ஆனால் அதனை இரவு நேரத்தில் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் செரிமான மண்டலத்தை நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கும். இதனால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

இது அனைவரும் விரும்பும் ஒரு காய்கறி ஆகும். பெரும்பாலான நேரம் நாம் இதனை இரவு நேரத்தில் சாப்பிட நேருகிறது. அப்படி இருக்கும்போது இது உங்கள் ஆரோக்கியத்தில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அதிர்ச்சிகரமான ஒன்று. இரவு நேரத்தில் உருளைக்கிழங்கு சாப்பிடுவது செரிமானத்தை பாதிப்பதுடன் வயிற்றுக்கோளாறு, வாந்தி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

திராட்சை

திராட்சை

பொதுவாகவே பழங்களை எப்போது சாப்பிட்டாலும் அது நன்மையை மட்டும்தான் ஏற்படுத்தும் என்பது நம்மிடையே வேரூன்றி போன ஒரு நம்பிக்கையாகும். ஆனால் உண்மையில் சில பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவது சில பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்தத் வகையில் இரவி நேரத்தில் திராட்சை சாப்பிடுவது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இருமடங்காக உயர்த்தும்.

முந்திரி

முந்திரி

சுவையான முந்திரி அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஆனால் இதன் சுவை எவ்வளவு அதிகமோ அதே அளவு இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம். பொதுவாக பகல் நேரங்களிலேயே முந்திரியை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள வேதிப்பொருட்கள் தலைவலி மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். இதனை இரவு நேரத்தில் சாப்பிடும்போது இதன் பாதிப்புகள் மேலும் அதிகமாக இருக்கும். ஒரு கப் முந்திரியில் கிட்டத்தட்ட 500 கலோரிகள் இருக்கும். எனவே எடையை குறைக்க விரும்புபவர்களும் இதனை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

பட்டாணி

பட்டாணி

அதிக ஸ்டார்ச் மற்றும் புரோட்டின்கள் நிறைந்த பட்டாணி பல நன்மைகளை வழங்கும். ஆனால் இதை இரவு நேரத்தில் சாப்பிடுவது செரிமான மண்டலம் மற்றும் குடல் இயக்கங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தேங்காய்

தேங்காய்

நமது உணவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் தேங்காயானது நமது இரத்தில் உள்ள கொழுப்பின் அளவை உடனடியாக உயர்த்தக்கூடியது. குறிப்பாக கொழுப்பு பிரச்சினைகள் உள்ளவர்கள் இரவு நேரங்களில் ததேங்காயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

கத்தரிக்காய்

கத்தரிக்காய்

ஆரோக்கிய உணவுகளுள் ஒன்றான கத்தரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் அதனை அதிகளவில் சேர்த்துக்கொண்டாலோ அல்லது இரவி நேரங்களில் சாப்பிட்டாலோ அது உங்கள் கலோரிகளின் அளவை அதிகரிப்பதுடன் உடலில் உள்ள சோடியத்தின் அளவையும் அதிகரிக்கும். இதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, November 20, 2018, 18:10 [IST]
Desktop Bottom Promotion